பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலவாய்க்கு அனுப்புதல் ஆகிய செயல்களைச் செய்யும் நீண்ட குழல் போன்ற உறுப்பு; bowel; intestine. குடல் தட்டுதல் வி. (v.) வயிற்றைக் கையால் தடவிவிட்டுக் குடல் பிறழ்வை ஒழுங்குபடுத்துதல்; push the bowels in to place by massaging. குடல்புண் பெ. (n.) உணவுக் குழல், இரைப்பை, குடல் முதலியவற்றில் ஏற்படும் புண்; ulcer in the stomach. குடல்வால் அழற்சி பெ. (n.) குடல்வால் தொற்றுக்கு உள்ளாவதால் ஏற்படும் உடல் நலக்குறைவு; appendicitis. முற்றிய குடல்வால் அழற்சிக்கு அறுவைச் சிகிச்சைதான் ஒரே வழி. குடலிறக்கம் பெ. (n.)

வயிற்றின் உள்ளுறுப்புகளை தாங்கியிருக்கும் தசை கிழிந்து அதன் வழியே குடல் சிறு அளவில் விதைப் பையில் இறங்கியிருத்தல்; hemia.

குடலுறிஞ்சி பெ. (n.) உணவிலிருந்து சத்துகளை உறிஞ்சுவதற்காகச் சிறு குடலில் பெரும் எண்ணிக்கையில் மெல்லியதாக அமைந்திருக்கும் விரல் வடிவ நீட்சி; villus.

குடலேற்றம் பெ. (n.) (குழந்தைகளுக்கு) குடலின் கீழ்ப்பகுதி மேல் பகுதிக்குள் சென்று அடைப்பை ஏற்படுத்தும் நேர்த்தியான நிலை; a medical condition in which the distal portion of the intestine goes in to the proximal portion causing obstruction (in children). குடலை பெ. (n.) ஓலையால் பின்னப் பட்ட நீள் உருண்டை வடிவக்கூடை; long cylindrical basket made of plaited palm leaf (of collecting flowers) ‘பூக்குடலை'.

குடலைப் பிடுங்குதல் வி. (v.) I. (பசி) வயிற்றைக் கடுமையாக வருத்துதல்; (of hunger) pinch the bowels. 'குடலைப் பிடுங்கும் பசி, கண்ணைத் திறக்க முடியவில்லை. 2. வாயாலெடுக்கும்

குடி

177

உணர்வு ஏற்படுதல்; benauseous. பிண நாற்றம் குடலைப் பிடுங்குகிறது. குடவண்டிபோடுதல் வி. (v.) பெரும் பாலும் (மாட்டு வண்டி) குடை சாய்தல்; overtum.

குடவரைக் கோயில் பெ. (n.) மலைப் பாறையைக் குடைந்து சிற்பங்கள் செதுக்கிய மண்டபம் போன்ற அமைப்பு ; rock cut temple.

குடவிளக்கு பெ. (n.) I. சிறு குட வடிவ விளக்கு; lamp which is shaped like a small pot. 2. மணவறையில் தென் கிழக்கு மூலையில் குடத்தின் மேல் வைக்கப்படும் விளக்கு; a lighted lamp placed over a pot in the south east corner of the wedding stage.

குடவோலை முறை பெ. (n.) (முற் காலத்தில்) பெயர் எழுதிய ஓலை நறுக்குகளைக் குடத்தில் போட்டுக் குலுக்கி எடுப்பதன் மூலம் ஊர் நிர்வாக உறுப்பினர்களைத் தேர்ந் தெடுக்கும் முறை; (in former times) a method of selecting members for the village council in which pieces of palmyra leaf with names of eligible candidates are put into a pot for selection by draw. குடற்புழு பெ. (n.) குடலில் இருந்து கொண்டு உணவில் உள்ள சத்துகளை உறிஞ்சி வாழும் உயிரினம்; wom (found in the intestine). 'வயிற்றில் குடற்புழு இருக்கும் என்று நினைக் கிறேன். அதனால்தான் உன் மகன் இப்படி இளைத்துவிட்டான்'.

குடி' பெ. (n.) I. குடித்தல் (அ) குடிக்கும் பழக்கம்; act of drinking or habit of drinking (alcohol). 'அவனுக்குக் குடிப்பழக்கம் கிடையாது'. 2. மது பானம் குடிப்பதால் ஏற்படும் வெறிமயக்கம்; intoxication. குடியில் ஏதாவது உளறுவான்.