பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவு; mounted police. 'கலவரத்தில் ஈடுபட்டிருந்தவர் களைக் கலைக்கக் குதிரைப்படை வந்தது'.

குதிரைப்பந்தயம் பெ. (n.) முதலாவதாக வந்து வெற்றி பெறும் வாய்ப்புள்ள குதிரையின் மீது பணம் கட்டும் விளையாட்டுப் போட்டி; horse racing. குதிரை முகம் பெ. (n.) முழங்காலின் முன் பக்க எலும்பு; shinbone. குதிரையேற்றம் பெ. (n.) குதிரை மீதேறி ஓட்டுவதற்கான பயிற்சி; horseman ship. 'சில பள்ளிகளில் மாணவர் களுக்குத் குதிரையேற்றத்தில் பயிற்சி தரப்படுகிறது'.

குதிரையோடுதல் வி. (v.) ஒருவர் தனக்கு மாற்றாக மற்றொருவரைத் தேர்வு எழுத வைத்து ஆள் மாறாட்டம் செய்தல்; write an examination by proxy. 'அவன் குதிரையோடித்தான் தேர்வில் தேர்ச்சியடைந்தான்'. குதிரைவண்டி பெ. (n.) குதிரையால் இழுக்கப்படும் செலவு (பயணம்) செய்வதற்கான வண்டி; horse drawn cart (as a mode of transport). குந்தகம் பெ. (n.) தடை; இடையூறு; thwarting, hampering, hindering. 'சட்டம் ஒழுங்கு அமைதிக்கு எந்த வகையான குந்தகமும் ஏற்படக்கூடாது'. குந்துதல் வி (v.) குத்துக்காலிடுதல்; squat; crouch. 'கைதிகள் குந்தியிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். குப்பம் பெ. (n.) 1. மீனவர்கள் வாழும் கடலோரப் பகுதி அல்லது சிற்றூர்; fishermen hamlet. 2. குடிசைகள் நிறைந்த பகுதி; (in a city) slum. குப்பல் பெ. (n.) குவியல்; heap. 'குப்பல் குப்பலாகக் கிடந்த துணிகளை எடுத்து மடித்து வைத்தார்கள்'. குப்பாயம் பெ.(n.) ஆண்களும் பெண் களும் அணியும் மேலாடை;

akind of loose - fitting shit. 'கதர்க் குப்பாயம்'.

குபுகுபு என்று

185

குப்பி பெ. (n.) சிறு புட்டி; small (

flask-like) bottle. 'மருந்துக் குப்பி'.

குப்புற வி.அ. (adj.) 1. தரையில் அழுத்திய நிலையில் கவிழ்ந்து; (of a person) face down wards; on one's belly. 'குப்புறப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான்'. 2.தலைகீழாக; (of objects) upside down. பழக்கூடை குப்புறச் சரிந்து கிடந்தது.

குப்பை பெ. (n.) I. பயன்பாடற்றவை என்று கழிக்கப்பட்டவை; trash; garbage. *கூடையில் குப்பை நிரம்பிவிட்டது .2. காற்று அடித்துக் கொண்டு வரும் தூசி, செத்தை முதலியவை; dust, dried leaves, sweepings, etc., 'முதலில் கொல்லை யைப் பெருக்கிக் குப்பையை அள்ளு'.

குப்பைக்கூடை பெ. (n.) குப்பை போடுவதற்கான கூடை வடிவக் கருவி; waste (paper) basket, dust bin. குப்பைக் கொட்டுதல் வி. (v.) பயனற்ற வேலையில் பங்கு பெறுதல்; பயனற்ற (ஒரே) வேலையைச் செய்தல்; (jocularly) take part in an unproductive work; do the (same) useless job (again and again). நீயும் அந்த அலுவலகத் தில்தான் குப்பைக் கொட்டு கிறாயா?. குப்பைத்தொட்டி பெ. (n.) பைஞ்சுதை யினால் செய்த தொட்டி போன்ற அமைப்புடைய நிலைத்தொட்டி; dust bin; garbage can.

குபீர் பெ.அ. (adj.) பீறிட்டு வரும்; எதிர்பாராத; திடீர்; a fit of, burst of; sudden. 'குபீர்ச் சிரிப்பு .

குபுகுபு என்று வி.அ. (adv.) (புகை, நீர்) பெருக்கெடுத்தாற்போல்; விரை வாகவும்; மிகுதியாகவும் தொடர்ச்சி யாகவும்; (ofwater, etc.,) gushing out;