பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளச்சாவி பெ. (n.) திருடும் நோக்கத் துடன் அல்லது உரியவரின் அனுமதி இன்றிப் பூட்டைத் திறக்கப் பயன் படுத்தும் மாற்றுத்திறவுகோல்; forged key.

கள்ளத்தனம் பெ. (n.) திருட்டுத்தனம்; furtiveness. 'அவன் அரைக் கண்ணால் அவளைக் கள்ளத்தனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கள்ளன் பெ. (n.) 1. திருடன்; thief. 2. பகட்டுத் தொனியில் உண்மையை மறைப்பவன்; (jocularly) a good masquerader. இவனுக்கு எல்லாம் தெரியும், ஆனால் சொல்ல மாட் டான். சரியான கள்ளன்!'.

களங்கம் பெ. (n.) ஒருவருடைய நற்பெயருக்கு அல்லது குடும்பத்தின் பெருமைக்கு வந்து சேரும் கெட்ட பெயர்; slur, blemish, stain, dishonour. *உங்கள் புகழுக்குக் களங்கம் கற் பிக்கப் பார்க்கிறார்கள்'. 2. பெண் ணைக் குறிப்பிடும்போது நடத்தை யில் கெட்ட பெயர்; stigma (attributed to a woman). பெண்ணுக்குக் களங்கம் கற்பித்துத் திருமணத்தை நிறுத்த முயற்சி'.

களத்துமேடு பெ. (n.) சிற்றூர்களில் கதிரடிப்பதற்கான வயலைவிடச்சற்று உயரமான இடம்; (in the countryside) threshing ground (a little elevated from the ground).

களப்படி பெ. (n.) அறுவடை செய்தல், கதிரடித்தல் போன்ற வேலைகளைச் செய்தவர்களுக்குக் களத்தில் கூலிக்கு மேல் கூடுதலாகத் தரப்படும் தவசம்; extra quantity of grains given over and above the wages to workers during harvest.

களப்பணி பெ. (n.) ஆய்வு, அறிக்கை முதலியவற்றிற்காக உரிய இடங் களுக்குச் சென்று தரவல் திரட்டும் பணி; fieldwork (for research,

களைகட்டுதல்

157

investigation, etc.,). 'நாட்டார் வழக்காற்றியல் களப்பணி. களவாடுதல் வி. (v.) திருடுதல்; steal. தோட்டத்தில் புகுந்து மரங்களைக் களவாடி மாட்டிக்கொண்டான். களவாணி பெ. (n) பொருள்களைத் திருடும் ஆள்; petty thief. களவுபோதல் வி. (v.) திருடப்படுதல் அல்லது திருடுபோதல் ; be stolen. எங்கள் வீட்டு மாடு களவு போய் விட்டது.

களிமண் பெ. (n.) கெட்டியாகவும் இறுகியும் நீர் பட்டால் குழையக் கூடியதாகவும் இருக்கும் ஒரு வகைக் கறுப்பு நிற மண்; clay. அவன் தலையில் மூளை இல்லை, களிமண் தான்என்று அண்ணன் திட்டினான்'. களியாட்டம் பெ. (n.) 1. அகமகிழ்வு நிறைந்த கொண்டாட்டம்; gaiety. 2. குடித்தோ சிற்றின்பத்தில் ஈடு பட்டோ மகிழும் கேளிக்கை; revelry. இரவின்களியாட்டங்கள்.

களைத்தல் வி. (v.) I. ஒருவர் வேலை செய்து சோர்வடைதல்; feel tired, feel exhausted. 'ஒரு மைல் கூட நடக்க வில்லை, அதற்குள் களைத்து விட்டாயே!.2. ஆடையை உடலி லிருந்து கழற்றி, உருவி நீக்குதல்; take off (clothes), remove.

களைக்கொட்டு பெ. (n.) களை வெட்டி;

weeding-hook.

களைக்கொல்லி பெ. (n.) களைகளை அழிக்கப் பயன்படுத்தும் வேதிப் பொருள்; weedicide.

களைகட்டுதல் வி. (n.) நிகழ்ச்சி அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடம் பொலி வுடன் காணப்படுதல்; become lively, come alive, take off. 'விருந்தினர்கள் வருகையால் கல்யாண வீடு களை கட்டிவிட்டது.