பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

குளிர்சாதனப்பெட்டி

பார்க்கும் போது ஏற்படும் குளிர்ச் சியே இன்பமளிக்கும்'. 3. வெப்பம் குறைந்த நிலை; the condition of being cold. மோர் உடலுக்குக்

குளிர்ச்சியைத் தரும்'. குளிர்தல் பெ. (n.) மிகக்குறைந்த வெப்ப நிலைக்கு மாறும் நிகழ்வு; condensation.

குளிர்ந்த பெ. (n.) குளிர்ச்சியான; cool. ‘குளிர்ந்த காற்று/குளிர்ந்த பார்வை/ குளிர்ந்த காட்சி'.

குளிர்பதனக் கிடங்கு பெ. (n.) உறை குளிர் நிலையில் அமைக்கப்பட்ட பெரிய அறை அல்லது கட்டடம்; cold storage. குளிர்பதனப்பெட்டி பெ. (n.) மிகக் குறைந்த வெப்பநிலையில் உணவு, காய்கறி, குளிர்குடிப்பு போன்ற வற்றை வைத்துக் கெடாமல் பாதுகாக்க உதவும் பெட்டி போன்ற மின்பொறி;

refrigerator, deep-freeze,

freezer.

குளிர்பதனம் பெ. (n.) (வீடு, பேருந்து முதலியவற்றின் உட்பகுதியை) குளிர்ச்சியாக இருக்கச் செய்வதற்கு உதவும் மின்பொறி;

air - conditioner. குளிர்பானம் பெ. (n.) (புட்டில் போன்ற வற்றில் அடைத்து விற்கப்படும்) கரிவளி சேர்க்கப்பட்ட குடிப்பு வகை; (bottled) carbonated soft drink kept in cooler.

குளிர்விட்டுப்போதல் வி. (v.) (பயம்) அச்சம் இல்லாமல் போதல்; no longer fear authority. 'அவனுக்குக் குளிர் விட்டுப் போயிற்று; இனிமேல் நம்மை மதிக்க மாட்டான். குளிர்வித்தல் வி. (v.) குறைந்த வெப்ப நிலைக்குக் கொண்டு வருதல்; cool (something to room temperature). உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு

திடப்

குளிர்விக்கப்படும்போது பொருளாக மாறுகிறது. குளிரூட்டும் நிலையம் பெ. (n.) பாலைப் பதனப்படுத்திச் சேமித்து வைப்பதற் காகக் குளிர்ச்சியடையச் செய்யும் நிலையம்; chilling plant (for preserving milk).

குளுகுளு பெ.அ. (adj.) (குளிரூட்டக் கருவி பொருத்தப்பட்டு) குளிர்ச்சியாக இருக்கும்;

air-conditioned. 'குளுகுளு அறை/குளுகுளு பேருந்து/குளுகுளு திரையரங்கம்.

குளுகுளு என்று வி.அ. (adv.) (இதமான குளிர்ச்சியாக; (pleasantly) cool. 'காற்று குறுகுளுவென்று வீசுகிறது'. குளுமை பெ. (n.) I. குளிர்ச்சி உடையது; coolness. 'காற்று குளுமையாக வீசியது.2.(கண், காது, மனம் முதலியவற்றுக்கு) இதமளிப்பது; pleasantness (to the senses). குளுமை யான சிரிப்போடு வரவேற்றாள்' . குற்ற உணர்வு பெ. (n.) குற்றம் செய்ததை உணர்ந்த மனநிலை; (feeling of) guilt; guilty conscience. 'குற்ற உணர்வு மனத்தில் முள்ளாகத் தைத்தது'. குற்றக் குறிப்பாணை பெ. (n.) ஒரு பணியாளர் செய்ததாகக் கருதப்படும் குற்றங்களைப் பட்டியலிட்டு அவர் தனது விடையைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கும் நோக்கில் மேலதிகாரியால் கேள்வி கேட்டுத்தரப்படும் ஆவணம்; charge memo.

குற்றச்சாட்டு பெ. (n.) 1. ஒருவர் மீது சுமத்தும் குற்றம்; accusation; allegation. உன்னுடைய குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை.

குற்றப் பத்திரிகை பெ. (n.) புலனாய்வு முடிந்தவுடன் தொகுக்கப்பட்ட கூற்றுச்சான்று, துணைத்தரவுகளுடன் நீதிமன்றத்தில் ஆராய்வு அதிகாரி ஒப்படைக்கும் அறிக்கை; charge sheet;