பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

குத்துக்கோல்

குத்துக்கோல் பெ. (n.) கூர்மையான முனையுடைய கம்பு; pointed pole (used as a weapon). 'கையில் குத்துக் கோல், அரிவாள் போன்ற ஆயுதங் களுடன் பத்துப் பேர் புறப்பட் டார்கள்.

குத்துச்சண்டை பெ. (n.) இரு வீரர்கள் கையில் உறை அணிந்து ஒருவர் முகத்தில் ஒருவர் குத்திப் புள்ளிக் கணக்கில் வெற்றி அடையும் விளையாட்டு; boxing. குத்துமதிப்பு பெ. (n.) தோராயம்; rough

estimate. 'அறுபது கலம் நெல் என்று எப்படிச் சொல்கிறாய்?'. 'எல்லாம் ஒருகுத்துமதிப்புதான்'.

குத்துயரம் பெ. (n.) செங்கோண முக்கோணத்தில் அடிப்பக்கத்திற்கும் மேல் முனைக்கும் இடையில் உள்ள தூரம்; altitude (in a triangle). குத்துவாள் பெ. (n.) கைப்பிடியுடைய சிறுவாள்; small dagger, stilletto. குத்துவிளக்கு பெ. (n.) வட்ட வடிவமான அடிப்பகுதியில் நேராகப் பொருந்திய தண்டின் மேல் உள்ள தட்டு போன்ற பாகத்தில் திரியிட்டு எண்ணெய் ஊற்றி ஏற்றும் விளக்கு;

oil-lamp with a pedestal.

குத்தூசி பெ. (n.) கூரிய நுனியும் தவசம் வருவதற்கான குழிந்த பகுதியும் கொண்ட ஊசி போன்ற இருப்புக் கம்பி; a sharp grooved hook. குத்தூசியில் இழைக் கயிற்றை வடிவாகக் கோத்துக் கொடு'. குதப்புதல் வி. (v.) வாய்க்குள் அடக்குதல்; (கடிக்காமல்) சப்பி மெல்லுதல்; keep (betel leaf, tobacco, etc.,) as much as fills the mouth) and chew steadily without swallowing; suck (toffee). 'வாயில் இவ்வளவு வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு அவரால் எப்படிப் பேச

முடிகிறது.

குதறுதல் வி. (v.) நாசப்படுத்துதல்; tear into shreds (by biting), tear aport.

எலியைக்

'பூனை குதறிவிட்டது.

கடித்துக்

குதித்தல் வி. (v.) 1. கீழே பாய்தல்; jump leap, jump down. 'சிறுவர்கள் நீரில் குதித்து விளையாடினார்கள்'.

2. தோன்றுதல்; appear suddenly as if from an unrelated place. 'இந்த அரிய சிந்தனை (யோசனை) உனக்கு எங்கிருந்து வந்து குதித்தது'

3. இறங்குதல்; plunge. சினிமா நடிகை தேர்தலில் குதிக்கப் போவதாக அறிவித்தார்.

குதி பெ. (n.) ஒரு முறை எழும்பிக் கீழே

வருதல்; jump; leap. 'தெருக்கூத்துக் கலைஞரின் குதியும் துள்ளலும் பார்க்கப் பேரின்பமாக (பரவசமாக) இருந்தன்.

குதிபோடுதல் வி. (v.) துள்ளிக் குதித்தல்;

jump about, frolic. சுற்றுலாவிற்கு உன்னையும் கூட்டிக் கொண்டு போகிறேன் என்றதும் குழந்தை குதிபோட்டது.

குதிர்தல் வி. (v.) ஏற்ற வகையில் அமைதல் (பெண்ணுக்கு வரன்) வாய்த்தல்; அமைதல்; (of a business deal or a marriage proposal) materialize. வீட்டுக்கும் விலை குதிரவில்லை, பெண்ணுக்கும் வரன் குதிரவில்லை'. குதிர் பெ. (n.) (நெல் முதலிய தவசம் சேமித்து வைப்பதற்கான) மண்ணால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட அமைப்பு; a large barel like receptacle for storing grain.

குதிரைக் கொம்பு பெ. (n.) கிடைப்பதற்கு அரியது; rarity; a near impossibility. தன்னலமற்ற தலைவர்களைக் காண்பது குதிரைக் கொம்பாகி விட்டது.

குதிரைப் படை பெ. (n.) 1. படை அணி

வகுப்பில் இடம் பெறும், குதிரையில் அமர்ந்து வரும் வீரர்களின் பிரிவு; cavalcade. 2. குதிரைகளில் அமர்ந்து செயல்படும் காவல் துறையின் ஒரு