பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

காற்றுவாக்கில்

மூச்சுயிர்க்கும் உலகைச் சுற்றி நிறைந்திருக்கும், கண்ணுக்குப் புலப்படாத வளிப் பொருள்; air, wind. மழையினால் காற்றில் ஈரப்பதம் கூடியிருக்கிறது'. 2. தாக்கம் ; influence. 'உன் மாமா இனிப்பு விரும்பி. அவர் காற்று உனக்கும் அடித்துவிட்டதா?. காற்றுவாக்கில் வி.அ. (n.) பிறர் சொல்லி; தற்செயலாக; by word of mouth. அவனுக்கு வேலை கிடைத்து விட்டது என்பதைக் காற்றுவாக்கில் கேள்விப்பட்டேன்.

air.

காற்றுவாங்குதல் வி. (v.) தல்ல காற்று வீசும் இடத்திற்குப் போய் காற்றைத் துய்த்தல்; enjoy fresh காற்றுவாங்கத் தினமும் நான் கடற்கரைக்கு வருகிறேன்'. காற்றோட்டம் பெ. (n.) தூய்மையான காற்று வந்து போகும்படியாக இருக்கும் நிலை; ventilation; free circulation of air. 'காற்றோட்டமே இல்லாத இந்த வீட்டில் எப்படி வசிக்கிறீர்கள்.

காறல் பெ. (n.) கசப்புச்சுவை; bitter taste. `பாகற்காய்க் கறி ஒரே காறலாய் இருக்கிறது.

காறிதுப்பு வி. (v.) வெறுப்பை வெளிக் காட்டும் வகையில் பழித்தல்; கீழ்மையாக நினைத்தல்; treat with utmost scom; spit. வீட்டை இப்படிக் குப்பையாகப் போட்டு வைத்திருக் கிறாயே? யாராவது பார்த்தால் காறி துப்பமாட்டார்களா?.

காறுதல் வி. (v.) 1. ஒலியுடன் வாய்க்குக் கொண்டு வருதல்; hawk. 'சளியைக் காறித்துப்பு. 2. கருணைக்கிழங்கு போன்றவற்றை உண்டவுடன்

அரிக்கும் உணர்வு ஏற்படுதல்; (of edible tubers) taste acrid (in the throat). இந்தக் கிழங்கை அவிக்காமல் சாப்

பிட்டால் காறும் என்று உனக்குத் தெரியாதா?

காறையெலும்பு பெ. (n.) கழுத்தின் கீழ் இரு பக்கமும் தோள் மூட்டுவரை அமைந்துள்ள எலும்பு; collarbone; clavicle.

கானல் நீர் பெ. (n.) வெப்பப் பகுதிகளில் அனல் காற்றால் நீரோடை ஒன்று ஓடுவது போலத் தெரியும் மாயத் தோற்றம்; mirage. 'வயல் வெளிகளில் கானல் பறந்தது.

கானாங்கெளுத்தி பெ. (n.) ஒரு வகை மீன்; mackerel (a kind of fish).

கானாங்கெளுத்தி பெரும்பாலும் கடலின் மேற்பரப்பில் காணப்படும்'.

கிச்சுக்கிச்சுத்தாம்பலம் பெ. (n.) மணலை ஒரு முழ நீளத்தில் சிறு கரை போலக் குவித்து வைத்து அதில் ஒருவர் குச்சியை ஒளிக்க மற்றவர் கையால் பொத்திக் கண்டுபிடிக்கும் சிறுவர் விளையாட்டு; a children's game for two in which one runs his fingers into the sand leaving a small stick which is to be found by an other by marking the area with his folded palms.

கிச்சுக்கிச்சு மூட்டுதல் வி. (v.) கையால் வருடிச் சிரிப்பு வரும்படி கூச்சம் உண்டாக்குதல்; tickle (so as to makeone laugh). 'குழந்தைக்குக் கிச்சுக்கிச்சு மூட்டிச் சிரிக்க வைத்தான்.

கிசுகிசு1

பெ. (n.) கமுக்கம் (அ) மெதுவாகச்சொல்லுதல்; tell (a secret) in whispering voice. 'அவருடைய காதில் ஏதோ கிசுகிசுத்ததும் அவர் முகம் மாறியது.

கிசுகிசு' பெ. (n.) புகழ் பெற்றவர்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பருவ இதழ்கள் முதலிய ஊடகங்களில் இடம் பெறும். உண்மை என்று உறுதியாகத் தெரியாத செய்திகள் அல்லது பொதுவாகப் பலர் பேசிக் கொள்வது;