பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

கண்பிதுங்குதல்

கண்ணேறு விழுதல்; be hamed by evil

eye.

கண்பிதுங்குதல் வி. (v.) வேலை அல்லது பொறுப்பின் சுமையால் மிகவும் துயரப்படுதல் அல்லது திணறுதல்; experience severe strain. 'வேலையை முடிக்க முடியாமல் கண் பிதுங்கு கிறது.

கண்மண் தெரியாமல் வி.அ. (n.) கட்டுப் பாடு இல்லாமல் அல்லது கட்டுப் பாடு இல்லாத; recklessly and reckless. குடித்துவிட்டுக் கண்மண் தெரி யாமல் வாகனம் ஓட்டினான். கண்மண் தெரியாத பெ.அ. (adj.) அளவு கடந்த அல்லது அளவிற்கு மீறிய; blindly and blind.

கண்மாய் பெ.(n.) பாசனத்திற்கான சிறிய ஏரி; small lake, irigation tank. கண்மூடித்தனம் பெ. (n.) 1. எதையும் ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளும் அல்லது அறிவு நிறைவாக இல்லாமல் நடந்து கொள்ளும் செயல் அல்லது மடத்தனம்; docile acceptance, blind obedience, irrationality. 2. எந்தப் பாகுபாடும் கலந்தாய்வும் இல்லாத தன்மை ; indiscretion (in action, speech, etc.,) want of discrimination.

கண்வைத்தல் வி. (v.) ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு தீங்கு அல்லது கேடுவரும் வகையில் பார்த்தல் அல்லது பொறாமை கொள்ளுதல்; give the evil

eye.

கண்றாவி பெ. (n.) 1. கண்ணுக்குச் சிறிதும் அழகு இல்லாதது அல்லது மகிழ்ச்சி தராதது அல்லது அருவருப்பு; eyesore. 2. இரக்கத்தை உண்டாக்குவது; pitiful. 3. வெறுப்பை வெளிப்படுத்தும் சொல்; a term of disapproval, terrible, horible. அட கண்றாவியே இப்படி யுமா நடக்கும்'.

கணக்கிடுதல் வி. (v.) 1. கணக்குப் பார்த்தல் அல்லது கணக்குப் போடுதல்; make an estimate, compute, calculate.2. எண்ணுதல்; count. கணக்கில் எடுத்தல் வி. (v.) கவனத்தில் கொள்ளுதல்; take into account, consider.

கணக்குத்தீர்தல் வி. (v.) ஒருவர் தனக்கு

நேர்ந்த அவமானம், தோல்வி போன்றவற்றை ஈடுகட்டும் வகையில் அதற்குச் சமமான செயலைச் செய்தல் அல்லது பழிவாங்குதல்; settle an old score; take revenge.

கணக்குப் பார்த்தல் வி. (v.) வரவு செலவில் மிகவும் கவனமாக இருத் தல்; calculate. அவன் ஒவ்வொரு காசுக்கும் கணக்குப் பார்ப் பான். கணக்குப்பிள்ளை பெ. (n.) I. பண்ணை கடை முதலிய சிறு நிறுவனங்களில் வரவு செலவு கணக்குகளைப் பதிவு செய்ய அமர்த்தப்பட்டவர்; accountant (in shops, large farms, etc.,). கணக்குப்போடுதல் வி. (v.) ஒரு செயலின் போக்கை அல்லது முடிவைக் கவன மாகக் கணித்தல்; reckon.

கணக்குவழக்கு பெ. (n.) I. குறிப்பிட்ட நாள்களுக்கு ஒரு முறை சரி பார்க்கப் படும் வரவு செலவு; accounts. 2. கொடுக்கல் வாங்கல்; dealings (in money or things). 3. பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில் அளவு எண்ணிக்கை; reckoning.

அல்லது

கணக்கெடுத்தல் வி. (v.) எத்தனை என்று எண்ணுதல் அல்லது எண்ணிக் குறித்தல்; count, take note of the number, read (the figures in a meter, gauge, etc.,). கணகணத்தல் வி (v.) காய்ச்சல் போன்ற வற்றால் உடல் சூடாக இருத்தல்; (of body) feel hot, be feverish. 'உடம்பு நெருப்பு மாதிரி கணகணக்கிறது'.