பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

குண்டான்

குண்டான் பெ. (n.) அகன்ற வாயும் குவிந்த அடிப்பாகமும் உடைய மாழை ஏனம்; vessel with a wide mouth and a tapering bottom. 'கூழ் என்றால் குண்டான் குடிப்பான்'.

குண்டி பெ. (n.) இரு பிரிவாக அமைத் திருக்கும் (சதைப் பற்றுடைய) புட்டப் பகுதி; (of person) bottom, buttocks, (of animals) rump. குண்டிக்காய்தல் வி. (v.) பசியால் வாடுதல்; be famished. குண்டி காய்ந்தால் தானாகச் சாப்பிட வருவான்.

குண்டு பெ.அ. (adj.) 1.இரும்பு உருண்டை; ball. 2. வெடிக்கும் மாழைக் கருவி; bomb. 'வானூர்தி குண்டுகள் வீசி ஆயுதக்கிடங்கை அழித்தது. 3. மூடியிட்ட மாழைக் குப்பி; ரவை; bullet; lead shot. துமுக்கிக் குண்டு பாய்ந்து மரணம்'. 4.(தாலியில் கோக்கப் படும்) சிறு தங்க உருண்டை ; a small spherical piece of gold.

குண்டு எறிதல் பெ. (n.) மாழைக் குண்டை எறியும் விளையாட்டுப் போட்டி; shotput. குண்டுக்கட்டாக வி.அ. (adv.) கழுத்தையும் காலையும் ஒன்று சேர்த்துப் பத்து போல் சுருட்டிய நிலை; bundling up. 'வரமாட்டேன் என்று சொன்னால் உன்னைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் விடுவேன்'.

குண்டுச்சட்டி பெ.(n.) உருண்டை வடிவச் சிறு ஏனம்; a small round bottomed vessel. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல்'.

குண்டும் குழியும் பெ. (n.) சிறு பள்ளங்கள்; potholes. சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது.

குண்டூசி பெ. (n.) (தாள் போன்ற வற்றை) குத்திக் கோத்து வைப்பதற்குப் பயன்படுத்தும், உருண்ட தலைப் பகுதி உடைய சிறு ஊசி ; pin. குண்டைத் தூக்கிப்போடுதல் வி. (v.) அதிர்ச்சி தரும் செய்தியைக் கூறுதல்; disclose a shocking news; drop a bomb shell. வேலையைத் துறந்து விட்டேன்' என்று அண்ணன் குண்டைத் தூக்கிப் போட்டான். குணச்சித்திரம் பெ. (n.) 1. (கதை, நாடகம் போன்றவற்றில்) கதை மாந்தர்; Scope (of a character in a story, play, etc.,). இந்தச் சிறுகதையில் வரும் குணச்சித்திரம் சிறப்பாக அமைந் திருக்கிறது'.2.உருவாக்கியிருக்கும் முறை; characterization. 'பாத்திரங் களின் குணச்சித்திரம் சிறப்பாக அமைந்திருக்கிறது'.

குணசாலி பெ. (n.) நல்ல பண்புகள்

நிறைந்தவர்; உடையவர்; (generally) person of noble traits; (esp) person who has patience and endurance. 'கணவன் மனைவி இருவருமே நல்ல குணசாலிகள்.

குணநலன் பெ. (n.) இயல்பு; (of a person) positive qualities. 'சிறந்த குணநலன்கள் கொண்டவர்.

குணப்படுத்துதல் வி. (v.) (நோயை) நீக்குதல்; (நோயாளியை) நலப் படுத்துதல்; cure; heal, restore health. அறுவைச் சிகிச்சை மூலம் எலும்பு முறிவைக் குணப்படுத்திவிட்

டார்கள்.

குணம்' பெ. (n.) I. இயல்பு; பண்பு; nature;

dis-position. அக்கா தங்கை இருவருக் கும் ஒரேகுணம்'. 2. இயற்கையாகவே அமையும் சிறப்பான இயல்பு; noble quality, noble traits. குணமானபெண். 3. நோய் தீர்க்கும் அல்லது குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்தும் தன்மை; inherrent quality (of something) property.