பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

களைப்பாறுதல்

களைப்பாறுதல் வி. (v.) ஓய்வெடுத்தல் அல்லது இளைப்பாறுதல்; have respite, take rest. 'கதை படிப்பவர் கொஞ்சம் களைப்பாறினார்'.

நிறுத்திவிட்டுக்

களைப்பு பெ. (n.) நோயினாலோ, அதிக உழைப்பினாலோ வலிமை இழந்த நிலை; exhaustion. 'காய்ச்ச லுக்குப் பிறகு அடிக்கடி களைப்பாக இருப்பதை உணர்கிறேன்'.

களைவெட்டி பெ. (n.) களைகளை நீக்கப் பயன்படுத்தும் சிறிய இருப்புத் தகடு பொருத்தப்பட்ட மரப்பிடியோடு கூடிய கருவி ; a small implement with a


flat end attached to a wooden handle for weeding, weeding-hook.

கற்கண்டு பெ. (n.) படிகம் போல இருக்கும் கரும்புச் சாற்றின் கட்டி;

rock-candy (from sugarcane juice). கற்பனை பெ. (n.) 1. இல்லாத ஒன்றைப் புதிதாகச் சிந்தனையில் படைக்கும் அல்லது உருவாக்கும் ஆற்றல்; imagination. 'மிகுந்த கற்பனையுடன் உருவாக்கப்பட்ட தோட்டம்'. 2.இல்லாததை இருப்பதாக நினைத் துப் பார்ப்பது; imagination. அவர் பணத்தைத் திருடிவிட்டார் என்பது உன் கற்பனை.

கற்றுக்கொடுத்தல் வி. (v.) கல்வி, வேலை, பழக்கம் முதலியவற்றை ஒருவருக்கு சொல்லிக் கொடுத்தல்;

teach.

கறுப்பு ஆடு பெ. (n.) ஒரு குழுவில் இணக்கமாக இருப்பதுபோல் காட் டிக்கொண்டு மற்றொரு குழுவின் நலனுக்கு எதிராகச் செயல் படுபவர் அல்லது கருங்காலி; black sheep. ஏதோ ஒரு கறுப்பு ஆடு நாம் போடும் திட்டத்தையெல்லாம் மேலிடத்தில் சொல்லிக் கொண் டிருக்கிறது.

கறுப்புக் கண்ணாடி பெ. (n.) வெயிலில் செல்லும்போது வெயிலின் ஒளி யானது கண்ணைத் தாக்காமல் இருக்க அணியும் கருப்பு நிற மூக்குக் கண்ணாடி; sunglasses.

கறுப்புப்பணம் பெ. (n.) வருமான வரிக்கணக்கில் காட்டாமல் பதுக்கப் படும் பணம்; black money. கறுப்பு வெள்ளை பெ. (n.) புகைப்படம், திரைப்படம் போன்றவற்றில் வண்ண மல்லாது கறுப்பு, வெள்ளை மட்டுமே கொண்டது; black and white. கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டி'.

கறுவுதல் வி. (v.) முன்பகை, போட்டி, சண்டை முதலியவற்றின் காரணமாக மனத்திற்குள் வஞ்சகம் வளர்த்தல் அல்லது பழிதீர்ப்பதாகப் பேசுதல்; nurse ill feelings, harbour malice. போட்டியில் என்னிடம் தோற்றதி லிருந்து கறுவிக்கொண்டு திரிகிறான். கன்றுபோடுதல் வி. (v.) பசு, எருமை, யானை ஆகிய விலங்குகள் கன்றை ஈனுதல்; calve (of cow, buffalo, elephant).

கன்னக்கோல் பெ.(n.) முற்காலத்தில்

சுவரில் ஓட்டை போடத் திருடர்கள் பயன்படுத்திய கடப்பாரை போன்ற கருவி; crowbar like tool. கன்னங்கரிய பெ.அ. (adj.) மிகவும் கறுப்பான;

pitch-black. 'கன்னங்கரிய நிறத்தில் இரண்டு அண்டங் காக் கைகள்.

கன்னங்கரேல் என்று வி.அ. (adv.) மிகவும் கறுப்பாக; in a jet black manner. அம்மன் சிலை கன்னங்கரேலென்று இருந்தது.

கன்னாபின்னா என்று வி.அ. (adv.) I. எந்த ஒரு முறையும் ஒழுங்கும் இல்லாமல்; without order or propriety. 'கன்னாபின்னாவென்று செலவு செய்தால் சமாளிக்க முடியாது'.