பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரை காணாத பெ.அ. (adj.) அளவிட்டுக் கூற முடியாத அளவுக்கு மிக அதிகமான; boundless. 'நடனத்தின் மீது அவருக்குக் கரை காணாத ஆசை.

கரைசேர்த்தல் வி (v.) I. தன் பொறுப்பில் உள்ள ஒருவரைப் பாதுகாப்பானதல்ல நிலைக்குக் கொண்டு வருதல்; help one's dependents until they become self supporting. 2. தன் பொறுப்பில் உள்ள பெண்களைத் திருமணம் செய்து கொடுத்தல்; mary. கரைத்துக்குடித்தல் வி. (v.) வேலையில் அல்லது ஒரு துறையில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளுதல்; know inside out; learn thoroughly. 'வரலாற்றுப் பாடத்தை அவன் கரைத்துக் குடித்திருக்கிறான்'.

ஒரு

கரைதட்டுதல் வி. (v.) கப்பல் அல்லது பெரும் படகு கரையோர மணலில் சிக்கிக்கொள்ளுதல்; run aground, be

stranded.

கரையேற்றுதல் வி. (V.) கரைசேர் பார்க்க. கரையேறுதல் வி. (v.) துன்பம், வறுமை முதலியவற்றிலிருந்து மீளுதல் அல்லது விடுபடுதல்; get out or be saved. 'வறுமையிலிருந்து கரையேறுவது எப்போது?.

கரையைக் கடத்தல் வி. (v.) கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி கடற் கரையைக் கடந்து நிலப்பகுதிக்குள் நுழைந்து வலுவிழத்தல்; cross the

coast.

கல்குட்டை பெ. (n.) மலைப்பகுதிகளில் கருங்கல்லுக்காக வெட்டி எடுக்கப் பட்ட இடங்களில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி உருவாகும் குட்டை; a pool in a quarry.

கல்சட்டி பெ. (n.) புளி சேர்த்துச்சமைக்கும்

கறி, ஊறுகாய் போன்றவை வைப்

கல்லைத் தூக்கிப் போடுதல் 151

பதற்காகப் பயன்படுத்தும் மாக் கல்லால் செய்யப்பட்ட மூடி இல்லாத பாத்திரம்; a container without a lid, made of soapstone.

கல்தோசை பெ. (n.) எண்ணெய் அதிக அளவில் ஊற்றாமல் சற்றுக்கனமாகத் வார்க்கப்படும் தோசை; a kind of dosai made thick using less oil. கல் நெஞ்சம் பெ. (n.) இரக்க உணர்வு சிறிதும் இல்லாத மனம்; hard heartedness.

கல்மழை பெ. (n.) ஆலங்கட்டி மழை;

shower of hailstones, hailstorm. கல்யாண ஊர்வலம் பெ. (n.) திருமணத் துக்கு முதல் நாள் இரவு மணமகனை

அல்லது மணமகளை ஊர்வலமாக அழைத்துச் செல்லும் நிகழ்வு; the ritual in which the bridegroom or the bride is taken in procession on the eve of the wedding. கல்யாணச்சாவு பெ. (n.) முதிர்ந்த அகவையுடையோரின் இயற்கையான இறப்பு; natural death of a person at a ripe old age.

கல்லுளி பெ. (n.) கல்லைச் செதுக்கப் பயன்படும் உளி; stone cutter's chisel. கல்லுளிமங்கன் பெ. (n.) தான் நினைப் பதையோ தன் உணர்ச்சிகளையோ வெளிவிடாத அழுத்தமான ஆள்;

an obdurate person, stony -

faced person, poker-faced person.

கல்லெறி தூரம் பெ. (n.) அண்மையில் அல்லது பக்கம்; a stone's throw. 'என் வீடு கல்லெறி தூரத்தில்தான் இருக்கிறது'.

கல்லைத் தூக்கிப் போடுதல் வி. (v.) ஒருவருடைய உறுதி குலைந்து போகும்படி அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றைச் சொல்லுதல் அல்லது செய்தல், குண்டைத் தூக்கிப்