பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

betrayal). கொலை வழக்கில் தேடப் பட்டுவரும் தந்தையை மகனே காட்டிக்கொடுத்தான்.

காட்டிக்கொள்தல் வி. (v.) போலியாகத் தோற்றம் செய்தல்; try to pass for; put on airs. 'அவன் தன்னை அறிவாளி போல் காட்டிக்கொண்டான். காட்டுக்கூச்சல் பெ. (n.) பெருத்த ஒலி; raucous clamour; uproarious shouting. வீட்டுக்குள் நுழைந்ததும் காட்டுக் கூச்சல் போட்டால் என்ன அர்த்தம்?'. காட்டுத்தனம் பெ. (n) கட்டுப்பாடில் லாத முறை; recklessness. 'குழந் தையை இப்படி அடிப்பது முழுக் காட்டுத்தனம்.

காட்டுத்தீ பெ. (n.) (விரைவில் எல்லாப் பகுதிகளுக்கும் பரவிவிடும்) நெருப்பு; wildfire. 'தலைவர் இறந்து விட்டார் என்ற செய்தி காட்டுத் தீ போலப் பரவியது'.

பட்ட

காட்டுப்பயல் பெ. (n.) நாகரிகம் தெரியாத, முரட்டுத்தனமாக நடந்து கொள்பவர்; boor; savage. 'என் மருமகன் ஒரு காட்டுப்பயல். அவனிடம் மாட்டிக் கொண்டு என் மகள் துன்பங்கள் கொஞ்சமல்ல'. காட்டுமிராண்டி பெ. (n.) காடுகளில் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த மனிதன்; savage. 'அந்த காட்டுமிராண்டியுடன் யார் பேச

முடியும்?.

காடாற்று பெ. (n.) இறந்தவரை எரிப்புச் செய்யும் இடத்தில் (பெரும்பாலும்) அடுத்த நாள் பால் தெளித்துச் செய்யும் சடங்கு; perform the ceremony of sprinkling milk. நேற்றுதான் அவரின் காடாற்று நடந்தது'.

காடு பெ.(n.) I.வனம்; forest; jungle. 2. புன்செய் நிலம்; dry land (under cultivation). 'உழுவதற்காக மாடு களைக் காட்டுக்கு ஓட்டிக்கொண்டு

போனான்.

காதலித்தல்

161

காடுகரை பெ. (n.) வயலும் வயலைச் சார்ந்த பகுதியும்; (cultivable) land and adjacent area. 'காடுகரையைச் சுற்றிப் பார்த்து விட்டு வீடு திரும்பினார். காணம் பெ. (n.) 1. செக்கு ; oil press. உங்களுக்குச் சொந்தக் காணம் இருக்கிறதா?'. 2. கொள்ளு; horsegram.

காணாமல் போதல் வி. (v.) I. தொலைந்து போதல்; be missing. 'காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு 2.இருக்கும் இடம் தெரியாமல் போதல்; be forgotten. வெகு விரை வில் முன்னேறிய பல கலைஞர்கள் இன்று காணாமல் போய்விட் டார்கள்.

காணும் பொங்கல் பெ.(n.) I. பொங்கலை யொட்டி உறவினர்களையும் ஊரையும் கண்டு மகிழும் திருநாள் (பொங்கல் முடிந்த இரண்டாம் நாளில்); second day after pongal on which one goes visiting and sight seeing. காததூரம் பெ. (n.) கூப்பிடுதூரம் என்பதற்கு எதிராகவும் நெடுத் தொலைவு என்ற பொருளிலும் பயன்படுத்தப்படும் சொல்; being a total stranger. 'சங்கீதத்துக்கும் அவனுக்கும் காததூரம்'.

காதல் பெ. (n.) I. பிடிப்பு, விருப்பம்; strong liking; love. 'அவர் இசையின் மேல் கொண்ட காதல் அளப்பரியது'. காதலர் பெ. (n.) I. காதலனையும் காதலியையும் குறிப்பிடும் பன்மைச் சொல்; (in General) lovers. 'சிறுவர் பூங்கா இப்போது காதலர் பூங்காவாக மாறி வருகிறது என்று நண்பன் கூறினார்.

காதலித்தல் வி. (v.) I. விரும்புதல், நேசித்தல்; love (a person of the opposite