பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

குடியெழுப்புதல்

அந்த நாட்டின் அரசு அளிக்கும் உரிமை; citizenship.

குடியெழுப்புதல் வி. (v.) வாழும் இடத்தை விட்டு மக்களை வேறு இடத்துக்குப் போகச் செய்தல்; evacuate. 'இராணு வத்தினர் மக்களைக் கிராமத்தை விட்டு குடியெழுப்பினார்கள்.'

குடியேற்றம் பெ. (n.) ஒரு நாட்டில் குடியேறி வசிக்க மேற் கொள்ளும் செயல்பாடு;

immi-gration,settlement. ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் தமிழர்களின் குடியேற்றம் அதிகரித் திருக்கிறது.'

குடியேற்றுதல் வி. (v.) ஓரிடத்தில் வாழச் செய்தல்; colonize; settle.

குடியேறுதல் வி. (v.) I. நிலையாகத் தங்குதல்; emignate; move to another country, town, etc., migrate. 'சிற்றூர் (கிராம) மக்கள் வறட்சியின் காரணமாக நகரங்களில் குடியேறு கின்றனர்.2. குடிபுகுதல்; move in; occupy; dwell. இந்த வீட்டில் இன்னும் யாரும் குடியேறவில்லை'. குடுகுடுப்பைக்காரன் பெ. (n.) குடு குடுப்பையை ஆட்டிக்கொண்டு வீடுவீடாகச் சென்று குறி சொல்லிப் பிழைப்பவன்;

fortune-teller with a kudukuduppai in his hand.

குடும்ப அட்டை பெ. (n.) உணவுப் பொருள்கள், மண்ணெண்ணெய் முதலியவற்றைப் பொது வழங்கீடு திட்டத்தில் முறையான விலையில் பெற அரசாங்கத்தால் குடும்பத்திற்கு ஒன்று என்ற கணக்கில் வழங்கப்படும் (உறுப்பினர்களின் எண்ணிக்கை, வருமானம் முதலியவை பதிவு செய்யப்பட்ட) குறிப்பேடு; card given under the public distribution system to a family by the government against, which essential things can be had at fair price (in India) ration card.

குடும்ப அரசியல் பெ. (n.) மரபுரிமைகள் (வாரிகள்) அவற்றைக் கைக்கொண்டு (கட்சியின் பொறுப்புகள்) நடத்தும் அரசியல்; nepotism in the management of a party organization. 'குடும்ப அரசியலின் காரணமாகக் கட்சி பிளவுற்றது'.

குடும்ப ஓய்வூதியம் பெ. (n.) அரசுப் பணியிலிருக்கும் ஒருவர் இறந்த பிறகு அவர் மனைவிக்கு அல்லது கண வனுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியம்; family pension.

குடும்பக் கட்டுப்பாடு பெ. (n.) (குடும்ப அளவு சிறியதாக அமைய) கருத்தடை மூலம் குழந்தைகள் பிறப்பதைத் தடுக்கும் ஏற்பாடு; family planning. குடும்பத்தலைவர் பெ. (n.) (பெரும் பாலும்) பொருளீட்டுபவராக இருந்து ஒரு குடும்பத்தைப் பேணுபவர்; male head (of a family).

குடும்பத் தலைவி பெ. (n.) (பெரும் பாலும்) பொருளீட்டுபவராக இருந்து ஒரு குடும்பத்தைப் பேணும் பெண்; female head (of a family).

குடும்ப நீதிமன்றம் பெ. (n.) மணவிலக்கு, பேணுகைப்படி போன்ற குடும்ப வழக்குகளை ஆராயும் நீதிமன்றம்; family court. குடும்பம் பெ. (n.) I

கணவனும், மனைவியும் தம் குழந்தையோடு (சில சமயம் தங்கள் பெற்றோரோடு அல்லது உடன்பிறந்தவரோடு) கூடி வாழும் குமூக ஏற்பாடு; family. என் பெற்றோரையும் சேர்த்து என் குடும்பத்தில் எட்டுப் பேர். 2.குடித்தனம்; வாழ்க்கை ; family life. இந்த வருமானத்தில் எப்படிக் குடும்பம் நடத்துவது?'. 3. ஒத்த பண்புகளை உடைய மொழிகளை உள்ளடக்கிய பிரிவு; (of languages) family. தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்றவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும்'.