பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

கிடப்பில் போடுதல்

கிடப்பில் போடுதல் வி. (v.) செயல் படுத்தாமல் அப்படியே வைத் திருத்தல்; put (a plan, etc.,) in cold storge; put something on ice. இரு ஆறுகளையும் இணைப்பதற்கான திட்டம் வெகுநாட்களாகவே கிடப்பில் போடப்பட்டுள்ளது'. கிடுக்கிப்பிடி பெ. (n.) விடுபட முடியாத படி கையாலோ காலாலோ பிடித்துக் கொள்கிற (அ) பின்னிக்கொள்கிற பிடி; vice like grip, wrenching hold. மற்போர்போட்டியில் அவனுடைய கிடுக்கிப் பிடியிலிருந்து யாரும் திமிற முடியாது.

கிடுகிடுத்தல் வி. (v.) I. வலுவாக அதிர்தல்; ஆடுதல்; (of wall, etc.,) shake. 'புகைவண்டி போகும் போதெல் லாம் வீட்டுச் சுவர் கிடுகிடுக்கிறது'. 2.நடுங்குதல்; tremble (with fear). இந்தக் கொடுங்கள்ளன் (கேடி) ஊரையே கிடுகிடுக்க வைத்து விட்டான்'.

கிடுகிடு பெ.அ. (adj.) தலைச்சுற்றல் ஏற்படக் கூடிய அளவுக்கு ஆழ முடைய; deep (enough to cause dizziness). கிடுகிடு பள்ளம்/கிடுகிடு பாதாளம்.

கிடுகிடு என்று வி.அ. (adv.) I. தடங்கல் எதுவும் இல்லாமல்; மளமளவென்று; (in doing something) quickly. 'நேரமாகிறது, கிடுகிடுவென்று புறப்படு'. 2. மிக விரைவாக; (indicating price) rapidly. 'நெல் விலை கிடுகிடுவென்று இறங்கிவிட்டது'. கிடைத்தல் வி. (v.) I. வாய்த்தல்; அமைதல்; get; be obtained. கல்லூரியில் படிக்கிற காலத்தில் எனக்குப் பல நண்பர்கள் கிடைத் தார்கள்'. 'கதைக்கு கரு கிடைத்தது'. 2. வந்து சேர்தல்; இயலுதல்; be obtainable; be available. 'நீ எழுதிய

கடிதம் கிடைத்தது'. 3. உருவாதல்; produce. 'இந்த மரத்தில் ஐம்பதுக்கும் குறையாமல் தேங்காய் கிடைக்கும்'.

கிடை பெ. (n.) 1. கால்நடைகளை அடைத்துவைக்கும் பட்டி; herd of cattle. ஆட்டுக் கிடையிலிருந்து இரண்டு ஆடுகள் ஓடிப்போய் விட்டன. 2. இருந்த நிலை, இருப்பு; state or condition (in which one is or was) அவன் கிடந்த கிடை என்ன?. கிடைமட்டம் பெ. (n.) தரைமட்டத்திற்கு இணையான நிலை; horizontal lying position. கடப்பாரையைக் கிடை

மட்டமாகவை'.

கிடையாது எ.வி.மு. (n.) ஒருவருக்கு ஒன்று பழக்கம் என்பதைத் தெரிவிக்கும் உடன்பாட்டுக் கூற்றில் 'உண்டு' என்னும் வினை வடிவத்திற்கு எதிர்மறையாக வருவது; anegation for உண்டு; in the sentence which expresses habituality. 'சினிமாவுக்குப் போவது கிடையாது.

கிண்டல் பெ. (n.) மதிப்புக்குறைவு படுத்தும் கேலி ; making fun (of something). *கரும்பலகையில் ஆசிரியரைக் கிண்டல் செய்யும் கிண்டல் சித்திரம் வரையப் பட்டிருந்தது. கிண்டுதல் வி. (v.) I. கிளறுதல்; புரட்டுதல்; stir, upside down. வெல்லப்பாகில் மாவைப் போட்ட வுடன் கரண்டியால் கிண்டவும்'. 2. துருவிப் பார்த்தல்; probe; poke. எழுதி வைத்திருந்த கணக்கில் ஐயம் ஏற்பட்டவுடன் அவர் என்னைக் கிண்டிக் கேட்கத் தொடங்கி ஆரம்பித்து விட்டார்.

கிண்ணம் பெ. (n.) 1. சிறிய வட்ட வடிவ ஏனம்; a small bowl; cup. இடியாப்பத்திற்கு ஒரு கிண்ணத்தில் தேங்காய்ப்பால் சேர்த்த குழம்பு மற்றொரு கிண்ணத்தில் பருப்பும் வைக்கப்பட்டிருந்தன . 2. தட்டை