பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

கட்டுறுதி

கட்டுமானப் பணி சென்ற மாதம் துவங்கியது'.2. கட்டுப்பாடு; restriction, control, prohibition. 'ஊர்க் கட்டுமானத்தை யார் மீற முடியும்'. கட்டுறுதி பெ. (n.) பெரும்பாலும் உடல் அமைப்பைக் கட்டமைப்பும் வலிமையும் உறுதியும் உடைய தன்மையைக் குறிப்பிடுவது; (of body or structure) strongly built. கட்டுறுதி வாய்ந்த உடல்.

கட்டெறும்பு பெ. (n.) சாதாரண எறும்பை விடச் சற்றுப் பெரியதும் கடித்தால் கடும் வலி ஏற்படுத்தும் கறுப்பு நிறத்தில் இருக்கும் எறும்பு; a kind of black ant (whose sting is painful). கட்டை பெ. (n.) 1. அளவாக வெட்டப்

பட்ட மரத்துண்டு; block of wood split into pieces (such as firewood), log. சந்தனக் கட்டை'. 2. துமிக்கியின் கைப் பிடியை ஒட்டிப் பின்புறம் அமைக்கப்பட்டிருக்கும் பட்டை யான நீண்ட மரத்துண்டு; butt (of a gun). 3. ஒருவரின் உடல், ஓர் ஆள்; (one's) body; a person. 'அவன் எதற்கும் துணிந்த கட்டை'. கட்டைக்குரல் பெ. (n.) அடித்தொண்டை யிலிருந்து எழும் கனத்த குரல்; deep voice. 'கட்டைக்குரல் என்பதே தெரியாதபடி பாடினார்.

கட்டைப்பஞ்சாயத்து பெ. (n.) சிக்கல்களை களைய அடாவடித்தனத்துடன், சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் ஒரு குழுவாகச் சிலர் சேர்த்து கொண்டு தீர்த்துவைக்கும் ஏற்பாடு; settlement of dispute by a group of persons using unfair means. கட்டைப்பேனா பெ. (n) மையில் தொட்டு

எழுதும் வகையில் மரப்பிடியின் முனையில் மாழையால் ஆன முள் பொருத்தப்பட்ட எழுதுகோல்; an

instrument consisting of a wooden holder with a metal nib fixed at one end used for

writing with ink (not in vogue now). கட்டை பிரம்மச்சாரி பெ. (n.) திருமணம் செய்து கொள்வதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருப்பவர்; confirmed bachelor.

கட்டையை நீட்டுதல் வி. (v.) I. அலுப் புடன் படுத்து ஓய்வெடுத்தல்; (lie down in order to) take rest. 'இந்த வீட்டில் ஐந்து நிமிஷம் கட்டையை நீட்ட முடிகிறதா?.2. வெறுப்பு டனோ மதிப்பு குறைவான முறையிலோ இறத்தல்; die (flip pant reference to the death of a person). நான் கட்டையை நீட்டிவிட்டால் இந்தக் குடும்பம் என்னவாகும் என்று எண்ணினீர்களா?. கட்டை வண்டி பெ. (n.) கட்டையின் இரு பக்கங்களிலும் பெரிய சக்கரங்களை உடைய மூடும் அமைப்பு இல்லாத, பாரம் ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டி; abullock cart without cover used mainly for carrying loads.

கடகடத்தல் வி. (v.) கட்டுத் தளர்ந்து ஆட்டம் காணுதல்; become loose, become rickety. 'மாட்டுவண்டி கடகடக்க ஆரம்பித்து விட்டது'. கடகடஎன்று வி.அ. (n.) 1. தடங்கல் இல்லாமல், விரைவாக; without break, interruption or pause, quicky. 'நீபாடங் களைக் கடகடவென்று ஒப்பித்து விட்டால்விளையாடப் போக லாம்'.

2.ஏதோ ஒரு பொருள் உருள்வதைப் போன்று; heartily and loudly. அவர் கடகடவென்று சிரித்தார். கடத்துதல் வி. (v.) I. ஒருவரை விருப் பத்துக்கு மாறாகக் கொண்டுபோதல் அல்லது தூக்கிச் செல்லுதல்; kidnap (a person). 2. அரசால் தடை செய்யப் பட்டபொருளை இசைவு இல்லாமல் எடுத்துச் செல்லுதல்; smuggle (goods).