பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

காய்தல்

நன்கு காய்கின்றன. 2.தோல் தடித்தல்; be come calloused (of part of the body). கோடரி பிடித்து அடிக்கடி விறகு வெட்டுவதால் என் கையில் தோல் காய்த்துப் போய்விட்டது'. காய்தல் வி. (v.) 1. ஈரத்தன்மை இல்லாமல் போதல்; get dried; dry up. மழை இல்லாமல் நிலமெல்லாம் காய்ந்துகிடக்கிறது . 2. ஆறுதல்; heal (of wound). 'புண் நன்றாகக் காய்ந்து பொருக்குப் படர்ந்திருக்கிறது'. 3. வறட்சி உண்டாதல்; (of throat) become dry. பேசிப் பேசித் தொண்டை காய்ந்துவிட்டது. காய்ந்த மிளகாய் பெ. (n.) மிளகாய் வற்றல்; red chillies. 'உப்புமாவைத் தாளிக்க இரண்டு காய்ந்த மிளகாய் வேண்டும்.

காய்ப்பு'பெ.(n.) மரம், செடி முதலியவை காய் தருவது; yield (in terms of fruit); produce. புளியமரத்தில் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காய்ப்பு சரியாக இல்லை'. காய்ப்பு2 பெ. (n.) (கை, கால் முதலியவற்றில்) தோல் காய்த்து போகும் நிலை; callousness of skin. காய்பிடித்தல் வி. (v.) பூ காயாக மாறத் தொடங்குதல்; fruit. 'அவரைச் செடி இன்னும் காய்பிடிக்க ஆரம்பிக்க வில்லை.

காய்விடுதல் வி. (v.) 1.பூ காயாக மாறுதல்; bear fruit yield. 2.(நண்பர் களாக இருக்கும் சிறுவர்கள்; ஒருவரோடு ஒருவர் இனி பேசிக் கொள்வதில்லை என்று சொல்லி விடுதல்; (of children) break friendship. மிட்டாய் தராவிட்டால் உன்னோடு காய் விட்டுவிடுவேன் என்றான். காயம் பெ. (n.) அரத்தம் வரும்படி யாகவும் உள்தசை தெரியும்படி

யாகவும் ஏற்படுகிற தோல் சிதைவு; injury, wound. 'கல் தடுக்கிக் கீழே விழுந்ததில் முழங்கையில் காயம் ஏற்பட்டது.

காயமாகுதல் பெ. (n.) 1.(பணி) நிலையாதல் ; (of job) become permanent. 'உனக்கு வேலை காய மாயிற்றா?'. 2. (காரியம்) கரணியம் வெற்றியாக நிறைவேறுதல் ; (ofapiece of work or mission) get completed successfully. போன காரியம் காய மாகவில்லை.

காயா பழமா பெ. (n) ஒன்றின் முடிவு உதவியாக அமைந்ததா இல்லையா என்று கேட்கும் வகையில் பயன் படுத்தும் தொடர்; an expression used to ask the outcome (of an effort) is positive or negative. 'நீ போன வேலை காயா பழமா.

கார் பெ. (n.) மழைக்கால நெற்பயிர்; குறுவை; the first crop of paddy harvested in the rainy season. கார் அறுவடை'.

காரம் பெ. (n.) உறைப்பு; pungency; hot (in taste). குழம்பில் காரம் அதிகம்'. காரியக்காரன் பெ. (n.) தன்னல நோக்கத்தோடு செயல்களைச் செய்து கொள்பவன்; self centred man. காரியக்காரி பெ. (n.) தன்னல நோக்கத் தோடு செயல்களைச் செய்து கொள்பவள்; self centred woman. காரை பெ. (n.) சுண்ணாம்பும் மணலும் கலந்து நீர் ஊற்றிக் குழைத்த கலவை; lime plaster; stucco (for building). சுவரில் பல இடங்களில் காரை பெயர்த்து விட்டது'. 'பற்களில் படிந் திருக்கும் காரை'.

கால்' பெ. (n.) 1. உடலின் உறுப்பு; leg, foot. பந்தைக் காலால் உதைத்தான்'. 2.நாற்காலி மேல்பகுதியைத் தாங்கி நிற்கும் கோல் பகுதி; leg (of a chair, table, etc.,). அந்த நாற்காலியின் ஒரு கால் உடைந்துவிட்டது'. 3. சக்கரம்,