பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

குட்டிக்கரணம்

குட்டிக் கட்டில், குட்டித் தூக்கம்'. 6. சிக்கல் இல்லாத சிறிய; மிக விரைவாக இல்லாத; simple; not very complicated. 'குட்டிக் கணக்கு'. குட்டிக்கரணம் பெ. (n.) தலையைத் தரையில் ஊன்றிக் கால்களைத் தலைக்கு மேலாக மறுபுறம் தூக்கிப் போட்டு சுழன்று எழுதல்; somer sault. *குரங்கைக் குட்டிக் கரணம் அடிக்க வைத்துக் காசு வாங்கினான்.

குட்டிச்சுவர் பெ. (n.) இடிந்துபோய் பயனற்றதாக இருக்கும் சிறு சுவர்; dilapidated wall. 'குட்டிச்சுவர் அருகில் கழுதை நிற்கிறது'. 2.சீரழிவு; ruin. அவன் இப்படிக்குக் குட்டிச்சுவராகப் போனதற்குக் காரணமே குடிப்பழக்கம்தான். குட்டிபோடுதல் வி. (v.) (மாடு, ஆடு, யானை) குட்டி ஈனுதல்; (of mammals calve. 'குட்டிப் போட்ட பூனைமாதிரி வீட்டைச்சுற்றிச்சுற்றிவருகிறான். குட்டிவை பெ. (n.) அடக்கி வைத்தல்; கட்டுப்படுத்துதல்; control (something who exceeds his or her limit). அவன் அதிகமாகத் துள்ளுகிறான்'.

கொஞ்சம் குட்டி வைத்தால்தான் சரிப்படுவான்.

குட்டுதல் வி. (v.) குத்துதல், தட்டுதல்; rap with the knuckles (on the head) or tap

(on the temples). வீட்டுக்கணக்கு செய்து கொண்டு வராத மாணவனின் தலையில் ஆசிரியர் ஓங்கிக் குட்டினார்.

குட்டுபெ. (n.) விரல் முட்டியால் விழும் குத்து; a hit with knuckles (on the head). அம்மா தம்பியின் தலையில் நறுக்கென்று ஒரு குட்டு வைத்தாள்'. குட்டு' பெ. (n.) தவறான செயல்; deceit. அமைச்சரின் செயலாளர் என்று கூறிக்

கொண்டு வைப்பகத்தில் நிறைய கடன் வாங்கினார். பிறகு குட்டு வெளிப்பட்டுச் சிறைப்பட்டார்'. குட்டை' பெ. (n.) உயரத்தில் குறைவு; shortnessmess, shorter. Lura சற்றுக் குட்டைதான்.

குட்டை2 பெ. (n.) குறைந்த அளவில் நீர் தேங்கிக் கிடக்கும் இடம்; (கரை இல்லாத) ஆழமற்ற குளம்; (shallow pond; pool. ஆடுமாடுகள் இந்தக் குட்டையில் தண்ணீர் குடிக்க வரும்'. குட்டையைக் குழப்புதல் வி. (v.) குளறுபடி செய்தல்; add to the confusion; muddle up. 'ஏற்கனவே இங்கே எல்லாம் குழப்பமாக இருக்கிறது. மேலும் குட்டையைக் குழப்பாதே!. குடக்கூலி பெ. (n.) (குடிக்கூலி)

வீட்டுக்குத் தரும் வாடகை; house rent. குடம் பெ. (n.) I. வாய்க் குறுகிய பெருத்த ஏனம்; pot. 'குடத்தில் ஓட்டை விழுந்து விட்டது'. 2. உருண்டையான உள்ளீடற்ற பகுதி; gourd like part in certain musical instruments). 'வீணைக் குடம்'.

குடமிளகாய் பெ. (n.) நீளம் குறைந்த, சற்றுப்பருமனான, காரம் குறைந்த ஒரு வகை மிளகாய்; capsicum; bell pepper. கடற்கரையில் குடமிளகாய் தோய்ச்சி (பஜ்ஜி) விற்றுக் கொண்டிருந் தார்கள்.

குடமுழக்கு பெ. (n.) (கும்பாபிஷேனம்) புதிய கோயில்களுக்கு அவற்றின் கலசங்களில் தூய்மையான நீர்ஊற்றிச் செய்யப்படும் சடங்கு; consecration ceremony for newly constructed or renovated temples in which sanctified water is poured over the crown of towers and of other structures.

குடல் பெ. (n.) இரைப்பையிலிருந்து வரும் உணவில் உள்ள சாரத்தை உறிஞ்சி குருதியில் சேர்த்தல், கழிவுகளை