பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

police report. பேருந்தை எரித்தது தொடர்பாக நான்கு பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட் டிருக்கிறது.

குற்றப்பிரிவு பெ. (n.) சில குற்றங்களின் தன்மையைக் கருதி சிறப்புப் புலனாய்வு செய்வதற்காகத் தனியாக அமைக்கப்பட்டிருக்கும், காவல் துறையின் பிரிவு; crime branch (of the police force).

குற்றம் பெ. (n.) 1.தவறு ; பிழை; (moral) blemish; fault. 'பெற்றோரைப் பழித்த குற்றத்திற்கு ஆளாகி விட்டேன்'. 2. சட்டப்படியோ குமுக வழக்குப்

படியோ தண்டிக்கத் தகுந்ததாகக் கருதப்படும் செயல்; crime offence. நீ செய்த குற்றத்தை ஒப்புக்கொள்'. குற்றம் சாட்டுதல் வி. (v.) 1. குற்றத்தை ஒருவர் செய்ததாகக் காவல்துறை அவரைச் சிறைக்காவல் செய்யும் போது அவரிடம் அறிவித்தல்; charge; accuse. 'தொடரியைக் கவிழ்க்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுச் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்'. 2. தவறுக்கு ஒருவரைப் பொறுப் பேற்கச் செய்தல்; find fault with, blame. ‘நடந்த தவறுக்கு என்னைக் குற்றம் சாட்டுவது போலப் பேசினார். குற்றம்சொல்தல் வி. (v.) விரும்பத் தகாதது நடந்ததற்கு ஒருவரைப் பொறுப்பாக்குதல்; குறை கூறுதல்; blame. 'நீயே சரி பார்த்து விடு; பிறகு என்னைக் குற்றம் சொல்லாதே!. குற்றம் பாராட்டுதல் வி. (v.) குற்றம் சொல்லுதல்; keep finding fault with someone; carp at . 'தகுந்த காரணம் இல்லாமல் ஒருவரைக் குற்றம் சொல்லக்கூடாது'.

குற்றவாளி பெ. (n.) 1. உசாவலுக்குப் (விசாரணை) பிறகு நயன்மன்றத்தால் குற்றம் மெய்ப்பிக்கப்பட்ட ஆள்; a person found guilty by a court of law,

குறடு

195

convict; offender; delinquent. 'அவன் ஒரு கொலைக் குற்றவாளி. 2. தவறு செய்தவர்; wrongdoer; culprit. அப்பா பையில் இருந்த பணத்தைக் காண வில்லை என்பதற்காக என்னைக் குற்றவாளி ஆக்காதீர்கள்.

குற்றவியல் பெ. (n.) I. குற்றம் பற்றியும் குற்றவாளிகள் பற்றியும் அறிவியல் அடிப்படையில் விளக்கும் துறை; criminology. 2. குற்றம் சார்ந்த நடவடிக்கை தொடர்பானது; anything

relating to crimes (used mostly as an adjective). குற்றவியல் வழக்கு / குற்றவியல் சட்டம்'.

குற்றுயிரும் குலையுயிருமாக வி.அ. (adj.) உடல் தாக்கமுற்று உயிர் போகிற நிலை; quivering on the verge of death. *கத்தியால் குத்தப்பட்டவன் குற்றுயிரும் குலை யுயிருமாகக் கிடக்கிறான்.

குற்றேவேல் பெ. (n.) சின்னச்சின்ன வேலைகள்; பணிவிடை; menial task. குருவுக்குக் குற்றவேல் செய்வதில் அவர் மகிழ்ச்சியுற்றார்'. குறட்டுதல் வி. (v.) இழுத்தல்; pull.

குறட்டை பெ. (n.) (தூக்கத்தில்} மூச்சு விடுகிற போது (வாய் வழியாக) வெளிப்படுகிற ஒலி; snore. 'அவன் குறட்டை விட்டால் பக்கத்து வீட்டுக்குக் கூடக் கேட்கும்'. குறடு பெ. (n.) 1. திண்ணையின் கீழ்ப்பகுதியை ஒட்டித் தரைக்கு மேல் போட்டிருக்கும் தளம்; flooring adjacent to. திண்ணை வீட்டிற்கு வந்தவர்களைக் குறட்டிலேயே நிற்க வைத்துப் பேசிக் கொண்டிருக் கிறாயே!'. 2. படிகள் முடிவடையும் அல்லது தொடங்கும் சமதளம்; landing. மாடிப்படிக் குறட்டில் ஒரே குப்பையாக இருந்தது'.