பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

கருகுமணி

செய்தல்; cause to become black (by over roasting sting), char. 'கடலையை இப்படிக் கருக்கிவிட்டாயே'. கருகுமணி பெ. (n.) பெண்கள் கழுத்தில் அணியும் கருப்பு நிறப் பாசிமணி;a string of black beads (wom closely

around the neck by women). கருணைக்கொலை பெ. (n.) இறப்பு (மரணம்) உறுதி என்ற நிலையில், தொல்லை மிகுந்து துன்பப்படு பவருக்கு மருந்து கொடுத்து அவருடைய உயிரைப் போக்கும் செயல் (இது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது); mercy killing,

euthanasia.

கருணைமனு பெ. (n.) தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டவர் அதைக் குறைக்கு மாறு ஆளுநருக்கோ குடியரசுத் தலைவருக்கோ வேண்டிக் கொள்ளும் விண்ணப்பம்; petition made to the Governor or president by a convicted person praying for remission or commutation of his or her punishment (in India) mercy petition.

கருத்தடை பெ. (n.) கரு உண்டாவதைத் தவிர்க்க மேற்கொள்ளும் (மருத்துவ வழியான) வழிமுறை; birth control contraception.

கருத்தரித்தல் வி. (v.) கரு உண்டாதல்; become pregnant, conceive. கருத்துக்கணிப்பு பெ. (n.) ஒரு செய் தியைக் குறித்து மக்களின் கருத்தை அறிய நடத்தப்படும் வாக்கெடுப்பு; opinion poll. புதிய கல்வித் திட்டத் தைப் பற்றிய கருத்துக்கணிப்பு'. கருநாக்கு பெ. (n.) 1. இயல்பாகவே சிறு கரும்புள்ளிகளை உடைய நாக்கு; tongue with black dots. 2. சொன்னது நடந்துவிடும் என்று கருதப்படும் தீய சொல் கூறுபவரின் நாக்கு; the

supposed tendency of a person's evil words to come true.

கருப்பட்டி பெ. (n.) பததீரைக் காய்ச்சிக் கட்டி வடிவில் உருவாக்கப்படும் அடர்ந்த பழுப்பு நிறமுடைய இனிப்புப்பொருள்; unrefined jaggery (made from palmyra or coconut sap). கருமுட்டை பெ. (n.) விந்தோடு சேர்ந்து கருவை உருவாக்கும் பெண்ணிடம் உள்ள உயிரணு அல்லது கருப்பை யிலிருந்து வெளிப்படும் நுண்ணிய முட்டை; ovum.

கருவண்டு பெ. (n.) தாவல் பழத்தைப் போன்ற கறுப்பு நிற வண்டு; black

beetle.

கருவளையம் பெ. (n.) அரைவட்டமாகக் கண்களுக்குக் கீழே சிலருக்கு

இயல்பான

நிறத்தை விடவும் கருப்பாகக் காணப்படும் பகுதி; dark ring (below the eyes).

கருவறுத்தல் வி. (v.) அடியோடு அழித்தல்; root out. 'காட்டிக்கொடுத் தவனின் குடும்பத்தைக் கருவறுக்கத் திட்டம் தீட்டினான்.

கருவறை பெ. (n.) கோயிலில் மூலவர்

சிலை இருக்கும் இடம்; உண்ணாழி; (in temples) sanctum sanctorum. கருவாடு பெ. (n.) உப்பைச் சேர்த்து வெயிலில் நன்றாகக் காயவைக்கப் பட்ட உலர்மீன்; salted and dried fish. கருவாப்பட்டை பெ. (n.) சமையலுக்கு உதவும் மணப்பட்டை; cinnamon (used in cooking).

கரைதல் வி. (v.) 1. சூடம் முதலிய பொருள்கள் காற்றில் ஆவியாகி ஒன்றுமில்லாமல் போதல்; evaporate. 2. உடலில் ஏற்பட்ட கட்டி, பரு முதலியவை அமுங்கி மறைந்து போதல்; subside, disappear. 3. கையில் உள்ள பணம் செலவழிதல்; be used up. 4. மனம் நெகிழ்தல் அல்லது உருகுதல்;

melt.