பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

குறண்டுதல்

குறண்டுதல் வி. (v.) I. (மரம், செடி, கொடி, பூ போன்றவை) வாடுதல்; (of plants, flower, etc.,) fade; wither. மழை இல்லாமல் மரங்கள் குறண்டி விட்டன.2. (தசைப் பகுதி அல்லது விரல்கள்) உள்ளிழுக்கப்படுதல்; இறுகுதல்; get a cramp.

குறத்தி பெ. (n.) திணைபுலம் காத்தல். வேட்டையாடல். தேனெடுத்தல் முதலியவற்றைத் தொழிலாகக்

கொண்ட குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்; woman ofthe kurava community or tribe.

குறவர் பெ. (n.) தேனெடுத்தல், விலங்குகளை, பறவைகளை வேட்டையாடுதல் முதலியவற்றைத் தொழிலாகக் கொண்ட குறிஞ்சி நில மக்கள்; anomadic community (known by the name of kurava).

குறவை பெ. (n.) பழுப்பு நிற மீன்; snake head.

குறளிப்பிசாசு பெ. (n.) மாய வேடிக்கை

செய்யக் கூடியதாகக் கூறப்படும் பேய்;

dwarf-demon capable of doing magical acts.

குறளிவித்தை பெ. (n.) மந்திரத்தால் செய்வதாகக் கூறப்படும் நுண்ணுத்தி வேடிக்கை; legerdemain; magical tricks. குறிக்கோள் பெ. (n.) அடைய நினைக்கும் குறி; நோக்கம்; goal; ideal; target; aim. *குறிக்கோள் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது என்று ஆசிரியர் கூறினார்.

குறிகேள்தல் வி. (v.) குறி சொல்பவரிடம் (ஒன்றைப் பற்றி) கேட்டு அறிதல்; consult a diviner. 'வீட்டிலிருந்து பணத்தை யார் எடுத்திருப்பார்கள் என்று குறி கேட்கப் போகிறேன்'. குறிசொல்தல் வி. (v.) எதிர்காலத்தைப் பற்றி அல்லது காணாமல் போன

பொருளைப் பற்றி ஏதேனும் ஓர் அடையாளத்தின் அடிப்படையில் கூறுதல்; divine. காளி கோயில் பூசாரி குறி சொல்வாராமே!.

குறிஞ்சி பெ. (n.) பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீல நிறப் பூப்பூக்கும் (மலைகளில் மட்டும் காணப்படும்) சிறு குத்துச் செடி; strobilanthus kunthianus. நல்ல திரைப்படங்கள் குறிஞ்சி பூப்பது போல எப்போதாவதுதான் வரு கின்றன. 2. மலையும் மலையை ஒட்டிய பகுதியும்; mountin and the place adjacent to it. Mountainous region; hilly tract.

குறித்தல் வி. (v.) 1. சுருக்கமாக எழுதுதல்; note down; jot down. அவர் சொன்னதையெல்லாம் குறித்துக் கொண்டாயா?. 2. பதிதல்; பதிவு செய்தல்; mark; note. 'கேள்விக்கான பதில்களை ஆசிரியர் புத்தகத்தில் குறித்துக் கொடுத்தார். 3. மணவுறுதி; முடிவுபடுத்தல்; fix (a date); appoint (an hour). கல்யாணத் தேதியும் குறித்தாகிவிட்டது'.

குறிப்பாக வி.அ. (adv.) முகாமையாக;

சிறப்பாக; particularly; (more) specifically; especially. 'நாட்டு மக்களின், குறிப்பாகக் சிற்றூர் மக்களின், உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் உருவாக்கப் பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட பெ.அ. (adj.) 1.பிரித்துச் சொல்லப்பட்ட; specified. குறிப் பிட்ட சில துறைகளுக்கு மட்டுமே இந்த ஆணைபொருந்தும்'. 2. முடிவு செய்யப்பட்ட; உரிய; oppointed. குறிப்பிட்ட நேரத்தில்தான் மருத்து வரை நீங்கள் பார்க்க முடியும்'. குறிப்பிடுதல் வி.(v.) 1.குறிப்பாக அல்லது முகாமையாகச் சொல்லுதல்; சுட்டிக்காட்டுதல்; make a specific mention of; indicate. 'தற்கால