பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாடு, குதிரை போன்றவற்றின் குளம்புகளில் குளம்பணி (லாடம்) அடிப்பார்கள்.

குளறுதல் வி. (v.) கூக்குரலிடுதல், உளறுதல்; wail. 'ஏன் இப்படி தூக்கத்தில் குளறுகிறாய்?'. குளறுபடி பெ. (n.) I. குழப்பம்; தாறுமாறானது; confusion, disorder, muddle. நிர்வாகத்தின் குளறுபடி களைச் சரி செய்யவே சில மாதங்கள் ஆகும். 2. முறைகேடு; iregularity. சங்கத் தேர்தலில் பல குளறுபடிகள் நடந்துள்ளன.

குளித்தல் வி. (v.) 1. தீராடுதல்; take bath. 2.(விலங்குகள், பறவைகள்) நீரில் அமிழ்ந்து கிடத்தல்; wallow in the

water, splash the water. 'அந்தக் காட்டாற்றில் யானைகள்கூட்டமாகக் குளித்துக் கொண்டிருந்தன. 3. மாத விடாய் வந்து நீராடுதல்; have one's period. திருமணமான என் மகள் குளித்து இரண்டு மாதம் ஆகிறது. மூழ்காமல் இருக்கிறாள்.

குளிக்காமலிருத்தல் வி. (v.) கருவுற் றிருத்தல்; கருவுற்றிருத்தல்; be pregnant. 'உன் மகள் குளிக்காம லிருக்கிறாளா? எத்தனை மாதம்'. குளிகை பெ. (n.) அரைத்து உருண்டை யாகத் தரப்படும் மருந்து; (siddha) medicine in the form of pills. குளிப்பாட்டுதல் வி. (v.) 1. தீர் ஊற்றிக் கழுவிவிடுதல்; bathe (something) wash (a cow, etc.,). குழந்தையைக் குளிப்பாட்டிக் கண்ணுக்கு மை யிட்டாள்.2.(பிணத்தை) நீரால் கழுவுதல்; wash (the corpse as a part of funeral rite). 'பிணத்தைக் குளிப்பாட்டி யாகி விட்டதா?.

குளியல் பெ. (n.) குளிக்கும் செயல்;bath; bathing. 'அதிகாலைக் குளியல் உடலுக்கு இதமளிப்பதாக இருந்தது'. குளியல் அறை பெ. (n.) குளிப்பதற்குப் பயன்படுத்தும் அறை; room for taking bath.

குளிர்ச்சி

193

குளிர்தல் வி (v.) (ஒரு பொருள், திரவம்). 1. இயல்பு வெப்ப நிலைக்கும் குறைவான நிலையை அடைதல்; become cold. மலைப் பகுதிகளில் மாலையானால் குளிர ஆரம்பித்து விடும்'. 2. குளிரை உடல் உணர்தல்; feel cold, feel a chill. கதவைச் சாத்து. எனக்குக் குளிர்கிறது'. 3. மகிழ்ச்சி யடைதல்; சுகம் என்று உணர்தல்; feel satisfied or happy; be pleased. அவரின் சிறப்பான வரவேற்பில் குளிர்ந்து போனார்.

குளிர் பெ. (n.) 1. வெப்பமே இல்லாத

அல்லது வெப்பம் மிகக் குறைவாக இருக்கும் நிலை; coldness. *ஊட்டி ஒரு குளிர்ப்பகுதி'. 2. உடல் வெப்பத்தை விடக்காற்று மண்டலத்தின் வெப்பம் குறைவாக இருக்கும் நிலை; cold; chillness. 'குளிரால் உடல் நடுங்கியது'. குளிர்காய்தல் வி. (v.) 1.உடம்பைச் சூடுபடுத்திக் கொள்ளுதல்; wam oneself (by the fireside). 'பனை ஓலைகளை எரித்துக் குளிர் காய்ந்து கொண்டிருந்தோம்'. 2. ஊதியம் தேடுதல்; take advantage. 'பங்காளிகள் சண்டை போட்டுக் கொண்டால் எதிரி அதில் குளிர்காய்வான். குளிர்காய்ச்சல் பெ. (n.) உடலை தடுங்க வைக்கும் காய்ச்சல்; fever with shivering.

குளிர்காலம் பெ. (n.) (கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களை உள்ளடக்கிய) குளிர் அதிகம் உள்ள பருவம்; cold season (

mid -

november to mid - February).

குளிர்ச்சி பெ. (n.) 1. வெப்பம் குறைந்த இதமான நிலை; coolness. 'கோடை யில் கூரை வீடு குளிர்ச்சியாக இருக்கும்' 2.சுகம்; இதம்;

pleasant- ness. 'இயற்கைக் காட்சிகளைப்