பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேப்பெண்ணெய்க்கு நோய்க் கிருமிகளை அழிக்கும் குணம் உண்டு.

குணம் ' பெ. (n.) நலம் பெறுதல்; healing cure. 'இந்த மருந்தைச் சாப்பிட்டால் மூன்று நாளில் குணம் தெரியும் என்று மருத்துவர் கூறினார்.

குத்தகை பெ. (n.) 1. உரிமையாளர் தனது நிலத்தை மற்றொருவர் பயிரிடு வதற்கு ஒப்பளித்து, விளைச்சலில் ஒரு பங்கைக் கொடுப்பதற்கான சட்டப்பூர்வமான ஒப்பந்தம்; lcase.

குத்துக்கால்

183

அருகில் குத்திட்டு உட்கார்ந்து கொண்டான். 2. நெட்டுக்குத்தாக; like stubble. தாடி மயிர் முள்முள்ளாகக் குத்திட்டு நின்றது'.

குத்திடுதல் வி. (v.) நிலைத்தல்; வெறித்தல்; (attention, etc.,) get fixed on; stare. 'உயிர் பிரியும் நேரத்தில் பார்வை குத்திட்டது'.

குத்திருமல் பெ. (n.) கக்குவான்; whooping cough.

இரண்டு ஏக்கர் தவிர மற்ற குத்துதல் வி. (v.) 1. பலமாக அடித்தல்;

நிலத்தையெல்லாம் குத்தகைக்கு விட்டிருக்கிறேன்.'2. சாகுபடி செய்யும் உரிமையை அளித்ததற் காகப் பெறப்படும் தவசம் அல்லது அதற்கு ஈடான பணம்; rent (in kind or cash). அவர் குத்தகை நெல்லை வாங்குவதற்கு ஒருவரை அமர்த்தி யிருந்தார்.'

குத்தகைதாரர் பெ. (n.) நிலம், மனை முதலியவற்றைக் குத்தகைக்கு எடுப்பவர்; lessee.

குத்தல் பெ. (n.) 1. (ஊசியால் குத்து வதைப் போன்ற) கடுமையான வலி; piercing or stinging pain. 'தலைக் குத்தல்'. 2. குத்திக்காட்டும் செயல்; sarcastic or hurtful remarks.

‘சம்பளத்தில் எப்போதும் நூறு ரூபாய் குறைகிறது. யாருக்குப் போகிறதோ! என்று மனைவி குத்தலாகப் பேசுவது சினங்கொள்ளவைத்தது'.

குத்திக்காட்டுதல் வி. (v.) ஒன்றைச் சுட்டிக்காட்டி மனம் புண்படச் செய்தல்; draw pointed attentition to

(one's lapses, weaknesses in a mean or malicious way). 'எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதைக் குத்திக்காட்டு கிறாயா?.

குத்திட்டு வி.அ (adv.) I. குத்துக்காலிட்டு;

in squating position. 'கணப்புக்கு

hit (with clenched fist); punch. மண்

மூட்டையைக் குத்திக் குத்துச் சண்டைக்காகப் பயிற்சி செய்து கொண்டிருந்தார். 2. இடித்தல்; pound (with a pestle). அம்மாவும் சித்தியும் திண்ணையில் நெல் குத்திக் கொண்டிருந்தார்கள் . 3. பதித்தல்; impress; cancel (a postel tamp by stamping) இந்த அஞ்சல் வில்லையில் மட்டும் முத்திரை குத்தப்பட வில்லை'.

குத்து பெ. (n.) 1. அடி; hit (with fist); punch. 'முகத்தில் வலுவான குத்து விழுந்தது. 2.காயம்; stab. 'கொலை செய்யப்பட்டவன் உடலில் கத்திக் குத்து காணப்பட்டது'.

குத்துக்கல் பெ. (n.) நிலத்தின் எல்லை யைக் குறிப்பதற்குச் செங்குத்தாக நட்டு வைக்கப்படும் கல்; stone plate erect on the ground to mark boundary. குத்துக்கல்லை யாரோ நகர்த்தி நட்டிருக்கிறார்கள்'.

குத்துக்கால் பெ. (n.) முழங்காலை மடித்து முகத்துக்கு முன் கொண்டு வந்து இடுப்பின் கீழ்ப் பகுதி தரையைத் தொட்டுக் கொண் டிருக்கும்படி வைத்திருக்கும் நிலை; squatting position. 'அவள் குத்துக் காலிட்டபடி உட்கார்ந்து பாத்திரம் தேய்த்தாள்.