பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

கடித்துக் குதறுதல்

கடித்துக் குதறுதல் வி. (v.) ஒருவரை மிகுந்த கோபத்துடன் கடுமையாகத் திட்டுதல்; scold severely.

கடிவாளம் பெ. (n.) குதிரையைக் கட்டுப் படுத்தும் வகையில் வாயிலும் தலை யிலும் பொருத்தப்படும், நீண்ட வாளுடன் கூடிய கருவி; (horse's)

bridle with bit and reins.. கடிவாளம் போடுதல் வி. (v.) ஒருவருக்குக் கட்டுப்பாடு இடுதல்; restrain. ஊதாரியாய்த் திரிபவனுக்குக் கல்யாணம் என்ற பெயரில் கடிவாளம் போடப்பார்க்கிறார்கள். கடுக்காய் கொடுத்தல் வி. (v.) ஒருவர் மற்றொருவரை அவர் கண் எதிரி லேயே திறமையாக ஏமாற்றித் தப்பித்தல்; give (something) the slip. 'பணத்தை வாங்கிக்கொண்டு பொரு ளைத் தராமல் நமக்குக் கடுக்காய் கொடுத்துவிட்டான்'

கடுகடுத்தல் வி. (v) ஒருவர் தன் பேச்சில் அல்லது செயலில் வாயிலாகச் சினத்தின் கடுமையை வெளிப் படுத்துதல்; scowl. 'அம்மாவின் முகம் கோபத்தில் கடுகடுத்தது'. கடுங்காப்பி பெ. (n.) பால் சேர்க்கப் படாத குளம்பி (காப்பி); coffee without milk. அவர் வழக்கமாகக் கடுங்காப்பி தான்சாப்பிடுவார். கடைதல் வி. (v.) மத்து, கோல் முதலியவற்றை ஒன்றில் வைத்து வலமாகவும் இடமாகவும் மாறி மாறிச் சுழலச் செய்தல்; chum (butter milk) drill (a wooden plank with a churnlike rod to strike fire), mash

(greens, etc. with a chuming stick). கடை பெ. (n.) I. பொருள்கள் விற்கப்

படும் இடம் அல்லது அங்காடி; shop, stall dealing in goods). 'பூக்கடை'.

கடைக்கண் பெ. (n.) 1. கண்ணின் ஓரத்திற்குக் கொண்டு வரும் கரு விழி; corner of one's eye. 2. தெய்வத்தின் அருள் பார்வை; (ofgod) benign look. கடைக்குட்டி பெ. (n.) ஒரு குடும்பத்தில் கடைசிக் குழந்தை; youngest (of the children). 'எங்கள் வீட்டில் நான்தான் கடைக்குட்டி'.

கடைக்கோடி பெ. (n.) ஓர் இடம் முடியும் முனை அல்லது கடைசிப் பகுதி; the very end of a street, etc.,). 'தெருவின் கடைக் கோடியில் உள்ள வீடு'. கடைகண்ணி பெ. (n.) கடையும் அதைப் போன்ற விற்பனையிடங்களும்; bazaar, market place. கடைச்சரக்கு பெ. (n.) நாட்டு மருந்தில் பச்சிலைகள் நீங்கலாகக் கடை யிலிருந்து வாங்கப்படும் மருந்து மற்றும் பிற பொருள்கள்; in indigenous medicine the medicinal substance than fresh others things.

கடைசி பெ. (n.) ஏதோ ஒன்றின் தொடர்ச்சியில், வரிசையில் காலத்தில் முடிவு அல்லது இறுதி; last, final, end.

வீட்டில் நான்தான்கடைசிப்பையன். கடைத்தெரு பெ. (n.) ஊரில் கடைகள்

அதிகம் உள்ள தெரு அல்லது பகுதி; bazaar market place. கடைநிலை பெ. (n.) பல நிலைகளைக் கொண்ட பணி அமைப்பில் கடைசி நிலை; last grade (in the hierarchical structure of any service). 'கடைநிலை ஊழியர்கள்.

கடைப்பிடித்தல் வி. (v.) கொள்கை, வழிமுறை, மரபு முதலியவற்றைப் பின்பற்றுதல்; follow adhere to (a principle, procedure, tradition, etc.,). கடைப்புத்தி பெ. (n.) கீழ்த்தரமான அல்லது மட்டமான அறிவு (புத்தி); undignified or filthy nature.