பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

குடி

குடி- பெ.(n.) 1. குடிமகன்; citizen. குடிமகனின் நலனே அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்'. 2. குடும்பம்; family. 'குடி கெடுத் தவன் என்ற பெயரை வாங்காதே!' 3.குலம்; clan. 4. குடித்தனம்; tenant. இந்த வீட்டில் எட்டுக்குடிகள். குடிகாரன் பெ. (n) (அளவுக்கு மிஞ்சி) மதுபானம் குடிப்பவன்; drunkard;

alcoholic.

குடிகொள்ளுதல் வி. (v.) நிலையாகத்

தங்குதல்; (of deity) dwell; (of thought, memory, etc.,) occupy (one's mind). குன்றில் குடி கொண்ட முருகன். குடிசை பெ. (n.) அதிகம் உயரம் இல்லாத மண் சுவரின் மேல் ஓலையால் வேயப்பட்ட கூரை உடைய சிறு வீடு;

hut.

குடிசைத் தொழில் பெ. (n.) எளிமையான எந்திரங்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யப்படும் சிறு தொழில்; cottage industry. 'காளான் வளர்ப்பு ஒரு குடிசைத் தொழிலாகச் செய்யப்படுகிறது.

குடித்தல் வி (v.) 1. உட்கொள்ளுதல்; take (liquid food); drink. 'மருத்துவர்கஞ்சி மட்டும்தான் குடிக்கச் சொல்லி யிருக்கிறார். 2. மது அருந்துதல்; drink alcohol. அவர் குடித்திருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது'. 3. உறிஞ்சுதல்; absorb (ink, etc.,) இந்தத் தாளில் எழுத வேண்டாம். இது நிறையமை குடிக்கிறது. 4. அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்திக் கொள் ளுதல்; (of vehicles) consume more fuel than necessary.

வருவாயில் குடித்தனம் நடத்துவது பெருந் துன்பமாகும்'. 2. வாடகைக் குடியிருப்பு; state of being a tenant. இந்த வீட்டில் மூன்று குடித்தனங்கள் உண்டு'.

குடிநீர் பெ. (n.) மாத்தர்கள் (மனிதர்கள்) குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர்; drinking water.

குடிப்பிறப்பு பெ. (n.) ஒருவர் கல்வி கேள்விகளில் சிறந்த குடி; ancestry; (noble) lineage.

குடிபடை பெ. (n.) (அரசனின்) குடி மக்கள்; (king') subjects; countrymen. 'மன்னரின் முடிசூட்டு விழாவைக் குடிபடைகள் கொண்டாடினர்'

குடிபுகுதல் வி. (v.) (ஒரு வீட்டில்) வசிக்கத் தொடங்குதல்; move to a new home. வீடு வாடகைக்கு எடுத்து நல்ல நாளில் குடிபுகுந்தோம்'.

குடிபெயர்தல் வி. (v.) ஓர் இடத்தை விட்டு வேறொரு இடத்துக்கு வாழச் செல்லுதல்; migrate. 'நிலத்தை இழந்த உழவர்கள் நகர்ப்புறத்திற்குக்

குடிபெயர்ந்துவிடுகிறார்கள். குடிபோதல் வி. (v.) 1. குடிபுகுதல்; move in

(to a new house). அவர்கள் அந்த வீட்டுக்குக் குடிபோய் ஐந்து நாள்கள் தான்ஆகிறது.

குடிபோதை பெ. (n) (அளவுக்கு அதிகமாக) மது அருந்துவதால் ஏற்படும் தன்நினைவற்ற நிலை; state of being drunk; drunkenness. குடிபோதையில் ஊர்திகளை ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். குடிமக்கள் பெ. (n.) ஒரு நாட்டில் வாழ்வதற்குக் குடியுரிமை உடைய மக்கள்; citizens; subjects.

குடித்தனக்காரர் பெ. (n.) வீட்டில் குடிமகன் பெ. (n.) ஒரு நாட்டில் நிலையாக

வாடகைக்குக் குடியிருப்பவர்; tenant. குடித்தனம் பெ. (n.) 1. குடும்ப

வாழ்க்கை; domestic life. 'குறைந்த

வாழும் குடிமக்களில் ஒருவர்; citizen. ஒவ்வொரு மாணவனும் நல்ல குடிமகனாக உருவாக வேண்டும்'.