பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊராட்சித் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டவர் பதவியேற்றார். குலுக்கல் பெ. (n.) மேடு பள்ளத்தில் வண்டி ஏறி இறங்குவதால் அசைவு; தூக்கிப் போடுதல்; (of vehicles) jolt. மாட்டு வண்டியில் உட்கார முடியாத அளவுக்குக் குலுக்கல்'. குலுக்கல்சீட்டு பெ. (n.) (ஒருவரை) குறிப்பிட்ட நாள்களுக்குக் குறிப்பிட்ட தொகை எனக் கட்டச் செய்து குலுக்கலின் மூலம் தொகையையோ பொருளையோ தரும் முறை; a system in which subscription is collected in instalments and the accumulated sum or the article for which the subscription is made is given to a subscriber by draw. பத்தாயிரம் ரூபாய் குலுக்கல் சீட்டில் சேர்ந்து கொள்கிறாயா?/ தீபாவளிக் குலுக்கல் சீட்டில் சேர்பவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் இலவசம். குலுக்குதல் வி. (v.) (ஒன்றைக் கையில் பிடித்து) மேலும் கீழும் அல்லது பக்கவாட்டில் ஆட்டுதல்; shake (a bottle, etc.,) shake (a bag, box, etc., to settle the contents). மருந்து குடிப்பதற்கு முன் குப்பியை (புட்டியை) நன்றாகக் குலுக்கு' 2. அசைத்தல்; ஆட்டுதல்; shake (one's body, shoulder, etc.,). அவள் உடலைக் குலுக்கிக் குலுக்கி நடந்தாள்'. குலுங்குதல் வி. (v.) I. எளிமையாக இங்குமங்கும் அசைந்து அதிர்தல்; shake (when doing something) (of vehicle jolt). 'அவர் சிரிக்கும்போது உடல் முழுவதும் குலுங்கும்'. 2. (காய்த்தல், பூத்தல் ஆகியவற்றோடு மரம் நிறைந்திருத்தல்; rich in (something); full of (something). தோட்டம் முழுக்க மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கின.

குலைதல் வி. (v.) 1. (உடல் கட்டு) தளர்தல்; (of body) become loose or limp. 'அகவையாகியும் உடல் கட்டுக்

குவிதல்

189

குலையவில்லை.2. (கூந்தல்) பிரிந்து அலைதல்; (of hair) get dishevelled. குலைந்த முடியும் அழுத கண்ணுமாக அவள் வந்து நின்றாள்.

குலை பெ. (n.) (மரத்தில்) காய்களின் தொகுப்பு; bunch of unripe fruits, cluster. 'தென்னங்குலை/வாழைக் குலை'.

குலைதள்ளுதல் வி. (v.) (வாழை காய்ப்பதன் அறிகுறியாக) பூவுடன் கூடிய காம்பை வெளிப்படுத்துதல்; பாளை வெடித்துக் காய்த் தொகுதி யாக மாறுதல்; (oftrees such as coconut, palm, plantain, etc.,) put forth a bunch of fruits (as yield). வாழைமரம் ஒரு முறைதான் குலை தள்ளும்’.

குலை நடுக்கம் பெ. (n.) (வயிற்றில் இடுக்கண் உணரும்) பீதியும் நடுக்கமும்; trepidation; terror. 'அந்த குண்டனை (ரௌடியைப்) பார்த்தாலே எல்லோருக்கும் குலை நடுக்கம்'.

குலைநடுங்குதல் வி. (v.) அச்சத்தையும் நடுக்கத்தையும் உணர்தல்; be terrified; tremble. நடு இரவில் அந்தக் கூச்சலைக் கேட்டதும் எனக்குக் குலை நடுங்கிவிட்டது.

குவடு பெ. (n.) மார்பின் மையத்தில் உள்ள குழிவான பகுதி; depression (in the middle of the chest). 'இருமலுக்கு நெஞ்சுக் குவட்டில் எண்ணெய் தடவலாம்'. குவளை பெ. (n.) I. விளிம்பும் பிடியும்

சூடாக

இல்லாத கோப்பை; tumbler. குவளையில் தண்ணீர் கொடு' 2.பருங்கலம்; a large deep vessel with a wide mouth (used as a container). நெல் அவிக்கும் குவளை'.

குவிதல் வி. (v.) 1. அதிக அளவில்

சேர்தல்; pile up; form in heaps; crowd. அரிசி மூட்டை மூட்டையாக வந்து