பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழியிடுதல் வி. (v.) 1. குமிழி தோன்றுதல்; bubble. பாறைகளுக்கு இடையில் நீர் குமிழியிட்டுச் சுழன்று கொண்டிருந்தது' . 2. பெருகுதல்; (happiness, enthusiasm, etc.,) bubble up. ஆர்வம் அவள் வார்த்தைகளில் குமிழியிட்டது'.

குமுறல் பெ. (n.) 1. (எரிமலை, கடல் முதலியவை தொடர்ந்து எழுப்பும்) உரத்த ஒலி; rumbling of volcano, sea, etc.,). 2. வெளியே தெரியாத கொத் தளிப்பு; simmer. 'எண்ணக் குமுறல் களைக் கவிதையாக வடித்தேன். குமைதல் வி. (v.) I. சுழன்று வருதல்;(of smoke fire) spiral (without any outlet). சமையல் அறை முழுக்கப் புகை குமைந்துக் கொண்டிருந்தது'. 2.(மனம்) புழுங்குதல்; become choked up. பெற்றோரிடமும் கூடக் கணவன் நடத்தையைப் பற்றிச் சொல்ல முடியாமல் குமைந்தாள்'.

குமைச்சல் பெ. (n.) (மன) புழுக்கம்; (of emotions)

state of being pent- up. 'குமைச்சலும் பேராசையும் அவனைத் தளர்வடையச் செய்தது'. குயவன் பெ. (n.) மட்பாண்டங்கள் செய்பவர்; potter.

குரக்குபிடித்தல் வி. (v.) திடீரென்று கை, கால்கள்குத்தி இழுப்பது போன்ற வலி உண்டாதல்; suffer muscle pull or sprain; suffer cramps. 'காலில் குரக்கு பிடித்து விட்டது.

குரங்குப்புத்தி பெ. (n.) தடுமாறும் குணம்; அலைபாயும் மனம்; ficklemindedness. இவனுக்குச் சரியான குரங்கு புத்தி. கடைக்கு வந்தால் கூடச் சீக்கிரம் துணியை எடுக்க மாட்டான்.

குரல் பெ.(n.) தொண்டையில் உள்ள குரல் நாண்களின் அசைவால் உண்டாக்கும் ஒலி; voice. தொலைபேசியில் உங்கள் குரல் வேறு மாதிரி ஒலித்தது'. குரல்நாண் பெ. (n.) ஒலிக்கான அதிர்வுகளை எழுப்பப் பயன்படும்,

187

குருகுலக் கல்வி தொண்டையில் உள்ள மெல்லிய சதைத் தொகுப்பு; vocal cords. குரல்வளம் பெ. (n.) பலவகை ஏற்ற இறக்கங்களை எளிதாகவும் இனிமை யாகவும் பாடக்கூடிய குரலின் செழுமை ; range of voice; voice culture. அவருடைய குரல்வளம் வியக்கத் தக்கது.

குரல்வளை பெ. (n.) கண்டம் தெரியும் கழுத்தின் முன் பகுதி; throat (including Adam's apple). *குரல்வளையைப் பிடித்து நெரித்து கொன்றிருக்கிறான்.

அவளைக்

குரல்வாக்கு பெ. (n.) அவையில் ஏரணவுரை முடிந்ததும் தீர்மானிக்கப் பட வேண்டியதை ஆதரித்து அல்லது எதிர்த்து உறுப்பினர்கள் வாய்மொழி யாகத் தெரிவிக்கும் சொல்; voting by saying 'yes' or 'no' voice vote.

குரல் வாக்கெடுப்பு பெ. (n.) வாய்ச் சொல்லின் மூலம் நடத்தப்படும் வாக்கெடுப்பு; voice vote. இட ஒதுக்கீடு தொடர்பான தீர்மானம் தமிழகச் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறை வேறியது.

குரவை பெ. (n.) (முற்காலத்தில்) பெண்கள் கைகோத்து ஆடும் ஒரு வகை நடனம்; (in former times) dancing in a circle by women holding hands. குரு பெ. (n.) 1. ஆசிரியர்; ஆசான்; (venerable) teacher, master. மாதா, பிதா, குரு, தெய்வம் . 2. எடுத்துக் காட்டாக இருப்பவர்; exemplary model; mentor. 'இன்றைய எழுத் தாளர்கள் பலருக்கு இவர்தான் குரு'. குருகுலக் கல்வி பெ. (n.) குருவின் இல்லத்திலேயே தங்கிக் கற்கும் கல்வி; leaming by living with the teacher. இன்றும் சில இடங்களில் குருகுலக்