பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

குழாய் மாத்திரை

குழாய் மாத்திரை பெ. (n.) இயற்கையான புரதத்தினால் செய்யப்பட்ட சிறு உறையில் மருந்து அடைக்கப்பட்ட மாத்திரை; capsule.

குழாயடிச் சண்டை பெ. (n.) (தரம் தாழ்ந்து ) மிக மோசமான வகையில் நடுத்தெருவில் நடக்கும் சண்டை; demeaning quarel. 'இது அலுவலகம் என்ற நினைவே இல்லாமல் இப்படிக் குழாயடிச் சண்டைபோல் போட்டுக் கொள்கிறீர்களே. குழிதல் வி. (v.) I. குழிவு ஏற்படுதல்; fom a hollow, form dimple. 'கன்னம் குழியச் சிரித்தாள். 2. குழிவு உண்டாகும்படி செய்தல்; make a hollow, cup (one's hands). சாதத்தைக் குழித்து அதில் குழம்பு ஊற்றிக் கொண்டாள்' 3. நிலத்தைத் தோண்டி மண்ணை எடுப்பதால் ஏற்படுத்தப்பட்ட பள்ளம்; pit. வாழைக்கன்று நடுவ தற்குக் கொல்லையில் குழி தோண்டி யாயிற்று.

குழித்தறி பெ. (n.) குழியில் கால் மிதிகளைக் கண்ட தறி; loom having treadles in a pit.

குழிபறிதல் வி. (v.) பள்ளம் ஏற்படுதல்; develop potholes. மாடுகள் நடந்து நடந்து களத்துமேடு குழிபறிந்து விட்டது.

குழிபறித்தல் வி. (v.) துன்பம் விளைவிக்க மறைமுகமாகச் செயல்படுதல்; வஞ்சனை செய்தல்; conspire (to ham); undemine. கூட இருந்தே குழி பறித்து விட்டான்.

குழியாடி பெ.(n.) இருபுறமும் சற்றுக் குழிந்து அரைக்கோள வடிவத்தில் இருக்கும் ஆடி; concave mirror or lens. குழிவு பெ. (n.) உள்நோக்கிச் செல்லும் பள்ளம்; hollow, depression.

குழு பெ. (n.) ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு; committee; commission. 'விசாரணைக் குழு உறுப்பினர்கள்'.

குழுமம் பெ. (n.) ஒருவரின் அல்லது ஒரு குழுவின் நிர்வாகப் பொறுப்பில் செயல்படும் பல நிறுவனங்களின் தொகுப்பு; group (of companies). குழுஉக்குறி பெ. (n.) (இலக்.) ஒரு குழுவினருக்குள் குறியீடாக வழங்கும் சொற்கள்; jargon; argot.

குழைதல் வி. (v.) (அரிசி முதலியவை அதிகமாக வெந்துவிடுவதால்) குழகுழப்புத் தன்மை ஏற்படுதல்; (of rice) be overcooked; become sticky or pulpy by being over cooked. 'சாதம் குழைந்து களி மாதிரி ஆகிவிட்டது. குழைவு பெ. (n.) நெகிழ்வு; tendemess or softness (in tone; speech). பரிவும் குழைவும் கலந்து குரலில் என்ன வேண்டும்? என்று கேட்டார்.

குள்ளநரி பெ. (n.) 1. சாம்பல் நிற விலங்கு; fox. 2. திறமையாக ஏமாற்றும் ஆள்; cunning fox; trickster, cheat. 'அவனுடன் பார்த்துப் பழகு; அவன் சரியான குள்ள நரி'

குள்ளம் பெ. (n.) குறைந்த உயரம்; உயரக் குறைவு; being shorter then average. 'என் மகன் குள்ளமே தவிர பருமன் இல்லை.

குளத்துக் கரம்பை பெ.(n.) குளத்திலிருந்து எடுக்கப்பட்டு வயலுக்கு உரமாக இடப்படும் தூர்மண்; pond silt. குளம் பெ. (n.) ஏரியைவிடச் சிறிய நீர்நிலை; pond; (in India) tank. கோயிலுக்குச் சொந்தமான குளம் தூய்மை செய்யப்படுகிறது'. குளம்பு பெ. (n.) விலங்குகளின் காலின் அடிப்பகுதியில் கடினத் தன்மையுடன் உள்ள பகுதி; hoof (of certain animals).