பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

குருகுலம்

கல்வி முறை வழக்கத்தில் இருக் கிறது.

குருகுலம் பெ. (n.) (குருவோடு இருந்து கற்கும்) பாடசாலை; school (where disciples live together with the teacher. குருசாமி பெ. (n.) முதன்முறையாக ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் ஆளுக்குரிய சடங்குகள் செய்வித்து அவரைத் தன் குழுவில் சேர்த்துக் கொள்ளும் (மூத்த) பத்தர்; (a senior) devotee who initiates one into the worship of ஐயப்பன். எங்கள் குருசாமி பதினெட்டு முறை மலைக்குப் போய் வந்தவர்' குருட்டுப் பாடம் பெ. (n.) பொருளைப் புரிந்துகொள்ளாமல் படிக்கும் பாடம்; பொருள் தெரியாத மனப்பாடம்; anything committed to memory without knowing its meaning;

rote.

குருடன் பெ. (n.) பார்க்கும் திறன் இல்லாதவன்; கண் தெரியாதவன்; blind man.

குருத்து பெ. (n.) (தென்னை, பனை, வாழை போன்ற மரங்களின்) விரியாத இளம் மடல்; tender leaf (of banana plant); unfurled frond ofpalm. 'வாழை குருத்துவிடத் தொடங்கிவிட்டது'. குருத்து ஞாயிறு பெ. (n.) குருத் தோலை களுடன் இயேசுவின் புகழ்பாடி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப் படும் திருவிழா; palm sunday. குருத்து மணல் பெ. (n.) பொடி மணல், குருமணல் ; fine sand.

குருபீடம் பெ. (n.) மடத்தின்தலைமைப் பொறுப்பு; headship of a monastic order. இந்த குருபீடத்தை அலங்கரித்த மடாதினத் தலைவர் பலர் தமிழ்த் தொண்டாற்றியுள்ளனர்.

குருபூசை பெ.(n.) நோன்பு தந்த குருவுக்கு, அவர் முத்தி அடைந்த நாளில் சீடர்களால் நடத்தப்படும் பூசை; worship offered by the disciples to their guru, who initiated them into a religious order on his death anniversary. குரும்பை பெ. (n.) (தென்னை அல்லது பனையின் பூவிலிருந்து தோன்றும்) பிஞ்சுக்காய்; small unripe fruit (of coconut or palmyra trees). தென்னங் குரும்பைகளில் பாதி உதிர்ந்து விட்டன். குருவிக்காரன்

பெ. (n.) குருவி

பிடிப்பவன்; bird catcher. குரைப்பு பெ. (n.) தாய் எழுப்பும் ஒலி; bark (of a dog). புதருக்கு அருகில் பன்றியின் உறுமலும் நாயின் குரைப்பும் கேட்டன்.

குலதெய்வம் பெ. (n.) ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் வழிபடும் சிற்றூர்த் தெய்வம்; deity (of a community); family deity. 'குல தெய்வத்தை வணங்கிவிட்டுத் திருமண

வேலைகளில் ஈடுபட்டார்.

குலம் பெ. (n.) I.(மாந்த) இனம்; general class, type. 'பண்பாடு என்பது மனித குலத்திற்கே உரியது . 2. குலம்; lineage. சில அரசர்கள் தங்களைச் சூரிய குலம் என்று கூறிக் கொண்டனர். குலவுதல் வி. (v.) நெருங்கி உறவாடுதல்; ஆசையோடு பழகுதல்; be overly familiar; move freely or intimately. *நேற்று வரை பகைவனாக இருந்தவன் இன்று ஏன் நம்மோடு குலவு கிறான்?. குலவையிடுதல் வி. (v.) பெண்கள் வாயைத் திறந்து நாக்கை வாயின் பக்கவாட்டிலோ அல்லது மேலும் கீழுமாகவோ அசைத்து ஒரு வகையான ஒலியை எழுப்புதல்; ululate. பெண்கள் குலவையிட சிற்றூராரின் முன்னிலையில்