பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தரக்குறைவாகப் பேசுதல்; using rude language, indecently. வாடகை தரவில்லை என்பதற்காக விட்டு உரிமையாளர்கன்னா பின்னாவென்று கத்த விட்டார்.

கன்னிகழிதல் வி. (v.) ஒரு பெண்ணின் கன்னித்தன்மை நீங்குதல்; one'smaiden hood come to an end formally.

கன்னிகாதானம் பெ. (n.) பெண்ணை ஒருவருக்குத் தாரைவார்த்துக்

கொடுத்துத் திருமணம் செய்வித்தல்; giving one's daughter in marriage. கன்னிசாமி பெ.(n.) சபரிமலைக்கு முதல் முறையாகச் செல்வதற்காக மாலை போட்டுக் கொள்பவர்; person observing rituals for his maiden pilgrimage to Sabarimalai.

கன்னிமாடம் பெ. (n.) அரச குலத்தைச் சேர்ந்த கன்னிப் பெண்கள் வசித்த அரண்மனையின் பகுதி; part of the palace where the royal maidens lived. கன்னியர்மடம் பெ. (n.) கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த கிறித்துவப் பெண் துறவிகள் வசிக்கும் இடம்; nunnery

convent.

கனத்தல் வி. (v.) 1.தூக்கும்போது களைப்பு தரக்கூடிய அளவில் அதிக எடை உடையதாக இருத்தல்; be heavy. பொருட்கள் நிறைந்திருந்த பெட்டி தூக்க முடியாமல் கனத்தது'. 2.நீர்க் கோவையால் தலை கனமாக இருத்தல்; feel heavy. 'இரண்டு நாட்களாக எனக்குத் தலை கனத்துக் கொண்டிருக்கிறது'. 3. ஒருவரின் உடல் அல்லது உடலின் ஒரு பகுதி பெருத்தல்; become stout. 'முன்பு பார்த்தபோது இருந்ததைவிட இப் போது சற்று கனத்திருக்கிறாய்'. 4. மழை, காற்று வலுத்தல்; (of rain) become heavy. 'மழை கனக்க தொடங்கி விட்டது'.

கனரக வாகனம் பெ. (n.) சரக்குகளை அல்லது பயணிகளை ஏற்றிச் செல்லும்

காக்காய்க்கடி

159

பெரிய ஊர்தி; heavy vehicle. 'இந்தப் பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதற்கு இசைவு இல்லை'. கனல் பெ. (n.) I. நெருப்பு, வெயில் ஆகியவற்றின் கடுமையான சூடு அல்லது தகிப்பு; intense heat, glow. அடுப்பில் கனல்'. 2. ஓர் உவமைச் சொல்; (mostly metaphorically) fire. கனல் கக்கும் சொற்பொழிவு'.

கனவு பெ. (n.) I. தூக்கத்தில் தோன்றும் உணர்வுகள், மனக்காட்சிகள் போன் றவை; dream. 'வானூர்தியில் செல்வது போல் ஒரு கனவு' . 2. மனத்தில் வளர்க்கும் எண்ணம், விருப்பம்; desire, dream. 'அவளுடைய கனவு

வீண்போக வில்லை'.

கனிவு பெ. (n.) பேச்சு, பார்வை, செய்கை ஆகியவற்றில் அன்பு, பரிவு முதலிய வற்றின் நயமான வெளிப்பாடு; tendemess. நோயாளிகளிடம் கனி வாகப் பேசினாலே பாதி நோய் போய்விடும்.

கனைத்தல் வி. (v.) I. குதிரை அல்லது கழுதை கத்துதல்; (of horse) neigh, (of donkey) bray. 2. தொண்டையில் தங்கியிருக்கும் உமிழ்நீர் போன்ற வற்றை நீக்க மிகவும் மெதுவாக இருமுதல்; clear (the throat). அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஒரு மடக்குத் தண்ணீர் குடித்துவிட்டுப் பேசத் தொடங் கினார்.

கா

காக்காய்க்கடி பெ. (n.) பெரும்பாலும் (சிறுவர் பேச்சில் திண்பண்டம் போன்றவற்றை) எச்சில் படாமல் துணியால் மூடிக்கடிக்கும் முறை; Crow bite. 'அந்த மிட்டாயில் எனக்குக் காக்காய்க்கடி கடித்துக் கொஞ்சம் கொடு'.