பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

கிழிசல்

காலையில் நான்கு மணிக்கே எழுந்து என்ன கிழிக்கப் போகிறாய்?'.

கிழிசல் பெ. (n.) 1. கிழித்திருப்பது; tear (in clothes). கிழிசல் தெரியாதபடி வேட்டி மடிக்கப்பட்டிருந்தது'.

2. கிழிந்த உடை; gament which is tom in some places; tattered garment, rag. 'ஏன் இந்த கிழிசலைப் போட்டுக் கொண்டிருக்கிறாய்?'.

கிள்ளுதல் வி (v.) 1. உகிரால்(நகத்தால்) நெருக்குதல், துண்டாக்குதல்; snip (a leaf, etc.,) வெற்றிலைக் காம்பைக் கிள்ள நினைத்தவர் பேசிக் கொண்டே புகையிலையைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டார்.' 2. நெருக்குதல் அழுத்துதல்; pinch. எங்கள் ஆசிரியர் கிள்ளினால் வலி பொறுக்க முடியாது'. 3. வலியுணர்வு உணர்தல்; வருத்துதல்; feel the pain (of hunger); affect, touch. காலையில் சாப்பிட வில்லை; பசி வயிற்றைக் கிள்ளு கிறது.

கிளப்புதல் வி. (v.) 1. இயங்கச் செய்தல்; start. ஓட்டுநர் பேருந்தைக் கிளப்பினார்.2. ஏற்படுத்துதல்; arouse, etc., நீரில் நஞ்சு கலந்துள்ளது என்ற பொய்ச் செய்தி ஊர் மக்களிடையே பீதியைப் கிளப்பியது'. 3.(எதிர்ப் பாகச் செயல்படுமாறு) தூண்டுதல்; incite. 'நீ கிளப்பி விட்டுத்தான் அவன் இந்த ஆர்ப்பாட்டம் செய்கிறான்.

4. மேலெழுதல்; raise. 'மெதுவாக மிசையைத் துடை, தூசியைக் கிளப்பாதே.

கிளம்புதல் வி. (v.) I. புறப்படுதல்; leave; set out; go out; start. 'சாப்பிட்டுவிட்டு

உடனே வெளியே கிளம்பினான்.

2.வெளிப்படுதல்; issue forth. துமுக்கியிலிருந்து சரமாரியாகக் குண்டுகள் கிளம்பின்.

கிளர்ச்சி பெ. (n.) I. உணர்ச்சிமயமான மனநிலை; எழுச்சி; arousal; upsurge; excitement of interest, etc.,) கனல் தெறிக்கும் பேச்சால் நான் அடைந்த உள்ளக் கிளர்ச்சியைச் சொல்ல

முடியாது.2.போராட்டம்; protest; agitation. ஊதிய உயர்வு வேண்டி அரசு அலுவலர்கள் கிளர்ச்சி செய்து வருகிறார்கள்.

கிளர்த்துதல் வி. (v.) வெளிப்படச் செய்தல்; தோற்றுவித்தல்; arouse (interest, fear, etc.,). பாடல் ஆர்வத்தையும் மகிழ்வையும் கிளர்த்தியது.

கிளர்தல் வி. (v.) (உணர்ச்சி முதலியவை ) வெளிப்படுதல்; தோன்றுதல்; (of anger feeling, etc.,) be aroused. உணர்வுகள் கிளந்திருக்கும் நிலையில் கவிதை பிறக்கிறது'.

கிளவி பெ. (n.) சொல் (பெரும்பாலும் இலக்கணத்தில்); (mostly in grammatical works) word.

கிளறுதல் வி. (v.) 1. கிண்டுதல்; stir; dig

around. வெல்லப் பாகில் மாவைப் போட்டவுடன் கரண்டியால் கிளற வும். 2. உருவாக்குதல்; make; prepare (by stirring). காலை உணவிற்கு உப்புமா கிளறிவைத்திருக்கிறேன்'. 3. மீண்டும் எழுப்புதல்; bring up. முடிந்து போன செய்தியைக் கிளறாதீர்கள்.

கிளி பெ. (n.) பச்சை வண்ணமாகவும்

பலரும் விரும்பும் வண்ணமாக இருக்கும் பறவை இனத்தைச் சேர்ந்த பறவை; parakeet; parrot.

கிளிஞ்சல் பெ. (n.) கடலில் வாழும் உயிரினம்; oyster or (its) shell. கடற் கரையில் கிளிஞ்சல் பொறுக்கலாம்'. கிளிஞ்சல் சுண்ணாம்பு பெ. (n.) சுட்டக்

கிளிஞ்சலில் நீர் ஊற்றிக் குழையச் செய்து பெறும் சுண்ணாம்பு; shell lime. கிளித்தட்டு பெ. (n.) தடுப்பவர் தொட்டு

விடாதபடி வந்து சேரும் பெண்கள்