பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிமுழுகுதல் வி. (v.) கேடு விளைதல்; அழிவு ஏற்படுதல்; இழப்பு ஏற்படுதல்; be lost; be desperate. 'ஒரு வேளை சாப்பிடாவிட்டால் குடிமுழுகி விடாது. அப்படி என்ன குடிமுழுகிப் போகிற செய்தி'. குடிமைப்பணி பெ. (n.) நாட்டின் பொது நிருவாகம் சட்டம் ஒழுங்கு பாது காத்தல் போன்ற பொறுப்புகளை மேற்கொள்ளும் ஒன்றிய அரசுப் பணி; civil service. 'இந்திய குடிமைப் பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு நேற்றைய செய்தித்தாளில் வந்துள்ளது.

குடியுரிமை

179

குடியரசுத் தலைவர் ஆட்சி பெ. (n.) (இந்தியாவில்) அரசியல் சட்டப் படியான அமைப்பு ஒரு மாநிலத்தில் செயலிழக்கும்போது

அதன் நிருவாகத்தைக் குடியரசுத் தலைவர் தானே மேற்கொண்டு நேரடியாகச் செயல்படுத்தும்

ஆட்சி;

the

assumption of the functions of a state government by the President of India during failure of consititutional machinery in that state.

குடிமைப் பொருள் பெ. (n.) அன்றாட குடியரசுத் துணைத் தலைவர் பெ. (n.)

வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள்; civil supplies. 'குடிமைப் பொருள் வாணிபக் கழகம்'. குடியமர்தல் வி. (v.) குடியேறுதல்; leave one's place and settle in another place or country; immigrate. எங்கள் முன்னோர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன் குசராத்திலிருந்து வந்து தமிழகத்தில் குடியமர்ந்தார்கள். குடியமர்த்துதல் வி. (v.) தங்க வைத்து வாழச் செய்தல்; குடியேறுதல்; settle (something in a place or country). புயலால் வீடு இழந்தவர்கள் அகதிகள் முகாமில் தற்போது குடியமர்த்தப் பட்டுள்ளனர்.

குடியரசு பெ. (n.) மக்களால் தேர்த் தெடுக்கப்படும் தலைவர்கள் ஆட்சி செய்வது என்ற அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியல் அமைப்பு; Republic.

குடியரசுத் தலைவர் பெ. (n.) (இந்தியாவில்) மாநிலங்களின்சட்ட மன்றங்கள், பாராளுமன்றம் ஆகிய வற்றின் உறுப்பினர்களால் தேர்ந் தெடுக்கும் அல்லது (சில நாடுகளில்) மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக் கும் நாட்டின் தலைமை நிருவாகி; (of the republic) president.

(குடியரசுத் தலைவர் பார்க்க) (சில நாடுகளில்) மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் நாட்டின் துணைத் தலைமை நிர்வாகி; (of the republic)


Vice-President.

குடியானவர் பெ.(n.) வேளாண்தொழில் செய்பவர்; farmer, farm labourer. குடியிருத்தல் வி. (v.) வாழ்க்கை நடத்துதல்; வசித்தல்; take up residence (in a house); live (in a place). 'நாங்கள் இன்னமும் வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறோம்'.

குடியிருப்பு பெ. (n.) I. வசிப்பதற்காக ஒரே மாதிரியாகக்கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு; வீடுகள் கொண்ட பகுதி; group of flats; residential house; colony. சென்னை புறநகர்ப் பகுதியில் பல பெயர்களில் பல குடியிருப்புகள் இருக்கின்றன. 2. ஓர் இனத்தவர் தமக்கென்று இருப்பிடங்கள் அமைத் துக் கொண்டு வாழும் பகுதி; settlement. பழங்குடி மக்கள் குடியிருப்பு

குடியுரிமை பெ. (n.) I. ஒரு நாட்டில் ஒருவர் வாழ்வதற்கான உரிமை; citizenship. மக்களின் குடியுரிமையை மதிக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு'. 2. அயல்நாட்டில் பிறந்தவர் ஒரு நாட்டின் குடிமகனாக வாழ்வதற்கு