பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

குவிப்பு

குவிந்தது. 2. குவியலாக ஆக்குதல்; put (things) in heaps. துணிகளைக் குவித்துப்போட்டு விற்பனை செய்தார்கள்.

குவிப்பு பெ. (n.) சேர்த்து ஒன்றாகிக் காணும் நிலை; piling up; concentration (of troops). எல்லைப் பகுதியில் படைக் குவிப்பு.

குவியல் பெ. (n.) ஒன்றன் மீது ஒன்றாக ஓர் இடத்தில் குவிக்கப்பட்டுள்ள பொருள்களின் தொகுப்பு; pile; heap. சட்டைகளைக் குவியலாகப் போட்டு விற்றுக் கொண்டிருந் தார்கள்.

குவியாடி பெ. (n.) இரு புறமும் சற்றுக் குவிந்து அரைக் கோள வடிவத்தில் இருக்கும் ஆடி; convex miror or lens. குழகுழப்பு பெ. (n.) பிசுபிசுப்போடு குழைவாக இருக்கும் தன்மை; sticky and slinry nature. 'விரலில் பசையின் குழகுழப்பு போகவில்லை. குழந்தை பெ. (n.) 1. தாயின் வயிற்றில் இருக்கும் அல்லது அண்மையில் பிறந்த பிள்ளை; childbaby. 'வயிற்றில் குழந்தை உதைக்கிறது என்றாள் என் மனைவி. 2. இணையரின் (ஒரு

தம்பதியினரின்) மகன் அல்லது மகள்; மரபுரிமையர்; offspring; child. உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?'. குழந்தைக்காரி பெ. (n.) (தாய்ப்பால் குடிக்கும்) கைக் குழந்தையை உடையவள்; mother having a suckling baby. குழந்தைக்காரி பட்டினியாக இருக்கக்கூடாது'.

குழந்தைக் குட்டி பெ. (n.) பிள்ளைகள்; children. திருமணமாகிக் குழந்தை குட்டி பெற்றுப் பெரிய குடும்பம் ஆகிவிட்டான்.

குழந்தைத்தனம் பெ. (n.) 1. கள்ளங் கபடம் இல்லாத தன்மை; வாழ்க்கை பட்டறிவு இல்லாத வெகுளித்தனம்; childishness; innocence. 'அந்தப் பையனின் குழந்தைத்தனமான முகம் இன்னும் எனக்கு மறக்க வில்லை'. 2. சிறுபிள்ளைத்தனம்; childishness; babyishness. 'இதுபோலக் குழந்தைத் தனமான கேள்விகளையெல்லாம் இங்கே கேட்கக் கூடாது என்று அவர் என்னைக் கடிந்து கொண்டார். குழந்தைத் திருமணம் பெ. (n.) மண அகவை நிரம்பாத சிறுவனுக்கும் சிறுமிக்கும் நடத்தி வைக்கப்படும் திருமணம்; marriage between prepubescent boy and girl child marriage. அந்தக்காலத்தில் பரவலாகக் காணப் பட்ட குழந்தைத் திருமணத்தைப் பற்றிய நாவல் இது'. குழந்தைத் தொழிலாளர் பதினான்கு அகவைக்கு உட்பட்ட தொழிலாளர்; child labour. 'குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம்'. குழந்தை நல மருத்துவம் பெ. (n.) குழந்தைகளின் நலனைக் குறித்த சிறப்பு மருத்துவப் பிரிவு; paediatrics. குழப்படி பெ. (n.) குழப்பமாக இருக்கும் நிலை; குழப்பம்; confused state; 'நிருவாகத்தில் ஒரே

muddle.

Gu. (n.)

குழப்படி. குழப்பம் பெ.(n.) I. தெளிவற்ற நிலை; turmoil; confusion 'சிப்பாய்க் கல கத்தை ஒட்டி நாட்டில் பெருங் குழப் பங்கள் தோன்றின் . 2. (சிந்தனையில்) தெளிவின்மை; want of clarity. 'என் கட்டுரையில் எந்தக் குழப்பமும் இல்லை'. 3. கலவரமான சூழல்; turbulence; confusion. 'நீதி மன்றத்தில் குழப்பம் ஏற்படுத்தியவர் தண்டிக்கப் பட்டார்.

குழப்புதல் வி. (v.) I. தெளிவற்ற நிலைக்கு (ஒருவரை) உள்ளாக்குதல்; தெளிவு