பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணப்பு பெ. (n.) 1. குளிர்காய்வதற்காக மூட்டப்படும் நெருப்பு; fire (for warming). 2. குளிர்ப் பகுதிகளில் (பிரதேசங்களில்) குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டப்பட்ட இடம்; fire place.

கணிசமாக வி.அ. (adv.) குறைவு என்று சொல்ல முடியாதவாறு குறிப்பிடத் தகுந்த அளவில்; considerably, fairly, in a pretty good way.

கணிசமான பெ.அ. (adj.) குறிப்பிடத் தகுந்த அளவிலான; considerable fair, pretty good.

கணினி பெ. (n.) கணிப்பொறி பார்க்க. கணிப்பு பெ. (n.) 1. ஒருவருக்கு நிகழப் போவதைக் குறிப்பிட்ட அடிப்படை களைக் கொண்டு முன்கூட்டியே சொல்லுவது; fore cast, prediction, claculation. 2. ஒன்றின் தன்மையைப் பற்றிய அல்லது அளவைப் பற்றிய மதிப்பீடு; evaluation, estimate, opinion, survey. 3. பிறப்பியம் குறித்தல்; the casting of a horoscope.

கணிப்பொறி பெ. (n.) பெரும் அளவில் தரவுகளைச் சேமித்து வைக்கவும், செயற்படுத்தவும் உதவும் மின்னணு கருவி; Computer.

கணிப்பொறியியல் பெ. (n.) கணிப்பொறி யின் இயக்கம், மென்பொருள் உருவாக்குதல் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் அறிவியல் துறை; Computer Science.

கணை பெ. (n.) மண்வெட்டி, கோடரி முதலியவற்றின் மரத்தால் ஆனகைப் பிடி ; wooden handle (of spade, axe, etc.,). கத்தரித்தல் வி. (v.) 1. துணி, தாள் போன்றவற்றைக் கத்தரிக்கோலால் வெட்டுதல் அல்லது துண்டாக்குதல்; cut with scissors snip . 2. பூச்சிகள் வயலில் உள்ள பயிர்களைக் கடித்து துண்டாக்குதல்; (of grasshopper, rat, etc.,) cut up. 3. ஒருவருடன் உள்ள

கதி

147

முறித்துக்

உறவை நட்பை கொள்ளுதல் அல்லது ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது பேச்சை நிறுத்திக் கொள்ளுதல்; Sever connection, etc., and break off. கத்தல் பெ. (n.) I. உரத்த குரலாலான பேச்சு; loud talk shout. 2. அலறல்; loud cry. 3. விலங்குகள், பறவைகள் எழுப்பும் உரத்த ஒலி; noise (made by animal, birds).

கத்திகபடா பெ. (n.) கத்தியும் அதைப் போன்ற பிற உதவிக் கருவிகளும்; knife and other similar weapons. கத்தி முனையில் வி.அ. (n.) கத்தியைக் காட்டி மிரட்டி; threatening at knife point.

கத்துதல் வி. (v.) 1. வலி, பயம், சினம் போன்றவற்றால் அலறுதல் அல்லது பெரும் குரல் எழுப்புதல்; scream. அவன் வலியால் கத்தினான். 2.உரத்த குரலில் பேசுதல் அல்லது திட்டுதல்; speak loudly, shout.ஏன் இப்படிக் கத்துகிறாய்? மெதுவாகப் பேசு.

கத்துக்குட்டி பெ. (n.) ஒரு வேலையில் அல்லது ஒரு துறையில் அரைகுறை யான அறிவும் பயிற்சியும் உடைய ஆள்; green hom, novice, apprentice. சங்கீதத்தில் நான்கத்துக்குட்டி தான். கதகதப்பு பெ. (n.) மிதமான வெப்பம் அல்லது சூடு; (slight) warmth. கதறுதல் வி. (v.) துக்கம், வலி போன்ற வற்றால் வாய்விட்டு அழுதல்; அழும்போது பெருங்குரல் எழுப் புதல்; wail, scream (heart breakingly). அவனை உதைத்தால்தான் பணம் கதறிக்கொண்டு வரும்'.

கதி பெ. (n.) 1. வாழ்க்கையில் ஒருவருக்கு

ஏற்படும் நிலைமை; (one's) condition