பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டடம்கட்டுதல் வி. (v.) செய்தித் தாள்களில் ஒரு செய்தி தனித்துத் தெரிவதற்காகக் கோடுகளால் ஆன பெட்டி போன்ற வடிவத்தை அமைத்தல்; make a box (to highlight a news).

கட்டமைப்பு பெ. (n.) I. அமைப்பு முறை; structure, construction. 'வீட்டின் கட்டமைப்பு. 2. தாள்களை ஒன்றாகச் சேர்த்துப் புத்தகம் போன்ற தொகுப் பாகக் கட்டும் முறை; binding. கட்டமைப்பு சரி இல்லாததால் புத்தகம் தாள்தாளாக வந்துவிட்டது'.

கட்டவிழ்த்துவிடுதல் வி. (v.) ஓர் அமைப்பு போராடுபவர்கள் மீது வன்முறை போன்ற அழிவு வேலை களை ஏவிவிடுதல்; let loose (repression, violence), unleash.

கட்டழகன் பெ. (n.) I. கடுமையான பயிற்சிகளால் உடலைக் கட்டுக் குலையாமல் வைத்திருப்பவன்; well built person. 2. அழகான ஆண்; handsome man. மாப்பிள்ளை நல்ல கட்டழகன்தான்'.

கட்டழகி பெ. (n.) கட்டுக்குலையாத அழகான பெண்; beautiful woman. கட்டழகு பெ.(n.) கட்டுக்குலையாத உடல் அமைப்பினால் பெற்றிருக்கும் அழகு ; shapeliness. தாய்ப்பால் கொடுப் பதால் பெண்ணின் கட்டழகு எந்த வகையிலும் குறைந்து விடாது'. கட்டளை பெ. (n.) 1. சட்டம், தெறி முறைக்கு உட்பட்டு ஒன்றைச் செய்யுமாறு அல்லது கீழ்ப்படியு மாறு பிறப்பிக்கப்படும் உத்தரவு; command, order. 2. இறைவனின் உத்தரவு (ஆணை); (god's) will, commandment. ஆண்டவனின் கட்டளை இப்படி இருக்கிறது.

கட்டாக்காலி பெ. (n.) தன்னிச்சைப்படி அலையும் கால்நடை; stray animal. கட்டாக்காலி மாடுகளைப் பிடித்து

கட்டி

137

வரும்படி சிற்றூர்த் தலைவர் சொல்லி விட்டார்.

கட்டாந்தரை பெ. (n.) I. வறண்டு இறுகிக் கெட்டியாக இருக்கும் நிலைப்பகுதி;

hard-set earth. 'இந்தக் கட்டாந் தரையில் புல்கூட முளைக்காது' 2. வீட்டில் உள்ள வெறும் தரை; (in the house) floor (not covered by carpet or rug). இப்படிக் கட்டாந்தரையில் படுத்துத் தூங்கு கிறாயே?.

கட்டாய ஓய்வு பெ. (n.) அரசுப் பணியில்

வரையறுக்கப்பட்ட அகவைக்கு முன்னரே பணியிலிருந்து கட்டாய மாக ஒருவரை ஓய்வில் அனுப்பும் நடவடிக்கை; the act of sending something in government service compulsorily into retirement, (in India) compulsory retirement.

கட்டாயக் காத்திருப்பு Gu. (n.) அரசாங்கத்தில் ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாற்றப்படும் அல்லது நீண்ட விடுமுறையிலிருந்து திரும்பும் உயர் அதிகாரி அடுத்த பதவி ஒதுக்கப்படும் வரை காத்திருக்க வேண்டிய நிலை; (interim period of) compulsory waiting (for higher officials for a charge of portfolio).

கட்டாயம் பெ. (n.) I. ஒரு சூழ்நிலையில் ஒன்றைச் செய்வதைத் தவிர்க்க முடியாத நிலை; ஒருவரின் வற்புறுத்தல்; compulsory, compulsion. 2. குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடுக்கிவைக்கப்படும் செங்கல் தொகுப்பு; stack of bricks. ஆயிரம் ஆயிரம் கல்லாகக் கட்டாயம் போடு'

கட்டாரி பெ. (n.) பிடியுடைய குத்துவாள்; cross hilted dagger.

கட்டி பெ.(n.) I.உடம்பில் தோன்றி வலியை உண்டாக்கும் கெட்டியான புடைப்பு அல்லது எழுச்சி; hard boilor swelling. 'கருப்பப்பையில் கட்டி'.