பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

கழித்து

interest), subtract (a number from another). 3. ஒரு பொருளில் உள்ள வேண்டாததை ஒதுக்குதல்; dispose of unwanted. 4. ஒருவரிடம் வாங்கிய கடனைத் தீர்த்தல் அல்லது அடைத்தல்; clear (the debts). 5. மரத்தின் உள்ள தேவையில்லாத கிளையை வெட்டுதல்; lop (a branch, etc.,).

கழித்து வி.அ. (adj.) குறிப்பிட்ட காலம்,

நேரம் கழிந்த பின்; (in time) after. நீ போய் ஒரு வாரம் கழித்து இது நடந்தது. கழித்துக்கட்டுதல்

வி. (v.) பயன் இல்லாதது, பழுதடைந்தது என்று பல காரணங்களால் வேண்டாம் என்று ஒன்றை ஒதுக்கிவிடுதல்; discard. கழிப்பிடம் பெ.(n.) பொது இடத்தில் உள்ள கழிப்பறை; public convenience. கட்டணக் கழிப்பிடம்'.

கழிப்பு பெ. (n.) ஏதோ ஒன்றிற்குக் கண்ணேறு கழித்தல்; evil eye. 'புது வீட்டுக்குப் பூசணிக்காய் வெட்டிக் கழிப்பு கழித்தார்கள்'.

கழிவு பெ. (n.) I. தேவையற்றது என்று கழிக்கப்பட்டதாகிய குப்பை கூளம்; garbage. 2. மாந்தர்கள் மற்றும் விலங்கு களின் மலவாய் வழியாக வெளி யேறுவது; faeces. 3. தரத்தில் குறைந் தது என்று நீக்கப்பட்டது; discardedas inferior in quality, refuse. 4. ஏலச்சீட்டு முதலியவற்றில் அளிக்கப்படும்

தள்ளுபடி; balance of the money (divided among the members after bidding). 5. விற்கும்போது பொருள் களுக்கு அளிக்கப்படும் விலை குறைப்பு அல்லது தள்ளுபடி; discount. கழுத்தறுத்தல் வி. (v.) 1. ஒருவரைச் சிறுசிறு செயல்களுக்காகத் தொல் லைக்கு உள்ளாக்குதல்; annoy, be a pain in the neck. 2. நம்பியிருந்த ஒருவர்

சரியான

அல்லது ஒன்று மிகச் சமயத்தில் கைவிடுதல்; leave in the

lurch.

கழுத்தில் கட்டுதல் வி. (v.) I. ஒருவருக்கு வற்புறுத்தித் திருமணம் செய்து வைத்தல்; get, maied to an unwilling person. 2. வலியுறுத்தி ஒரு பணியை ஒருவர்க்குக் கொடுத்தல்; to handover one work to one compulsary. கழுத்தை நீட்டுதல் வி. (v.) ஒரு பெண் திருமண ஏற்பாட்டுக்கு வேறு வழியின்றி உட்படுதல்; (of a woman) meekly consent to the marriage proposed. 'பணக்காரன் என்பதற்காக எனக்குப் பிடிக்காத ஒருவனுக்குக் கழுத்தை நீட்டமுடியுமா?.

கழுவேற்றுதல் வி. (v.) முற்காலத்தில் கடும் குற்றம் செய்த ஒருவரைக் கழு மரத்தில் ஏற்றி உயிரைப் போக்குதல்; (in former times) impale a person (on a spike). 'கழுவேற்றுவதில் பல முறை உண்டாம்.

கழைக்கூத்து பெ. (n.) இரு மூங்கில் (கழை ) நிலைகளுக்கிடையில் கட்டப்பட்ட கயிற்றில் ஒரு நீளமான மூங்கில் கழியை வைத்துக் கொண்டு ஆடும் கலைக்காட்சி; tightrope walking programme.

-

கள் பெ. (n.) தென்னை அல்லது பனை மரத்திலிருந்து வடிக்கப்படும், குடி மயக்கம் (போதை) தரும் குடிநீர் (பானம்); toddy (tapped from palmyra or coconut palm). கள்ளங்கபடம் பெ. (n.) பொய், களவு, சூழ்ச்சி முதலிய தீய செயல்களைச் செய்யவும் பிறர் செய்தால் அவற்றை அறியவும் இயலும் தன்மை; guile, deceitfulness. அவன் அப்பாவி, கள்ளங்கபடம் அற்றவன்'. கள்ளச்சந்தை பெ. (n.) அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பொருள்களை உரிமம் பெறாமலும் வரி செலுத்தாமலும் அதிக விலைக்கு விற்கும் வணிகம் அல்லது கறுப்புச் சந்தை; black market.