பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லாதபடி ஆக்குதல்; confuse (a person); make a mess of (something) muddle. ஒரு இயல்பான மாந்தனைக் குழப்புகிற வகையில் ஒரே மருந்து பல பெயர்களில் விற்பனை யாகிறது'. 2. மாவு, வண்ணம் போன்ற பொருள்களை தீர்முதலிய வற்றோடு சேர்ந்து) குழைத்தல்; mix (with water, etc., into thin consistency). 'நீரில் களிமண்ணை குழப்பிச்சுவரில் பூசிக் கொண்டிருந்தான்'.

குழம்புதல் வி. (v.) தெளிவற்ற நிலைக்கு உள்ளாதல்; முடிவுக்கு வர முடியாமல் தடுமாறுதல்; be confused, be indecisive; beperplexed. இருவரும் ஒரேமாதிரி இருந்ததால் யார் அண்ணன் யார் தம்பி என்று தெரியாமல் குழம்பிப்

போனேன்.

குழம்பு பெ. (n.) 1. காய்கறியோடு காரப் பொருள்களை அரைத்து

வேக வைத்த அரை நீர்மமாக உருவாக்கும் உணவுப் பண்டம்; thickened sauce or a kind of broth (for mixing with cooked rice). 'இன்றைக்குப் புளிக் குழம்பு சுவையாக இருக்கிறது'. 2. பசை போன்று அரை நீர்ம நிலை; molten state. 3. (சந்தனம், வண்ணம் போன்றவற்றின்) கரைசல்; paste (of sandal) (of colours) mix.

.

குழல் பெ. (n.) உள்ளீடு இல்லாததாகவும் அளவான நீளமுடையதாகவும் வளையாததாகவும் செய்யப்படும் பொருள்; any inflexible tube like object of a standard length இந்த துப்பாக்கியில் இரண்டு குழல்கள் இருக்கும் .2. தசையாலான, குழாய் போன்ற உள்ளுறுப்பு; tube; duct; (blood vessel வாயின் பின்புறத்தி லிருந்து தொண்டை வழியாக மூச்சுப் பைக்கு ஒரு குழல் செல்கிறது' 3. (பெண்ணின்) முடி; (woman's long) hair. 'பூவை எடுத்துத் தன் குழலில் செருகிக் கொண்டாள்.

குழல் விளக்கு பெ. (n.) நீண்ட குழாய் போன்ற அமைப்புடைய, வெண்ணிற

குழாய்ப்புட்டு

191

ஒளி தரும் மின் விளக்கு; (tube) light. பெரும்பாலான வீடுகளில் குழல் விளக்குகளையே அதிகம் பயன்படுத்து கிறார்கள்.

குழவி பெ. (n.) 1. அரைப்பதற்குப்

பயன்படுத்தப்படும் நீள் உருண்டை வடிவக் கல்; stone roller of ammi etc., மாவு ஆட்டி முடித்தப் பிறகு குழவியைக் கழுவிவை. 2.குழந்தை; child. 3. இரு பக்கமும் கைப்பிடி உடைய நீள் உருண்டை வடிவ மரக் கட்டை; rolling pin (for rolling out dought to make puri, chappathi, etc.,). குழறல் பெ. (n.) தெளிவில்லாத பேச்சு; mumblings. அடிபட்டுக் கிடந்தவனின் குழறலிலிருந்து ஒன்றும் புரிந்து கொள்ளமுடியவில்லை'.

குழறுதல் வி. (v.) தெளிவில்லாமல் பேசுதல்; talk inarticulately; stammer out; falter. 'பக்கவாதம் வந்த பிறகு அவருக்கு நாக்கு குழறுகிறது.

குழாம் பெ.(n.) I. ஒரு சிலர் அடங்கிய கூட்டம்; group; gathering. 'கல்லூரிப் பெண்கள் குழாம்'. 2. குழு; அமைப்பு; circle; guild. 'எழுத்தாளர் குழாம்/ அறிஞர் குழாம்.

குழாய் பெ. (n.) நீர் வருவதற்கான கருவி (வீடு முதலியவற்றில்); (water) pipe. 'குழாயைத் திருகியதும் தண்ணீர் கொட்டும்.

குழாய்க்கிணறு பெ. (n.) நிலத்தில் ஆழமாகத் துளை போட்டு (தண்ணீரை வெளியே கொண்டு வருவதற்காக) இறக்கப்பட்ட குழாய்;

tube - well.

மாவை

குழாய்ப்புட்டு பெ. (n.) குழாய் போன்ற நீண்ட கழுத்துடைய ஏனத்தில் அரிசி அடைத்து ஆவியில் வேகவைத்துச் செய்யும் புட்டு; dish prepared by filling a long tube like structure with rice flour and steaming it.