பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

கீழ்

கீழ்2 பெ. (n.) 1. தாழ்ந்த நிலை; தரக்குறைவு; being inferior or low. உங்களை விட நான் மிகவும் கீழ்நிலையில் இருக்கும் ஊழியன்'. 2. அடிப்பகுதி; lower or bottom part. கீழ் இமையில் மை தீட்டினாள். 3. குறைந்த பகுதி; minimum; lower (limit). இந்தப் போட்டியில் கலந்துக் கொள்பவர்களுக்குக் கீழ் எல்லையாக இருபது அகவை (வயது) நிர்ணயிக்கப் பட்டுள்ளது'. கீழ்த்தட்டு பெ.அ. (n.) அடித்தட்டு; (people in the) lower economic stratum. பேருந்துக் கட்டண உயர்வால் கீழ்த்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப் படுவார்கள்.

கீழ்த்தரம் பெ. (rn.) தரக்குறைவு; baseness, vulgarity. 'இப்படிக் கீழ்த்தரமாகப்

பேசுவான் என்று நான் நினைக்க

வில்லை.

கீழ்த்திசை பெ. (n) கிழக்கு (திசை)

ஆசியப் பகுதி; east; oriental. 'கீழ்த்

திசை நாடுகளில் பொருளியல் முன்னேற்றம் என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.

கீழ்நிலைத் தொட்டி பெ. (n.) நிலத்தைத் தோண்டிக் கட்டப்படும் தொட்டி போன்ற அமைப்பு; underground storage tank, sump.

கீழ்ப்படிதல் வி. (v.) பணிதல்; obey; submit. கட்சிக் கட்டுப்பாட்டுக்கு கீழ்ப் படிந்து தொண்டர்கள் செயல்பட வேண்டும்.

கீழ்ப்படு(த்)தல் வி. (v.) உட்படுதல்; அடங்குதல்; come under; be included. 'பத்து அகவைக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகள் இந்த ஓவியப் போட்டியில் கலந்துகொள்ளலாம்'. கீழ்பாலம் பெ.(n.) பாலத்தின் கீழ் குறுக்குவாக்கில் அமைந்த பாதை; subway.

கீழ்மடை பெ. (n.) தண்ணீர் கடைசியாகச் சென்றடையக் கூடிய பாசனப் பகுதி; கடைமடை; the lower area of an irrigation far removed from the water sources. 'எனது வயல் கீழ்மடையில் இருப்பதால் ஏரித் தண்ணீரை நம்பி உழவு செய்ய முடியாது'.

கீழ்மை பெ. (n.) இழிவு; lowliness; meanness. சில நேரங்களில் மாந்தர் களின் கீழ்மைக் குணம் வெளிப் படுகிறது.

கீழ்வாரம் பெ. (n.) நிலத்தை உள் குத்தகைக்கு விடுதல்; the practice of subletting farm land.

கீழினம் பெ. (n.) பெரிய அளவீடுகளுக்குச்

சமமாகக் குறிக்கப்படும் சிறிய அளவீடுகள்; lower denomination. 2.5 மீட்டரின் கீழினம் 2500 மில்லி மீட்டர் ஆகும்.

கீழுலகம் பெ. (n.) நிலத்துக்கு அடியில் இருப்பதாக நம்பப்படும் உலகம்; the mythical world below the earth.

கீழே வி.அ. (adv.) 1. தரையில், நிலத்தில்; below, on the ground or floor. மரத்திலிருந்து கீழே இறங்கு' 2.குறைவாக; below. 'குளிர்காலத்தில் வெப்பநிலை சராசரி வெப்ப நிலையைவிடக் கீழே செல்கிறது'.

கீற்று பெ. (n.) I. முடைந்த தென்னை ஓலை; கிடுகு; plaited coconut leaf (used for roofing). கீற்றுக் கொட்டகை வெயிலுக்கு இதமாக இருந்தது' 2.நீளவாக்கில் அறுத்து எடுத்த துண்டு; slice. ஒரு பூசணிக் கீற்று வாங்கி வா'. 3. கற்றை; beam, ray. 'உடைந்த கண்ணாடியில் எதிரொளி ஒளிக் கீற்று.4.கோடு; வரி; streak or line (of sacred ash sandal paste, etc., on the forehead). அவன் நெற்றியில் சந்தனக் கீற்று தெரிந்தது.

கீறல் பெ. (n.) ஒன்றோடு ஒன்று (அ)கூர்ப்பகுதி உராய்வதால் ஏற்படும்