பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

காதால் கேள்தல்

sex). அவர்கள் இருவரும் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறார்கள்'. காதால் கேள்தல் வி. (v.) நேரடியாகக் கேட்டல்; hear with one's own ears (said to give emphasis). 'அவன் உன்னைப் பற்றி மோசமாகப் பேசியதை என் காதால் கேட்டேன்.

காதில் போட்டுக்கொள்ளுதல் வி. (v) கேட்டு உரிய கவனம் செலுத்துதல்; pay head to; listen to. 'நான் வீடு மாற்ற வேண்டும் என்று சொல்வதை நீங்கள் காதில் போட்டுக்கொள்வதே இல்லை.

காதில் போடுதல் வி. (v.) கவனத்தில் கொள்ளும்படி தெரிவித்தல்; put in a

word; mention. 'என்பையன் வேலை செய்தியை உங்கள் காதில் போட்டு வைக்கிறேன்.

காதுக்கருவி பெ. (n.) கேட்கும் ஆற்றல் குறைந்தவர்கள் காதில் பொருத்திக் கொள்ளும் சிறு மின் கருவி; hearing aid. 'காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்கள் கேட்கும் திறனை அதிகப்படுத்தி உதவும் கருவி.

காதுகுத்துதல் வி. (v.) 1. காதுமடலின்

கீழ்ப் பகுதியில் துளையிடுதல் என்னும் சடங்கை நிகழ்த்துதல்; the ceremony of piercing the ear lobe. ‘குழந்தைக்குக் காதுகுத்தக் கோயி லுக்குப் போயிருக்கிறார்கள். 2. ஒன்றைப் பற்றித் தெரிந்தவரிடம் அது அவருக்குத் தெரியாது என்ற எண்ணத்தில் அதற்குமாறான செய்தியைச் சொல்லுதல்; tell fibs. 'நான் இப்போதுதான் அவரைப் பார்த்து விட்டு வருகிறேன். அவர் ஊருக்குப் போய்விட்டார் என்று என்னிடமே காது குத்துகிறாயா?'. காதுகுத்து பெ. (n.) 1. காதினுள் ஏற்படும் வலி;

ear-ache. 2. காதுகுத்துதல்

என்னும் சடங்கு; the ceremony of piercing the ear lobe. 'என் குழந்தைக்கு நாளை காதுகுத்து'.

காதுகேளாத பெ.அ. (n.) கேட்கும் திறன் இல்லாத; hearing impaired. 'காது கேளாத சிறுவர்களுக்கான பள்ளி'. காதுகொடுத்துக் கேட்டல் வி. (v.) கவனத்துடன் கேட்டல்; give one's ear to; listen. 'நான் சொல்வதைச் சிறிது நேரம் காது கொடுத்துக் கேள்'. காதைக் கடித்தல் வி. (v.) செய்தியைப் பிறருக்குக் கேட்காத வகையில் சொல்லுதல்; whisper (confidentially). பேச்சுவார்த்தை நடந்து கொண் டிருக்கும்போது அவசரப்பட்டு ஒத்துக்கொண்டு விடாதீர்கள்' என்று என் காதைக் கடித்தார்.

காதைப் பிளத்தல் வி. (v.) மிக அதிக அளவில் வருத்துதல்; (of sound) be piercing; be shrill; be shrieking. 'காதைப் பிளக்கிறது வண்டிகளின் இரைச்சல்'. காதோடு காதாக வி.அ. (n.) மிகவும் மெதுவான குரலில் கமுக்கமாகக் கூராய்வு; in a hushed voice; in a whisper. 'இரு கட்சித் தலைவர்களும் மேடையில் காதோடு காதாகப் பேசிக் கொண்டிருந்தபோது எடுத்த படம்.

காந்தல் பெ. (n.) தீய்ந்து போய்க் காணப்படும் உணவுப் பகுதி; over cooked or charred part of a dish such as uppuma, pongal, etc., sticking to the bottom of the vessel. காந்த உப்புமா தனிச்சுவை உண்டு.

காந்துதல் வி. (v.) கருகுதல்; (offoodstuff)

get bumt (through overcooking). பருப்பு காந்துகிற மணம் அடிக்கிறது'. காப்பகம் பெ. (n.) பொறுப்பேற்றுக் கவனிக்கும் இல்லம்; Home (

for or - phans, aged, etc.,). 'குழந்தைகள் காப்பகம்/மனநலக் காப்பகம், முதியோர்காப்பகம்'.