பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

கசை

ஒழுகுதல் ; (of blood, tears, sweat, etc.,) ooze out, leak. 'புது மண்பானை யிலிருந்து தண்ணீர் கசிகிறது.

கசை பெ. (n.) முற்காலத்தில் தண்டனை பெறும் ஆட்களை அடிப்பதற்குப் பயன்படுத்திய தோலால் அல்லது கயிற்றால் பின்னப்பட்ட நீண்ட சவுக்கு; lashing whip.

கசையடி பெ. (n.) கசையைக் கொண்டு அடித்துத் தரப்படும் தண்டனை; lash. கஞ்சத்தனம் பெ. (n.) தேவையான செலவைக் கூடத் தவிர்த்துப் பணத்தை மிச்சம் பிடிக்க நினைக்கும் குணம்; niggardliness. 'சிக்கனமாக இருக்க வேண்டியதுதான், ஆனால் கஞ்சத்தனமாக இருக்க வேண்டுமா?, கஞ்சி பெ. (n.) I. சோறு வெந்த பிறகு வடித்து எடுத்த, குழகுழப்புத் தன்மை உடைய நீர்; sticky, starchy water drained from cooked rice. 2. பருத்தித் துணிகள் மொடமொடப்பாக இருக்க அவற்றைத் தோய்க்கும்போது போடும் பசைத் தன்மை யுடைய

கரைசல்; starch (used for making clothes and sheets).

கஞ்சி ஊற்றுதல் வி. (v.) குடும்பத்துக்கு உணவு, உடை போன்றவை தந்து காப்பாற்றுதல்; feed. 'இந்தக் குடும்பத்துக்கே என் மருமகன்தான் கஞ்சி ஊற்றுகிறான்'.

கஞ்சிகாய்ச்சுதல் வி. (v.) பலர் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு ஒருவரை அளவுக்கு அதிகமாகக்கிண்டல் செய்தல்; make fun of, tease excessively. 'அந்தச் சின்னப் பையனை ஏன் இப்படிக் கஞ்சிகாய்ச்சுகிறீர்கள்.

கட்சிக்காரர் பெ. (n.) 1. தன் வாழ்க்கை நடத்தும் பொறுப்பை வழக்கறிஞரிடம் ஒப்படைத்தவர்; client (of a lawyer).

2. ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்; a member of a (political) party. கட்சிகட்டுதல் வி. (v.) சிக்கல், உறழ்வு, ஏரணம் போன்றவற்றில் குறிப்பிட்ட போக்குக்கு உதவியாகப் பிறரை ஒன்று சேர்த்தல்; mobilze. 'அவன் எனக்கு எதிராகக் கட்சி கட்டுகிறான் என்பது எனக்குத் தெரியும்'.

கட்சிதாவுதல் வி (v) சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறுதல்; switch over (to some opposition party after setting elected); cross the floor.

கட்சியாடுதல் வி. (v.) பல கட்சிகளாகப்

பிரிந்து உறழாடுதல்; argue in a partisan

manner.

கட்செவி பெ. (n.) இணையத்தின் உதவியுடன் திறன்பேசியின் வழியே ஒளிப்படம், காணொலி, கருத் துரைகள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்ள உதவும் செய்திப் பரிமாற்றச் செயலி; this is the app to share news, photos and vedios to other.

கட்டக் கடைசியாக வி.அ. (n.) மிகவும்

கடைசியில்; as the last of all, lastly. நேரத்துடன் புறப்பட்டும் நான்தான் கட்டக் கடைசியாகச் சடங்குக்குப் போய்ச் சேர்ந்தேன்'.

கட்டணம் பெ. (n.) ஒன்றைப் பயன் படுத்திக் கொள்வதற்கு அல்லது ஒரு செயலைச் செய்ய உடன்படுவதற்கு அல்லது ஊழியம் பெறுவதற்குச் செலுத்தும் தொகை; fare, charge, fee. தேர்வுக்கட்டணம்'.

கட்டம் பெ. (n.) 1. நான்கு பக்கமும்

கோடுகளால் அமையும் வடிவம்; square, chequered pattem. 'கட்டம் போட்ட சட்டை'. 2. படிப்படியான திட்டத்தில் அல்லது வளர்ச்சியில் ஒரு நிலை; stage, phase (in a plan, development, etc.,).