பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருக்குதல்

149

கம்பி எண்ணுதல் வி. (v.) தண்டனை பெற்றுச் சிறையில் இருத்தல்; be put behind bars, undergo imprisonment. கரகரப்பு பெ. (n.) 1. தொண்டையில் திருடிவிட்டு இப்போது கம்பி எண்ணுகிறான்.

கம்பிநீட்டுதல் வி. (v.) இடத்தை விட்டு விரைந்து அகலுதல் அல்லது நழுவுதல்; decamp. 'காவலரைப்

பார்த்ததும் அவன் கம்பி நீட்டப் பார்த்தான்.

கம்மல் பெ. (n.) 1. பெண்கள் அணியும் காதணி; ear stud worn by women. இலை வடிவில் செய்த கம்மல்'. 2. சளி, காய்ச்சல் போன்ற வற்றால் குரலின் கம்மிய ஒலி; being hoarse and faint. 'கரகரத்த கம்மல் குரல்'. 3. ஒளிக் குறைவு அல்லது மங்கல்; dimess. கம்மலான வெளிச் சத்தில் எப்படிப் படிக்கமுடியும் .4. லேசான மாநிறம்; one little less than fair.

கமகமத்தல் வி. (v) அதிகமாக மணத்தல்; be fragrant, have a strong agreeable smell. பலகாரமணம் கமகமக்கும் கடை' கமுக்கமாக வி.அ. (adv.) வெளியே தெரியாதபடி; secretively. 'அடித் தாலும் எடுத்த பணத்தைப் பற்றி வாய் திறக்க மாட்டான், கமுக்கமான ஆள்.

கமுக்கமான பெ.அ. (adj.) வெளியே தெரியாத; secretive.

கயவன் பெ. (n.) கீழ்த்தரமான அல்லது தீய குணமுடையவன்; dishonest person, rogue. 'எல்லோரையும் தூற்றித் திரியும் கயவன் இவன். கயவாளி பெ. (n.) கயவன் பார்க்க. கயிற்றில் தொங்குதல் வி. (v.) தூக்குப் போட்டுக்கொண்டு இறத்தல் அல்லது தூக்கில் தொங்குதல்; hang oneself. கயிறுதிரித்தல் வி. (v.) அரைகுறையாகத் தெரிந்த தரவல்களைக் கொண்டு பொய்யாகக் கதைவிடுதல்; spin a yam.

அரிப்பு; irritation in the throat. 2. குரலைக் குறிக்கும்போது சீரற்ற தன்மை ; (of voice) hoarseness (brought about by emotions). கரித்துக்கொட்டுதல் வி. (v.) வெறுப்பைக் காட்டும் வகையில் ஒருவரைத் திட்டிக் கொண்டே இருத்தல்; carp. ஏன் உங்கள் அண்ணனைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறீர்கள்'. கரித்துணி பெ. (n.) சூடான பாத் திரங்களை இறக்குவது போன்ற வற்றுக்குச் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் சிறிய துணி அல்லது பிடிதுணி; a piece of cloth used for handling hot vessels in the kitchen. கரிநாள் பெ. (n.) I. பொங்கல் பண்டி கைக்கு மறுநாள்; the day after the pongal festival. 2. நல்ல நிகழ்ச்சிகள் நடத்துவதற்குப் பொருத்தம் இல்லாத நாள்; nauspicious day.

கரியாக்குதல் வி. (v.) பணத்தை வீணாக்குதல்; fritter away (money). 'வியாபாரம் செய்கிறேன் என்று சொல்லிக் காசைக் கரியாக்கி விட்டான்.

கருக்கல் பெ. (n.) காலையில் வெளிச்சம் பரவும் முன் அல்லது மாலையில் வெளிச்சம் முழுவதும் போகும் முன் உள்ள அடர்த்திக் குறைவான இருட்டு; predawn or pre dusk darkness.

கருக்கலைப்பு பெ. (n.) மருத்துவரின் உதவியோடு கருவை வெளியேற்றும் செயல்; abortion.

கருக்காய் பெ. (n.) உள்ளீடாகிய மணி முழு வளர்ச்சி அடையாத நெல்; paddy in which the grain is not fully grown. கருக்குதல் வி. (v.) ஒரு பொருளைச் சூட்டில் அல்லது நெருப்பில் கருகச்