பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

கண்டிப்பு

நடந்திருக்கிறது'. 2. தவறாமல்; without fail, imperatively. 'தாங்கள் கண்டிப்பாக எங்கள் வீட்டுத் திருமணத்துக்கு வர வேண்டும். கண்டிப்பு பெ. (n.) I. ஒரு செயலைச் செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பதில் ஒருவர் காட்டும் உறுதி; strictness, firmness. 2 கடுமையான கட்டுப்பாடு; fim control.

கண்டுகளித்தல் வி. (v.) கலைநயம் உடையவற்றைப் பார்த்து மகிழ்தல்; enjoy me self (seeing or viewing artistically produced). கண்டுகொள்ளுதல் வி. (v.) I. இன்னது, இன்னார் என்று இனம் தெரிந்து கொள்ளுதல் அல்லது அறிந்து கொள்ளுதல்; find out, discriminate. 2. எதிர்மறை வடிவங்களில் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளுதல்; (in negative forms only) take notice of. 3. மதிப்புக்கு உரியவர்களை நேரில் சென்று பார்த்தல்; pay a formal visit to (respectable persons, higher officials, etc.,).

கண்டுபிடித்தல் வி. (v.) 1. புதிய பொருள், கொள்கை முதலியவற்றை உருவாக் குதல் அல்லது இதுவரை அறியப் படாமல் இருந்த ஒன்றை அறியச் செய்தல்; invent, discover. 2. ஒன்றைத் தேடி அறிதல்; figure out, spot. கண்டுபிடிப்பு பெ. (n.) 1.புதிதாக உருவாக்கப்பட்டது அல்லது முதல் முதலாக வெளிப்படுத்தப்பட்டது; invention, discovery. 2. ஆராய்ச்சி வழிமுறைப் போன்றவற்றால் கண்ட றியப்பட்டது; finding.

கண்டும் காணாமல் வி.அ. (n.) பொருட் படுத்தாமல் அல்லது கண்டு கொள்ளாமல்; without making much

of, taking no notice of turning a blind eye to.

கண்டெடுத்தல் வி. (v.) 1. ஒரு பொருளைத் தற்செயலாகப் பார்த்து எடுத்தல்; find (something), chance to see and pick up. 2. நாணயம், மட்பாண்டம் முதலிய பொருள்களை அகழாய்வின்போது கண்டுபிடித்தல்; find (in an archaeological excavation).

கண்ணசைவு பெ. (n.) விழியை அசைப் பதால் காட்டும் குறிப்பு; suggestion made by the movement of eyes. அவருடைய கண்ணசைவுக்காகப் பலர் காத்திருந்த காலம் உண்டு. கண்ணயர்தல் வி. (v.) அசதி, களைப்பு முதலியவற்றால் ஒருவர் தன்னை அறியாமல் தூங்கிப்போதல், தூங்கி விழுதல்; doze off.

கண்ணாமூச்சி பெ. (n.) கண்ணைப் பொத்திப் பிறர் ஒளிந்துகொள்ள நேரம் தந்து பின்னர் ஒளிந்து கொண்டவர்களைக் கண்டுபிடிக்கும் சிறுவர் விளையாட்டு; (a children's same of) hide and seek.

கண்ணால் பார்த்தல் வி. (v.) கண்ட ஒன்றை அழுத்தமாகக் கூறும்போது நேரடியாகப் பார்த்தல்; see with one's own eyes (generally to dispel doubt). அவன் பணம் வாங்கியதை என் கண்ணால் பார்த்தேன்'.

கண்ணி பெ. (n.) 1. பறவைகளைப் பிடிப்பதற்காகத் தரையில் பரப்பி யிருக்கும் கயிற்றுச் சுருக்குகள் கொண்ட அமைப்பு; snare (for trapping birds). 2. தொடரியில் ஒரு வளையம்; a ring or link (in a chain). 3. யாப்பில் ஒரே எண்ணிக்கையில் சீர்கள் கொண்ட இரண்டடி இசைப் பாட்டு வகை; a stanza of two lines with the same number of metrical feet often set to be sung. கண்ணியம் பெ. (n.) தன் மதிப்பை இழக்காமல் இருப்பது பிறருக்கு