பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யான சிறு குவளை; formerly goblet. அரசர்கள் பொற் கிண்ணத்தில் தேறல் ஊற்றி அருந்தினர்'.

கிணற்றுக்கட்டு பெ. (n.) கிணற்றுச்சுவரை ஒட்டிய பகுதி;parapet (wall) of a well. கிணற்றுக் கட்டில் எந்த ஏனத்தையும் வைக்காதே, உள்ளே விழுந்து விடும்'.

கிணற்றுத்தவளை பெ. (n.) தான் வாழும்

சூழலுக்கு அப்பால் உள்ள எதையும் அறியாதவர்; one who has no knowledge of things outside his or her own small sphere. 'சிற்றூரில் வாழ்கிறவர்கள் கிணற்றுத் தவளை களாக இருந்த காலம் போய் விட்டது'. கிணறு பெ. (n.) மண்ணைத்தோண்டி அகற்றி உண்டாக்கிய ஆழமான குழி; well. 'குடிநீருக்காக நிலத்து அடியில் வெட்டிய கிணறு'.

கிணறெடுத்தல் வி. (v.) 1. கிணறு தோண்டுதல் ; to dig or sink a well. 2.கிணறு தோண்டுதற்கேற்ற இடம் தேர்ந்தெடுத்தல்; to select a spot for a

well.

கிணுகிணுத்தல் வி. (v.) 1. சிறுவர்களைப் போல் சிணுங்குதல்; to whimper. 2.முணுமுணுத்தல்; to mumble, mutter. கிந்தி நடத்தல் வி. (v.) 1. முன்னங் காலால் உந்தி நடத்தல்; to walk on tip toe. 2. நொண்டி நடத்தல்; to hobble, limp. கிம்பளம் பெ. (n.) சம்பளமல்லாத கையூட்டுத் தொகை; bribe (as regular as one's salary). சம்பளம் மாதம் நானூறு ரூபாய், கிம்பளம் அறுநூறு ரூபாயா?.

கிராம்பு பெ. (n.) கருவா மரத்தின் இதழ்கள் விரியாத கரிய நிற மொட்டு; clove. 'கருவம்பூ நெய்ம்மருந்தைப் பல் வலிக்குப் பயன்படுத்துவார்கள். கிழங்கு பெ.(n.) I. வேர்பகுதி பருத்துக் கிழங்காக உண்டாகும் பயிரி வகை;

கிழித்தல்

171

tuber. 'உருளைக்கிழங்கு தண்டிலும் முள்ளங்கி வேரிலும் வளரும் கிழங்கு வகைகள் ஆகும்'. 2. உருளைக் கிழங்கோடு காரம் சேர்த்து தயாரிக் கப்படும் ஒருவகைத் தொடு கறி (பூரி, சப்பாத்தி); a side dish for poori. கிழடு பெ. (n.) அகவை முதிர்ந்தவரை மதிப்பு இல்லாமலோ அல்லது அகவையான விலங்கைப் புறக் கணிப்பாகக் குறிப்பிடப் பயன் படுத்தும் சொல்; (derogatory) aged person or animal. 'இப்போது அந்தக் கிழடுக்குக் காதும் கேட்பதில்லை'. கிழடுதட்டுதல் வி. (v.) வெளிப்படை யாகத் தெரியும் வகையில் முதுமைத் தோற்றம் ஏற்படுதல்; age (in a visible way). 'பழைய நாடக நடிகர் தற்போது கிழடுதட்டி இருக் கிறார்'.

கிழமை பெ. (n.) வாரம் என்பதன் தமிழ்ப் பெயர்; day (of the week). 'இன்று என்ன கிழமை?.

கிழவன் பெ. (n.) அகவை முதிர்ந் தவன்;வயதானவன்; old man.

கிழவி பெ. (n.) அகவை முதிர்ந்தவள், வயதானவள்; old woman. 'கிழவி ஒருத்தி (பாட்டி) போகும் இடம் தெரியாமல் நடுத்தெருவில் நின்று கொண்டிருந்தாள்.

கிழிதல் வி. (v.) (துணி, தாள் போன்றவை) ஓர் இடத்தில் பிரிதல் அல்லது பிரிந்து துண்டாதல்; be tom. சட்டை கிழிந்துவிட்டது'.

கிழித்தல் வி. (v.) 1. பெரிதாக ஓட்டை விழுமாறு செய்தல்; rip. 'துணிக் கடையில் துணி கிழிப்பது போல் என்னால் கிழிக்க முடியாது'. 2.உரசுதல்; strike (a match stick). எத்தனை தீக்குச்சியைத்தான் கிழிப்பது'. 3. (கிண்டலாகப்) பணி முடித்தல்; accomplish or achieve.