பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவனமெடுத்தல் வி. (v.) ஒன்றின் மீது அக்கறை காட்டுதல்; show interest. 'நான் சொன்ன செயலில் கொஞ்சம் கவனமெடு.

கவனித்தல் வி. (v.) I. பார்த்தல், கேட்டல் மூலம் ஒன்றை மனத்தால் அறிந்து கொள்ளுதல்; look or listen intently (so as to recored what is seen or heard), pay attention to notice. 2. அக்கறையுடன் பேணுதல் அல்லது பராமரித்தல்; take care of. 3. ஒன்றில் ஒரு சிறப்பை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லுதல்; note. 4. ஒருவரை அல்லது ஒரு படைப்பு முதலியவற்றை இனம் காணுதல்; take notice, acknowledge. 5. ஒருவரைப் பணியச் செய்வதற்காக அவர் மீது வன்முறையைச் செலுத் துதல்; use force. 6. ஒரு செயலை முடித்துத் தருவதற்காக ஒருவருக்குப் பணம், சலுகை போன்றவற்றைத் தருதல்; tip so or show concession to something (in retum for a favour). கவனிப்பு பெ. (n.) 1.ஒருவர் ஒன்றின்மேல் செலுத்தும் கவனம்; attention. 'உங்கள் பையனுக்குப் பாடத்தில் சரியான கவனிப்பு இருப்பதில்லை' . 2. ஒருவர் தன்னுடைய செயலால் பிறரிடமிருந்து பெறும் மதிப்பு அல்லது கவனம்;

notice. 3. பணிவிடை, விருந் தோம்பல்; hospitality. 'கல்யாணத்தில் கவனிப்பு அதிகமாக இருந்தது'. கவிச்சை பெ. (n.) 1. மீன், இறைச்சி முதலியவற்றின் தாற்றம்; stink (of meat, esp. fish). 'மீன் கவிச்சை'. 2. ஊண் உணவு;

meat dish, non- vegetarian dish. அவருக்குக் கவிச்சை இல்லாமல் சாப்பிட முடியாது. கவியரங்கம் பெ. (n.) ஏதேனும் ஒரு தலைப்பில் கவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதைகளைப் படித்துக் காட்டும் நிகழ்ச்சி; poets meet or forum (to read poems composed on a common theme).

கழித்தல்

155

கவுதாரி பெ. (n.) தவிட்டு நிற உடலில் கறுப்புக் கோடுகளை உடைய, கோழியைவிடச்சற்றுச் சிறிய பறவை; grey partridge.

கவுளி பெ. (n.) நூறு வெற்றிலை அடங்கிய ஒரு கட்டு; a pack of hundred betel leaves. 'கல்யாணத்துக்கு முப்பது கவுளி வெற்றிலை வேண்டும். கவை பெ. (n.) I. கரும்பு, மூங்கில் முதலியவற்றில் இரண்டு துண்டுகளை இணைப்பது போல் இடையில் இருக்கும் சற்றுக் கடினமான பகுதி; node (in susan cane, bamboo, etc.,). 2. கைவிரல், முதுகுத்தண்டு முதலிய வற்றில் காணப்படும் இணைப்பு;

joint. 'கணுவுக்குக் கணு வலிக்கிறது'. கவைக்கம்பு பெ. (n.) கவையை உடைய கம்பு; stick with forked branch. *கவைக்கம்பை நான்கு பக்கமும் ஊன்றி வெற்றிலைக் கொடிக்கு ஒரு பந்தல் போட்டான்.

கழனி பெ.(n.) நன்செய் நிலம் அல்லது வயல்; (paddy) field. 'கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்று காட்சி தரும் கழனி'. கழிச்சல் பெ. (n.) உயிரினங்களுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு; diahoea (suffered by cattle).

கழிசடை பெ. (n.) ஒன்றுக்கும் உதவாத ஆள் அல்லது பொருள்; worthless person or thing, scum of the earth. கண்ட கழிசடையெல்லாம் படித்துக் கெட்டுப் போகாதே!

கழித்தல் வி. (v.) 1. ஒருவர் காலத்தைச் செலவழித்தல் அல்லது போக்குதல்; pass the time, days, etc.,). 2. ஒரு தொகையிலிருந்து மற்றொரு தொகையைப் பிடித்தல் அல்லது ஓர் எண்ணிலிருந்து மற்றோர் எண்ணைக் குறைத்தல்; deduct (an amount,