பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பாட்சியர் பெ. (n.) அருங்காட்சியகக் காப்பாளர்; curator of museum. இந்த நடுகற்கள் பதின் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று அருங்காட்சியகக் காப்பாட்சியர் கூறினார்.

காப்பாளர் பெ.(n.) I. விடுதிக்காப்பாளர்; warden. மாணவர் விடுதிக் காப்பாளர்.2. ஏதிலி (அனாதை) இல்லக் காப்பாளர்; orphanage superviser.

காப்பாற்றுதல் வி. (v.) பாதுகாத்தல், தீங்கு, அழிவு வராமல் தடுத்தல்; save from danger, destruction) protect. ஓர் உயிரைக் காப்பாற்ற இந்த மருந்து தேவை'. 'எரிந்து கொண்டிருந்த வீட்டிற்குள் தீயணைப்புப் படையினர் புகுந்து அங்கிருந்து முதியவரைக் காப்பாற்றினர்.

காப்பீடு பெ. (n.) இறப்பு இழப்பீடு;

insurance.

காப்பு பெ. (n.) 1. கையில் அணியும் அணிகலன்; Bracelet. 2. நோய்த் தடுப்புக்காகக் காலில் அணியும் வளையம்; anklet. காக்காய் வலிப்புக்கு உள்ளானவரின் காலில் இரும்புக் காப்பு அணிந்துள்ளனர். 3. மணமகன் கையில் கட்டும் மஞ்சள் கயிறு;

turmeric - dyed cord tied. (especially on occasions such as wedding). திருமணம் முதலிய சடங்குகள்.

காப்புக் கட்டுதல் வி (v.) 1. கோவில் மரம்

நட்டு அதில் மஞ்சள் நூல் கட்டுதல்; to

make the commencement of the temple festival. 2. திருவிழாவின் சடங்குகளை முன்னின்று நடத்துபவர்களின் கையில் காப்புக்கட்டிக்கொள்ளுதல்; tie a turmeric dyed cord on the wrist of

the person authorized to conduct the rituals during a temple festival. காப்புத் தொகை பெ. (n.) உறுதித் தொகை; security deposit.

காய்த்தல்

163

வீட்டுக்கான மின் இணைப்புப் பெறக் காப்புத் தொகை செலுத்த வேண்டும்.

காப்புரிமை பெ. (n.) 1. அரசில் பதிவு செய்து பெறும் உரிமை; patent. 'இந்தியாவில் மரபுவழிக் உருவாக்கப்படும் பொருள் களுக்குச் சில வெளிநாட்டு நிறு வனங்கள் காப்புரிமை கோருகின்றன. 2. ஒரு படைப்பாளிக்குத் தன் படைப்பில் சட்ட வழியாக இருக்கும் உரிமை; copy right. 'இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் ஓர் எழுத்தாளர் இறந்து அறுபது ஆண்டுகள் வரை அவர் எழுதிய நூல்களின் காப்புரிமை அவருடைய பிறங்கடை யினரின் உடைமையாக இருக்கும்'. காம்பு பெ. (n.) 1. பூத்தண்டுப் பகுதி; stalk. பூவைக் காம்போடு பறித்தான்'. 2. மாட்டின் மடியில் பால் வெளி வரும் துளையுள்ள பகுதி; teat; nipple. காய் பெ. (n.) 1. பழமாவதற்கு முன் உள்ள நிலையிலிருக்கும் காய்ப் பகுதி; green fruit. 'மாமரத்தில் முற்றிய காயை மட்டும் பறியுங்கள். 2. காய்கறி; vegetables. 'காய் இல்லாமல் வெறும் குழம்பு ஊற்று.

காய்ச்சல் பெ. (n.) இயல்பாக இருக்க வேண்டிய சூட்டை விட உடலில் அதிகமாகச் சூடு இருக்கும் நிலை; fever. உடலில் காய்ச்சல் வந்து விட்டது.

காய்ச்சுதல் வி. (v.) I. கொதிக்கும் அளவுக்குச் சுட வைத்தல்; boil (water, milk, etc.,). நீரை நன்றாகக் காய்ச்சி ஆறவைத்துக் குடிக்கவும். காய்த்தல் வி. (v.) I.காயைக் கொடுக்கும் செடி, கொடி மரங்கள் காலத்தால் தரும் காய்க்கும் நிலை; yielding. அவர் வீட்டு மாமரம் இந்த முறை