பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடி; lower part of the wheel (of chariat, cart). வண்டிக்கால் உடைந்து விட்டது.

கால்' பெ. (n.) நான்கில் ஒரு பகுதி; quarter, one fourth. 'போன வருடம் பெய்த மழையில் கால் பங்குகூட இந்த ஆண்டு பெய்யவில்லை'. கால்கட்டு பெ.(n.) திருமணம் மூலமாக ஏற்படுத்தும் கட்டுப்பாடு; Bond (of mariage). உங்கள் மகனைப் பற்றி கவலைப்படாதீர்கள், கால்கட்டுப் போட்டால் எல்லாம் சரியாகி விடும்.

கால்கடுதாசி பெ. (n.) திடீர் பதவி விலகலாவணக் கடிதம்; letter of resignation (especially one written in a huff). 'அதிகாரி திட்டியதால் கால் கடுதாசியை நீட்டிவிட்டு வந்து விட்டேன்.

கால்வாய் பெ.(n.) பாசனத்துக்காக அல்லது போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட நீர்வழிப்பாதை; canal (for imigation or transport). அணையிலிருந்து கால்வாய் களின் வழியாக நிலங்களுக்கு நீர் பாய்கிறது. 2. இரு நிலப்பகுதிகளை இணைக்கும் நீர்வழி; channel, canal. பனாமாக்கால்வாய் வடஅமெரிக்கா வுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே இருக்கிறது.

கால்வைத்தல் வி. (v.) 1. (முதல் முறை யாக) நுழைதல்; set foot (for the first time or after a long interval). மருமகள் நம் வீட்டில் கால் வைத்ததிலிருந்து வீடு கலகலப்பாக இருக்கிறது'. 2.நுழைதல் (தொழில் வணிகம் போன்ற துறைகளில்); enter (a field). அவர் கால் வைக்காத வணிகமே இல்லை என்று சொல்லலாம்'. கால அட்டவணை பெ. (n.) நேரம் குறித்த விளக்கப் பட்டியல்; (bus, train or school) time table; schedule. 'புறநகர் செல்லும் பேருந்துகளின் கால அட்டவணை.

காலம் காலமாக

165

காலணி பெ. (n.) 1. நடக்கும்போது காலுக்குப் பாதுகாப்பாகப் பாதத்தில் அணியும் செருப்பு முதலியவை; footwear (such as sandal, shoes, etc.,). ஏழைகளுக்கு இலவயமாகக் காலணிகள் வழங்கப்பட்டன'. 2.(பெண்கள்) காலில் அணியும் சலங்கை முதலிய அணிகள்; omaments (such as anklets, rings, etc.,) worn on the foot or ankle (by women). சிலம்பு என்னும் காலணியை வைத்து ஒரு காப்பியம்.

காலப்போக்கு பெ. (n.) I. காலம் கழிந்த நிலையில்; passage of time. சில நகரங்கள் காலப்போக்கில் நிலத்திற் கடியில் புதையுண்டன. 2. குறிப்பிட்ட காலத்தில் நிலவும் சூழ்நிலை; conditions and circumstance of the specified period. 'காலப் போக்கை உணர்ந்து வாழக் கற்றுக் கொண்டால் முதுமைக் காலம் இனிமை நிறைந்த தாக இருக்கும்'.

காலம் பெ. (n.) 1. (நொடி, நிமிடம்,மணி, நாள், மாதம், ஆண்டு முதலிய அளவுகளால் குறிப்பிடப்படுவதும் உலகம் தோன்றியதிலிருந்து இடை விடாது தொடர்வதுமான ஒன்று; (Generally) time. 'காலமும் தூரமும் ஒன்றுதான் என்பது இயற்பியல் உண்மை. 2. வாழ்தாள் ஏற்றதாகக் கருதப்படும் நேரம்; (time in one's life); right time (to do). காலம் வந்தால் எல்லாம் நடக்கும்’.

காலம் கடத்துதல் வி. (v.) ஒரு பணியை முடிக்காமல் காலத்தாழ்வு செய்தல்; delay; protract. 'அரசு காலம் கடத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலம் காலமாக வி.அ. (n.) தெடும்

காலமாக; for ages. 'காலம் காலமாக