பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பி பெ. (n.)I.(பெரிய) குடும்பத்தை ஆளுகை பொறுப்பு உள்ளவன்; man having the responsibility of managing a (large family. 2. குடுமி பார்க்க; see kudumi. 3. காது குறும்பி; ear wax. குடுமி பெ. (n.) (கொண்டைபோல் முடிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு) ஆண்கள் வளர்த்திருக்கும் தீண்ட முடி; (of man) tuft of hair. 'இத்தனை நாளும் குடுமி வைத்திருந்தவர் இன்று அதை மாற்றி கிராப் வைத்திருக்கிறாரே!' 2.தேங்காயின்மேல்கூம்பு வடிவத்தில் இருக்கும் நார்க்கற்றை; tuft of fibre (of coconut). குடுமியைப் பிய்த்து விட்டால் தேங்காய் சீக்கிரம் கெட்டுப் போகும்'.

குடுமிப்பிடிச் சண்டை பெ. (n.) மற்றவர்

களின் கேளிக்கு உள்ளாகும் தரக் குறைவானசண்டை; demeaning quarel (between to person). மேலதிகாரிக்கும் ஊழியருக்கும் நடந்த குடுமிப்பிடிச் சண்டையைப் பார்த்து அலுவலகமே சிரித்தது'.

குடுவை பெ. (n.) அடிப்புறம் அகண்ட நீண்ட கழுத்துள்ள ஏனம் ; (mud) vessel with round bottom and long neck; (grass) flask (in a laboratory). மண் குடுவையில் குடிக்க நீர் வைத் திருக்கிறேன்'.

குடைச்சல் பெ. (n.) (கை, கால், மூட்டு முதலிய இடங்களில் உண்டாகும்) குடைவது போன்ற வலி; grawingpain (in the limbs, joints, etc.,). மூட்டில் ஒரே குடைச்சலாக இருக்கிறது' குடை சாய்தல் வி. (v.) ஒரு பக்க மாகவோ,

தலைக்கீழாகவோ விழுதல்; (of bullock cart vehicles) overtum. 'காளைகள் மிரண்டதால் வண்டி குடை சாய்ந்து பள்ளத்தில் உருண்டது.

குடை பெ. (n.) 1. துணி பொருத்தப்பட்டு மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும்

காத்துக்கொள்ள கையில் பிடித்துச்

குண்டாந்தடி

181

செல்லும் கருவி; umbrella. 2. நிழல் தருவதற்கு வண்ணத் துணிகளால் போடப்படும் அமைப்பு (கோயில் களில் அல்லது திருமணம் முதலிய நிகழ்ச்சிகளில்) a structure covered with colourful clothes to provide shade (at festival time); parasol.

குடைதல் வி. (v.) I. துளைத்து ஊடுரு வுதல்; (ofsome birds, beetles, etc.,) make holes. 'சில வண்டுகள் மரத்தையும் குடைந்துவிடும்'. 2. (கருவியால் மரச் சாமான்களை அல்லது மலை, பாறை போன்ற வற்றை) துளைத்தல்; tunnel (through a hill); bore. 'மலையைக் குடைந்து தொடரிப் பாதை அமைக்கத் திட்டம் '. 3. துருவித் துருவித் தேடுதல்; burrow (into old things). அவரால் சற்று நேரம் கூடச் சும்மா இருக்க முடியாது. எதையாவது குடைந்து கொண்டே இருப்பார்'.

குடைராட்டினம் பெ. (n.) I. (திருவிழா நடக்கும் இடங்களில்) பெரிய குடை போன்ற அமைப்பின் கீழ்த் தொங்கவிடப்பட்ட பல (வடிவ) இருக்கைகளில் (சிறுவர்) ஏறிச் சுற்றிவரும் விளையாட்டுக் கருவி;

merry -

go - round.

குண்டர் பெ. (n.) குமுகப் பகைச் செயல்களில் இறங்குபவர்; hooligan; (in India) goonda. குண்டர் தடுப்புச்சட்டம்'. குண்டலம் பெ. (n.) சிறு குண்டோ மணியோ தொங்கும் காதணி ; a spherical pendant (worn on the ear by kings and sages in olden days).

குண்டன் பெ. (n.) பருத்து இருப்பவன்; stout (and strong) person. 'இந்தக் குண்டன் ஒரு குத்து விட்டால் எலும்பு நொறுங்கிப்போகும்'.

குண்டாந்தடி பெ. (n.) சற்றுப் பருமனான

சிறு கைத்தடி; short stout club; cudgel.