பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

காக்காய்க்குளியல்

காக்காய்க்குளியல் பெ. (n.) முழு உடம் பையும் தனைக்காமல், தண்ணீரை அள்ளித் தெளித்து உடம்பைக் கழுவிக்கொள்ளுதல்; wash in a hurry. காக்காய்க்குளியல் போட்டுவிட்டு ஐந்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன்'. காக்காய்க்கூட்டம் பெ. (n.) மேலிடத்தில் உள்ளவர்களைப் புகழ்ந்து அல்லது அவர்களுக்கு இசைவாக நடந்து கொள்ளும் மக்கள்; bunch of toadies. அவரைச் சுற்றி எப்போதும் ஒரு காக்காய்க் கூட்டம் இருக்கும்'. காக்காய்ப் பிடித்தல் வி. (v.) வேண்டியதைச் செய்து மகிழ்வித்தல் (தன் காரியத் துக்காக ஒருவருக்கு}; curry fovour with ingratiate (oneself). *மேலதிகாரியைக் காக்காய் பிடித்து எப்படியாவது அவன் செயலை நிறைவேற்றிக் கொள்வான்'. காக்காய் வலிப்பு பெ. (n.) மூளையில் ஏற்படும் ஒரு வகை நோய்; epilepsy. கை கால்கள் வெட்டி வெட்டி இழுத்து வாயில் நுரை தள்ளிச் சுயநினைவை இழக்கச் செய்யும் ஒரு நோய்.

காசாக்குதல் வி. (v.) தன் வரும்படியைக் குறியாகக் கொண்டு எதையும் விற்று அல்லது பயன்படுத்திப் பணம் சேர்த்தல்; cashing on something. அவன் மண்ணையும் காசாக்கி விடுவான்.

காசாளர் பெ. (n.) வைப்பகம், அலுவலகம் முதலியவற்றில் பணம் தருதல், பெறுதல்; cashier. 'பணம் தருதல், பெறுதல் ஆகியவற்றையும் அவை தொடர்பான பிற பணிகளை யும் செய்பவர்.

காசு பெ.(n.) தாணயம்; coin. 'குனிந்த போது பையிலிருந்து காசுகள் கீழே விழுந்தன.

காசுபார்த்தல் வி (v.) பணம் ஈட்டுதல்; eam money. 'வீணாக ஊர்சுற்றுவதை விட்டு விட்டு ஏதாவது வேலை பார்த்துக் காசு பார்க்கிற வழியைப் பார். காசுபிரித்தல் வி. (v) பணம் தண்டுதல்; collect donations (or) contributions. கூத்து நடந்து கொண்டிருக்கும்போது வேடம் கட்டியவர்களே தட்டுகளை எடுத்துக்கொண்டு கூட்டத்தினுள் சென்று காசு பிரிக்கிறார்கள். காசுமாலை பெ. (n.) பெண்கள் கழுத்தில் அணியும் மாலை; anecklace made with coin likepieces of Gold or Silver. 'நாணய வடிவத் தகடுகளைக் கோத்துச் செய்யப்பட்ட நகையணி.

காட்சி பெ. (n.) கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் ஒருவருக்குத் தென்படும் தோற்றம்; sight, seenery. அந்த இயற்கைக் காட்சி அவன் மனதைக் கவர்ந்தது'.

காட்டம் பெ. (n.) எரிச்சல் கலந்த சினம்; sharpness (of temper); pungency. *மிளகாய்ச் சட்டினியின் காட்டம்'. யாரைக் கேட்டு இந்தக் காரியத்தைச் செய்தாய்' என்று அவர் காட்டமாகக் கேட்டார்.

காட்டாமணக்கு பெ. (n.) ஒருவகை ஆமணக்கு; Physic nut; purging nut. (மருத்துவக் குணமுள்ள) ஓடித்தால் பால் வரும் தண்டையும் கொத்துக் கொத்தான பூக்களையும் கொண்ட ஆமணக்கு.

காட்சியளித்தல் வி. (v.) தோற்றம் தருதல்; appear, present (oneself in a particular manner). திருவிழாக் கோலத்தில் நகரமே ஒளிமயமாகக் காட்சி யளித்தது'.

காட்டான் பெ. (n.) முரட்டுத்தனமாக நடந்து கொள்பவன்; person of rough manners. 'காட்டான் மாதிரி கத்தாதே' காட்டிக் கொடுத்தல் வி. (v.) வஞ்சகமாகத்

தெரிவித்தல்; inform on (as an act of