பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டு; a game for girls in which they hop across cells drawn on the ground.

கிளுகிளுத்தல் வி. (v.) பாலுணர்வைத் தூண்டுதல்; titillate. 'வாசகர்களைக் கிளுகிளுக்க வைப்பது எங்கள் இதழின் நோக்கம் அல்ல'.

கிளுகிளுப்பு பெ. (n.) பாலுணர்வு தூண்டப்பட்ட நிலை; sexual excitement; titillation. 'அவளுடைய நடையே அவனுக்குக் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது'.

கிளைத்தல் வி. (v.) (மரத்திலிருந்து) பல பிரிவுகள் ஏற்படுதல்; கிளை விடுதல்; branch out. 'ஆலமரம் கிளைத்து அடர்த்தியாக இருந்தது'. 2. பெரு குதல்; branch off; multiply. குடும்பம் எப்படிக் கிளைத்துப் பெருகி விட்டது.

கிளை பெ . (n.) தண்டிலிருந்து பக்க வாட்டில் பிரிந்து இலை, பூ, காய் ஆகியவற்றைத் தாங்கியிருக்கும் பகுதி; branch (of a tree) bough. மரத்தில் ஏறிக் கிளைகளை வெட்டிப் போடு'. 2. வேறு இடத்தில் இயங்கும் பிரிவு; (of an institution) branch. 'எங்கள் வைப்பகத்தின் கிளைகள் நாடெங்கும் உள்ளன. 3.உட்பிரிவு; supplementary. 'கிளைக் கதை’.

கிறக்கம் பெ. (n.) கண்கள் செருகிக் கொள்ளும் மயக்க நிலை; stupor; drowsiness; languor. 'தூக்கக் கிறக்கம்'. கிறங்குதல் வி. (v.) I. நிலை தடுமாறுதல்;

மயங்குதல்; be in languor, stupor, etc., 2. சோர்வடைதல்; be languid. வெயிலில் நடந்து வந்ததால் குழந்தை கிறங்கிப் போய்விட்டான்'. கிறுக்கன் பெ.(n.) கோட்டிக்காரன்; பித்துக்கொளி; பைத்தியக்காரன்; lunatic; old nut. 'அந்தக் கிறுக்கன் யாரைக் கண்டாலும் சிரிப்பான். கிறுக்குதல் வி. (v.) I. படிக்க முடியாதபடி தெளிவு இல்லாமல் எழுதுதல்; write

கீழ்

173

illegibly; scrawl. 'பாடம் எழுதச் சொன்னால் இப்படியா கிறுக்குவது?. 2.(சிறு குழந்தைகள்) எழுதுவதான பாவனையில் கோடுகள் போடுதல்; (of children) scribble. சுவர் முழுதும் குழந்தை கிறுக்கி வைத்திருந்தது'. கிறுக்கு பெ. (n.) I. கோட்டி; insanity. அவனுக்குக் கிறுக்கு பிடித்து விட்டது.2.கோட்டி பிடித்தவர்; insane person. 3. மற்றவர்களிலிருந்து வேறுபட்ட வகையில் இயல்புக்கு மாறாக சிந்திப்பவர்; crazy (person) மற்றவர்கள் தங்களைக் 'கிறுக்கு' என்று சொல்வதுதான் சில கலைஞர் களுக்குப் பிடிக்கும்போல்' இருக் கிறது.

கிறுக்குத்தனம் பெ. (n.) முட்டாள் தனமாக நடந்துகொள்ளும் தன்மை; (of behaviour) madness. 'கிறுக்குத் தனமாக இப்போதே உன் காதலை அவளிடம் சொல்லிவிடாதே. கொஞ்சம் பொறுத்திருந்து பார்!. கிறுகிறுத்தல் வி. (v.) தன் நிலை (அல்லது) வயம் இழுத்தல்; be bewitched or charmed; swoon over. அந்த இளைஞனின் பாட்டைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனேன்'. கிறுகிறுப்பு பெ. (n.) தலைச்சுற்றல்;

மயக்கம்; giddiness; dizziness. வெயிலில் நடந்து வீட்டுக்குள் வந்ததும் கிறுகிறுப்பு அடங்கச் சிறிது நேரமாயிற்று'.

கீ

கிரியும் பாம்புமாக வி.அ. (adv.) மிகுந்த பகை உணர்வோடு ; asswom enemies. சொத்தைப் பற்றிப் பேசினாலே இருவரும் கீரியும் பாம்புமாகச் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். கீழ்' பெ. (n.) கிழக்கு; east. கீழ்த்திசை நாடுகள், கீழ்ப்பக்கம்'.