பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

கல் விளக்கு

போடுதல்; shatter (one's hopes, aspirations, etc.,).

கல் விளக்கு பெ. (n.) மாக்கல்லால் செய்யப்பட்ட எண்ணெய் விளக்கு; lamp made of soapstone. 'துளசி மாடத்தில் வைக்க ஒரு கல் விளக்கு வாங்க வேண்டும்'.

கல்வீச்சு பெ. (n.) போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் கும்பல், கூட்டம், கட்டடம், வாகனம் முதலியவற்றின் மீது கற்களை வீசி அழிவு ஏற்படுத்தும் வன்முறைச் செயல்; pelting (buildings, vehicles, etc., with stones in an act of vandalism). கல்வீடு பெ. (n.) மண் இல்லாமல் கல்லால் கட்டப்பட்ட வீடு; house built with brick and mortar.

சுவராக

கல்வெட்டு பெ. (n.) I. ஒரு அரசர் பெற்ற வெற்றி, அளித்த கொடை முதலிய வற்றைக் குறித்து பாறையில் அல்லது கல்லில் செதுக்கப்பட்ட செய்தி; rock inscription (ofhistorical value). 2. இறந் தவரின் நினைவாக அச்சிட்டு வழங்கும் புத்தகம்; a printed booklet distrubuted in remembrance. கலத்தல் வி. (v.) 1. கூட்டத்தில் ஒருவராகச் சேர்தல்; mingle (in the crowd). 2. ஒன்றில் ஒன்றைச் சேர்த்து உருவாக்கல்; make (coffee, tea, etc., by adding the ingredients together). 3. ஆறு, ஓடை போன்றவை கடலில் அல்லது மற்றொரு நீரோட்டத்தில் வந்து சேர்தல்; (of a river, stream) join, flow into. 4. ஒரு சிக்கல், தீர்மானம் முதலியவை தொடர்பாக ஒருவ ரோடு கலந்தாய்தல்; consult. 5. ஒன்றாதல்; become one with, get united. 6. உடலுறவில் சேர்தல்; copulate, have sex.

கலக்கம் பெ. (n.) உறுதியான முடிவை எடுக்க இயலாத தெளிவற்ற மனநிலை அல்லது குழப்பம்; state of confusion on disturbance.

கலகக்காரர் பெ. (n.) 1.கருவி ஏந்தி ஆட்சியாளரை அதிகாரத்தை எதிர்ப் பவர்; (amed rebel. 2. குமுகாயத்தில் நிலவி வரும் மதிப்பீடுகளை கலை, இலக்கியம், மெய்மம் போன்ற வற்றின் மூலம் எதிர்த்துக் குரல் கொடுப்பவர் அல்லது அவற்றுக்கு எதிரான முறையில் வாழ்பவர்; rebel (against the social orthodoxy).

கலகம் பெ. (n.) 1. அமைதியைக் குலைக்கும் சண்டை அல்லது குழப்பம்; riot, unruliness. 2. ஆட்சி யாளர்களுக்கு, அதிகாரிகளுக்கு எதிரான கிளர்ச்சி; rebellion, revolt, mutiny.

கலகலத்தல் வி. (v.) 1. ஒரு செயலாலும் அல்லது ஊர்தி நெரிசலாலும் ஓர் இடம் ஓசையோடு இருத்தல்; (of a place bustle with activity, become lively. 2. நாடகம், திரைப்படம் போன்ற வற்றில் சில தன்மைகளால் அவை யோரிடையே மகிழ்ச்சி மிகுதல்; show visible signs of appreciation.

கலகலப்பு பெ. (n.) I. பேச்சும் சிரிப்புமாக அல்லது ஆட்கள் நடமாட்டத்தால் ஆரவாரத்தோடு இருக்கும் நிலை; live liness (resulting from noisy chatter and laughter). 2. பேச்சில் அல்லது பழகு வதில் தங்குதடையற்ற இயல்பான நிலை; affability, heartiness. கலங்கல் பெ. (n.) 1. நீர், எண்ணெய்

போன்ற நீர்மங்களின் கலங்கிய நிலை; (of liquid) turbidity, the condition of being not cleat, murkiness. 2. பனி, மழை போன்றவற்றால் உருவம் தெளி வில்லாமல் காணப்படும் நிலை; haziness.

கலந்துகட்டி வி.அ. (adj.) 1. தனித் தன்மையோ குறிப்பிடத் தகுந்த