பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

கும்பல்

(of smoke) vigorously puffing out. தோண்டிய இடத்தில் குபுகுபு வென்று தண்ணீர் வந்தது'.

கும்பல் பெ. (n.) 1. மாந்தர்களின் (மனிதர்களின்) கூட்டம்; throng; crowd. இந்தக் கும்பலில் காணாமல்

போன குழந்தையை எப்படித் தேடுவது?'. 2. குழுவாகத் தீய செயல்களில் ஈடுபடுபவர்கள்; gang. திருட்டுக் கும்பல்'.

கும்பிடுதல் வி. (v.) I. இரு கைகளையும் கூப்பி வணங்குதல்; make obseisance with folded hands. 'இளைஞனாக இருந்தால் கை குலுக்குவேன், வய தானவராக இருந்தால் கும்பிடுவேன்'. 2. வழிபடுதல்; worship. 'திருப்பதிக்குப் போய் சாமி கும்பிட் டோம்'.

கும்மட்டி பெ.(n.) 1. இருப்பு அடுப்பு;a

kind of stove which can be lit with coal or chaff to provide heat without flame. 2. இன்னீர்ப்பழம் (தர்ப்பூசணி) இனத்தைச் சேர்ந்த கொடிவகை; bitter apple.

கும்மாளம் பெ. (n.) மகிழ்ச்சி நிறைந்த ஆரவாரம்; uncontrolled meriment. மாணவர் விடுதி என்றால் சிரிப்பும் கும்மாளமும்தான்'.

கும்மி பெ. (n.) பெரும்பாலும் பெண்கள் கைகொட்டி ஆடும் நடனம்; dancing by girls with rhythmic clapping. கும்மியடித்தல் வி. (v.) (பெண்கள் சுற்றி வந்து) கைகொட்டிப் பாடி ஆடுதல்; (of girls) dance round clapping and singing.

கும்மிருட்டு பெ. (n.) அடர்ந்த இருள்; pitch

-darkness. 'இந்தக் கும்மிருட்டில் தனி யாகத் தோட்டத்திற்குப் போகாதே!. கும்முதல் வி. (v.) மேற்பரப்பில் மெதுவாகக் குத்தியும் அழுத்தியும் எடுத்தல்; wash clothes by rubbing and

squeezing them against a hard surface. துணி துவைக் கும் கல்லில் சட்டையைக் கும்மித்துவைத்தான். குமட்டல் பெ. (n.) வயிற்றைப் புரட்டி வாயாலெடுக்க வேண்டும் என்ற உணர்வு; nausea; queasiness. 'சாப் பாட்டைப் பார்த்தாலே ஒரே

குமட்டல்.

குமட்டுதல் வி. (v.) புரட்டுதல்; வாயா லெடுத்தல்; turn one's stomach, nauseate. 'வயிற்றைக் குமட்டும் நாற்றம்'.

குமரன் பெ. (n.) இளைஞன்; young man. உன்னைப் போல் ஓடிவர நான் என்ன குமரனா?'.

குமரி பெ. (n.) I. பருவமடைந்த பெண், girl who has come of age. 'குமரிகள் இருக்கிற வீட்டில் ஆண்கள் விருப்பப் படிநுழைந்துவிட முடியாது . 2. இளம் பெண்; young girl. 'இவ்வளவு வயதாகியும் இன்னும் குமரி என்று நினைத்துக்கொண்டு இருக்கிறாயா?'. குமாரத்தி பெ. (n.) மகள்; daughter. 'மூத்த குமாரத்தி (திருமண அழைப்பிதழ் முதலியவற்றில் குறிப்பிடும் போது)'. குமாரன் பெ. (n.) மகன் ; son. மூத்த குமாரன் (திருமண அழைப்பிதழ் முதலியவற்றில் குறிப் பிடும்போது)'. குமாரி பெ. (n.) செல்வி; Miss. '(திருமண மாகாத) பெண்ணின் பெயருக்கு முன் மதிப்புத் தரும் வகையில் சேர்க்கும் சொல்.

குமிழ் பெ. (n.) உருண்டை வடிவப் பொருள்; knob; anything shaped like a knob. 'குமிழைத் திருப்பிக் கதவைத் திறந்தான்.

குமிழி பெ. (n.) காற்றால் நீர்மத்தில் ஒரு சில நொடிகளே தோன்றி மறையும் சிறு அரைப் பந்து வடிவம்; bubble. நீர்க்குமிழி போன்று வாழ்க்கை நிலையற்றது என்று சொல்வார்கள்.