பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடு; scratch; incision, slit. 'சில வகை மரங்களில் கீறல் ஏற்படுத்திப் பிசின் வடிக்கிறார்கள்.

கீறுதல் வி. (v.) 1. கிழித்தல்; scratch. வேலியைத் தாண்டும்போது காலில் முள் கீறிவிட்டது'. 2. கோடு போல் நீளவாக்கில் வெட்டுதல்; make a cut in; incise; cut open. மருத்துவர் கட்டியைக் கீறிவிட்டு மருந்து வைத்து கட்டினார். 3. (தேங்காய் முதலிய வற்றின்) கீற்று எடுத்தல்; slice. கத்தியால் தேங்காய் மூடியைக் கீறிப் போட்டார்.

கு

குக்கிராமம் பெ. (n.) ஏந்துகள் குறைந்த மிகச் சிறிய சிற்றூர்; hamlet, small village.

குகை பெ. (n.) மலையில் இயற்கையாக அமைந்துள்ள பொந்து அல்லது நீண்ட வழி; cave (wild animals's) den. குகையில் வாழ்ந்த மாந்தர்கள். குச்சி பெ. (n.) I. மெல்லிய கிளை, சிறிய கோல்; twig. வேப்ப மரத்திலிருந்து ஒரு குச்சியை ஒடித்து வந்து மாட்டை விரட்டினான்'. 2. தீக்குச்சி; (safcty) match. 'தீப்பெட்டியில் குச்சியே இல்லை.

குச்சிக்கிழங்கு பெ. (n.) I. பனங்கிழங்கு; edible shoot growing from palmyra seed. கிழவி வேக வைத்த குச்சிக் கிழங்கை விற்றுப் பிழைப்பு நடத்துகிறாள்'. 2. மரவள்ளிக் கிழங்கு; tapioca. குச்சு பெ. (n.) ஓலையால் வேயப்பட்ட சிறிய அமைப்பு கொண்ட குடிசை; a small hut with a thatched roof;

shanty - குச்சு வீட்டுக்குக் கூட, வகை யில்லாமல் இருக்கிறான்.

குச்சுப்புடி பெ.(n.) நாட்டிய நாடக மரபில் ஆந்திரமாநிலத்தில் தோன்றி முதலில் ஆண்களால் ஆடப்பட்ட, தற்போது பெண்களாலும் ஆடப்படும் நாட் டியம்; the dance drama tradation

குட்டி

175

originating in Andhra Pradesh, practised earlier by men and now by women too.

குச்சுமட்டை பெ. (n.) திரிதிரியாக நுனி நசுக்கப்பட்ட, ஒரு வகை மரத்தின் மட்டை அல்லது தாழை நார்;

brush like stick used in white - washing. குசுகுசுத்தல் வி. (v.) காதில் மெல்லப் பேசுதல், கிசுகிசுத்தல்; whisper (something into one's ears). அவன்

காதில் என்ன குசுகுசுக்கிறாய்?'. குஞ்சு பெ. (n.) 1. இளம் உயிர் (பறவைகள், மீன்) குட்டி (எலி, அணில்); theyoung ones (ofbirds, fish, etc., that lay eggs or of some species such as mouse; squirre1. 2. ஆணின் பிறப்புறுப்பு; (male child's) genital

organ.

குஞ்சு குளுவான் பெ. (n.) வெவ்வேறு அகவையில் உள்ள குழந்தைகள்;a group of children of different ages; a gathering of kids. 'கல்யாண மண்டபம் குஞ்சு குளுவான்களின் ஒலியால் அதிர்ந்தது.

குஞ்சுபொரித்தல் வி (v.) தாய் கோழியின் உடல் சூடு பட்டு உண்டாக்கி முட்டை யிலிருந்து குஞ்சு வெளிவருதல்; hatch. 'கோழி நேற்றுதான் குஞ்சு பொரித்தது.

குட்டி பெ. (n.) I. (நாய், புலி போன்ற) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த சில விலங்குகளுக்கு அல்லது பாம்பு போன்றவற்றுக்குப் பிறக்கும் இளம் உயிர்; the young ones (of certain mammals and certain reptiles); 'ஆட்டுக் குட்டி, யானைக்குட்டி'. 2. சிறுமி; little girl. இந்த குட்டிக்குப் பத்து வயது இருக்குமா?. 3. இளம்பெண்; young women; chick. 4. குறைந்த அகவையு (வயது)டைய; இளம்; young or little. குட்டி இளவரசன்' . 5. நேரம் குறைவான, குறைந்த அளவான; short.